Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.12.2024

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.12.2024


  



PDF LINK 

Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.12.2024

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்




திருக்குறள்:

"பால்: பொருட்பால்

அதிகாரம் : புல்லறிவாண்மை

குறள் எண்: 846

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

பொருள்:
தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்."

பழமொழி :
Call a spade a spade

உள்ளதை உள்ளவாறு சொல்.

இரண்டொழுக்க பண்புகள் : 

*புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்

*பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்

பொன்மொழி :

ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது..- ஆப்ரகாம் லிங்கன்

பொது அறிவு :

1. ஒருங்கிணைந்த கடல் உயிர்வாழ் பயிற்சி மையமானது எங்கு தொடங்கியுள்ளது?

விடை :  கோவா.       

2.  2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வணிகப் பெண்மணி விருதினை பெற்றவர் யார் ? 

   விடை: பினா மோடி

English words & meanings :

Lucky - அதிர்ஷடமான

Needy - தேவையுள்ள

வேளாண்மையும் வாழ்வும் :

திறனுள்ள கரிம பூச்சிக் கொல்லிகளில், வேம்பு, ஸ்பினோசாட், சோப்புகள், பூண்டு, நாரத்தை எண்ணெய், காப்சைசின் (விரட்டுப் பொருள்), பேசிலஸ் பொபில்லே , ப்யூவாரியா பாசியனா மற்றும் போரிக் அமிலம் ஆகியவை அடங்கும்.

டிசம்பர் 03

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (பன்னாட்டு ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.

உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன
நீதிக்கதை

பிரேக்குகள்

வகுப்பறையில் ஒரு நாள், இயற்பியல் ஆசிரியர் தனது மாணவர்களிடம்  "வாகனங்களில் ஏன் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளது?"என்று கேட்டார்.

"நிறுத்துவதற்கு",

"வேகத்தை குறைப்பதற்கு", "மோதலை தவிர்ப்பதற்கு" "மெதுவாக செல்வதற்கு"

"சராசரி வேகத்தில் செல்வதற்கு" என்று பல்வேறு பதில்கள் மாணவர்களிடமிருந்து கிடைத்தன.

ஒரு மாணவன் மட்டும் "வேகமாக ஓட்டுவதற்கு" என்று பதில் கூறினான். அவனைப் பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தேர்வு செய்யப்பட்டது. ஆசிரியர் "ஆம்! பிரேக்குகள் நாம் வேகமாக  செல்வதற்கு தான் வைக்கப்பட்டுள்ளன.உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்றால் நீங்கள் வேகமாக காரை ஓட்டுவீர்களா? நிச்சயமாக வேகமாக ஓட்ட மாட்டீர்கள் " என்று கூறினார்.

மேலும்,"பிரேக்குகள் இருப்பதால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு  வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.இதுபோலத்தான் நம் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள். தடைகள் வரும் பொழுது நமது வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து வருத்தப்படுகிறோம்.

உங்கள் வாழ்க்கையில் வரும் "பிரேக்குகள்" உங்கள் வேகத்தை குறைப்பதற்காக அல்ல. வேகமாக செல்வதற்காக தான்."பிரேக்குகள்" கொண்டு வேகமாகச் சென்றால், நாம் விரும்பிய இலக்கை விரைவில் அடையலாம்" என்றும் கூறினார்.

இன்றைய செய்திகள்

03.12.2024

* ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

* மதுரை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக டிசம்பர் 9-ல் பேரவையில் தனித் தீர்மானம்: சபாநாயகர் அப்பாவு தகவல்.

* நீர்வழி சுற்றுலா திட்டம் மூலம் 2029-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்.

* சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை கொண்டு வர திட்டமிட்டால் பிரிக்ஸ் நாடுகளின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை.

* சர்வதேச பேட்மிண்டன் போட்டி:  சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.


* செஸ் தரவரிசை புள்ளி:  சாதனை படைத்த இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி.

Today's Headlines

* The Electricity Board has announced that the deadline for paying electricity bills without penalty in the 6 districts affected by Cyclone Fanjal - Villupuram, Cuddalore, Kallakurichi, Dharmapuri, Krishnagiri and Tiruvannamalai - has been extended till December 10.

* Separate resolution in the Assembly on December 9 against the Madurai tungsten mine: Speaker Appavu informed.

* The Union Minister of Ports, Shipping and Water Transport informed that a target has been set to attract 10 lakh passengers by 2029 through the water tourism project.

* US President Donald Trump has warned that a 100 percent tax will be imposed on BRICS countries if they plan to introduce a new currency to replace the dollar in international trade.

* International badminton tournament: Indian player P.V. Sindhu won the championship title.

* Chess ranking point: Indian player Arjun Erikaisi created a record.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers