Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2024

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2024





 
அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்


திருக்குறள்:

"பால் :பொருட்பால்
அதிகாரம் :தீ நட்பு
குறள் எண்:813

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.

பொருள்: கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலைமகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்."

பழமொழி :

"A light heart lives long.

மகிழ்ச்சியான மனமே நீண்ட காலம் வாழ்கிறது."
இரண்டொழுக்க பண்புகள் : 

*மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன்.

* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே  நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.

பொன்மொழி :

ஒரு செயலை செய்யும் போது உண்டாகும் தடை, அடுத்த முயற்சிக்கான ஆரம்பம் - ஐன்ஸ்டீன்.

பொது அறிவு :

1. எந்த உலோகத்தின் உப்புகள் சூரிய ஒளியால் பாதிக்கப்படுகின்றன ?

வெள்ளி .

2.விண்வெளிக்கு முதல் முதலில் சென்ற பெண் நாயின் பெயர் என்ன ?

லைகா.

English words & meanings :

Pepper-மிளகு,

Poppy Seed-கச கசா

வேளாண்மையும் வாழ்வும் :

விவசாயம் சார்ந்த கால்நடை வளர்க்கும் பண்ணைகள் முயல் மசால், வேலிமசால் போன்ற தழைச் சத்தை வெளியிடும் கால்நடைத் தீவனப் பயிர்களைப் பயிரிடுவதாலும் மண்ணின் வளம் அதிகரிக்க உதவுகின்றன.

நவம்பர் 14

ஜவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889 – மே 27, 1964), இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக "விதியுடன் ஒரு போராட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951 இல் வரைந்தார். இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார்
நீதிக்கதை

தன்வினை தன்னைச் சுடும்

அது ஒரு கடும் குளிர்கால காலைப்பொழுது காடு முழுவதும் பனி பெய்திருந்தது. எல்லா இடங்களுமே அடர்த்தியாக பெய்திருந்த பனியால் பளிச்சென்று வெண்மையாக காட்சியளித்தன. எல்லா பறவைகளும், விலங்குகளும் தம் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தன. எதற்குமே இறை கிடைக்கவில்லை பசியோடு இருந்தன. மேலும் வெளியே மிகக் குளிராக இருந்ததால் அவை உள்ளேயே முடங்கி கிடந்தன.

ஆனால் அவற்றுள் ஒரு பிராணிக்கு தூக்கமே வரவில்லை. அது ஒரு வெட்டுக்கிளி. அதிகமாக சத்தம் எழுப்பும் பிராணி அது. எல்லா உயிரினங்களுமே தூங்கிக்  கொண்டிருந்ததால் அதற்கு பொழுது போகவில்லை. வெளியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க அது விரும்பியது.

வெளியே வந்தவுடன் காடு முழுவதும் வெண்மையாக இருப்பதைக் கண்டது.

தூங்குபவர்களை  எல்லாம் எழுப்ப எண்ணி, சத்தமாக பாடத் தொடங்கியது. தன் கால்களை ஒன்றோடு ஒன்று தேய்த்து பாட்டுக்கு தாளம் போட்டு உல்லாசமாக இருந்தது.

அந்த மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த ஒரு பொந்தில் ஓர் ஆந்தை வாழ்ந்து வந்தது. கடும் குளிராக இருந்ததால் இத்தனை நாட்களாக அது தூங்கிக் கொண்டிருந்தது. வெட்டுக்கிளியின் சத்தமான பாட்டை கேட்டு ஆந்தை கண் விழித்தது. “யார் இந்த சத்தமாக பாடும் பிராணி, என் குளிர்கால தூக்கத்துக்கு இடையூறாக இருப்பது?” என்று ஆந்தை தனக்குள் கேட்டுக் கொண்டது.

பொந்திலிருந்து தலையை நீட்டி ஆந்தை வெளியே பார்த்தது. அந்த மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்தவாறு வெட்டுக்கிளி ஆனந்தமாக பாடிக் கொண்டிருந்தது. தன் தூக்கத்திற்கு இடையூறு செய்த வெட்டுக்கிளி மீது ஆந்தைக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

பாடிக்கொண்டிருக்கும் வெட்டுக்கிளியை சத்தமில்லாமல் ஆந்தை நெருங்கியது. தன்னுடைய அலகால் அந்த முட்டாள் வெட்டுக் கிளியை பிடித்தது.

எல்லா பிராணிகளைப் போல வெட்டுக்கிளியும் தன் இருப்பிடத்திலேயே குளிர்காலம் முழுவதும் இருந்திருந்தால் அனாவசியமாக பிடிபட்டு இருக்காது.

இன்றைய செய்திகள்

14.11.2024

* தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

* விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களை பாதுகாக்கும் பொறுப்பையும், விஐபிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பையும் புதிதாக உருவாக்கப்படும் பெண்கள் சிஐஎஸ்எஃப் ஏற்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

* உலக தலைவர்கள் பங்கேற்கும், 2 நாள் பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாடு (சிஓபி29 - COP29) அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நவம்பர் 11 தொடங்கி வரும் 22 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

* ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி; இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்திய ஜன்னிக் சின்னெர்.

* ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில்  பாகிஸ்தான் வீரர்கள் முதலிடத்தில் உள்ளனர்: ஐ.சி.சி. தரவரிசை பட்டியல் வெளியீடு.

Today's Headlines

* The Chennai Meteorological Department has announced that heavy rain is likely in 21 districts of Tamil Nadu today.

* Union Home Minister Amit Shah has said that the newly formed all-women CISF will be responsible for guarding airports, metro stations and providing security to VIPs.

* The 2-day Climate Action Summit (COP29) is being held in Baku, Azerbaijan from November 11 to the 22nd, where world leaders will participate.

* Men's Tennis Championship;  Jannik Sinner defeated Taylor Britts in today's match.

* Pakistan players top ODI rankings: ICC  Publication of rank list.
Prepared by

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers