Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.10.2024
PDF link
Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.10.2024
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம்: நட்பு ஆராய்தல்
குறள் எண்:796
கேட்டினும் உண்டுஓர் உறுதி இளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல் .
பொருள்:கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.
பழமொழி :
விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.
Perseverance kills the game.
இரண்டொழுக்க பண்புகள் :
*தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.
*தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.
பொன்மொழி :
கல்வி என்றால் ஏதோவொரு சான்றிதழைப் பெறுவது அல்ல, உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்வது.-----சத்குரு
பொது அறிவு :
1. மழைக்காலங்களில் ஒப்புமை ஈரப்பதத்தின் அளவு
விடை : 100%.
2. நரம்பு மண்டலத்தின் அலகு
விடை: நியூரான்
English words & meanings :
curt-வெடுக்கென்று,
risk- விறுவிறுப்பான
வேளாண்மையும் வாழ்வும் :
வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும்.
அக்டோபர் 07
நீல்ஸ்போர் அவர்களின் பிறந்தநாள்
நீல்ஸ் என்றிக் டேவிட் போர் (Niels Henrik David Bohr, IPA: [/nels ˈb̥oɐ̯ˀ/], அக்டோபர் 7, 1885 - நவம்பர் 18, 1962) இயற்பியல் துறையில், குறிப்பாக அணுவியலில், அடிப்படை கருத்தாக்கங்கள் தந்த புகழ்மிக்க டென்மார்க் அறிவியலாளர்.அணுவில் எலக்ட்ரான்களின் இயக்கங்களை, அதன் தன்மைகளைக் கண்டறிந்து அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தவர். இவர் இயற்பியலுக்காக 1922 இல் நோபல் பரிசு பெற்றார். 20 ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் மற்றும் பல அறிஞர்களோடு தான் வாழ்ந்த டென்மார்க்கின் கோப்பனாஃகனில் அறிவியல் கூட்டாய்வாளராக இருந்தார். ஐன்ஸ்டைனுடன் இவர் நிகழ்த்திய குவாண்ட்டம் கருத்தியம் பற்றிய கருத்துப்போர் புகழ்பெற்றது. 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் அறியப்படுகின்றார்
நீதிக்கதை
புத்திசாலி சேவல்
ஒரு கிராமத்தில் சேவல் ஒன்று மரத்தின் கிளையில் அமர்ந்து இருந்தது. அது காலையில் தன் குரலில் கூவி எல்லாரையும் எழுப்பி விட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு நரி மரத்தின் அருகில் வந்து அந்த சேவல் இடம், “ஹலோ, நண்பா எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டது.
சேவல் குனிந்து கீழே பார்த்தபோது அந்த நரி மரத்தின் அருகில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த சேவல் நினைத்தது, “நான் இவனிடம் கவனமாக இருக்க வேண்டும் இவன் தந்திரமான நரி என்னுடைய நண்பர்கள் பலரையும் கொன்று சாப்பிட்டுள்ளான். எனவே நான் தான் என்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்று எண்ணியது.
சேவல் அந்த நரியை கண்டுகொள்ளாமல் இருந்தது. ஆனால் அந்த நரி சேவலிடம் மீண்டும் பேச முயற்சித்தது. நரி சேவலிடம் சொன்னது, “நான் உனக்கு நல்ல விஷயம் ஒன்றை சொல்ல தான் வந்துள்ளேன். நம் காட்டில் ராஜாவாகிய சிங்கம் ஒரு புது கட்டளை பிறப்பித்துள்ளது”.
நரி சொன்னதை அந்த சேவல் நம்பவில்லை ஆனாலும் அது என்னவாயிருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அப்போது சேவல் நரியிடம், “சரி மகராஜா என்ன கட்டளை தான் பிறப்பித்துள்ளார்? ” என்று கேட்டது. அதற்கு நரி சொன்னது, “இந்த காட்டில் உள்ள நாம் அனைவரும் ஒன்றாக நண்பர்களாக பழக வேண்டும். எந்த ஒரு சண்டையும் வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் நண்பர்களாக இருக்க வேண்டும்”. இதுதான் சிங்கராஜாவின் கட்டளை என்றது அந்த நரி.
அதற்கு சேவல், “அப்படியா இது உண்மையா” என்று கேட்டது. நரியும், “ஆமாம் உண்மைதான்” என்றது. அதுமட்டுமல்ல சிங்கராஜா இன்று நமக்காக அவருடைய குகை அருகில் உணவு ஏற்பாடு செய்துள்ளார். எனவே நாம் சேர்ந்து சென்று நம் உணவை அருந்திவிட்டு வரலாம்,என்றது நரி.
அப்போது அங்கே நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது .அந்த சத்தம் கேட்டதும் நரியின் முகத்தில் ஒரு பயம் தெரிந்தது. அதைப்பார்த்த சேவலுக்கு நரிக்கு நாய்கள் என்றால் பயம் என்று புரிந்தது. நாய்கள் எப்போதும் நரியை பார்த்தால் விரட்டி கொண்டே இருக்கும். அதனால் நரிக்கு நாய் என்றால் பயம்.
நரி சேவலிடம் சொன்னது, “நண்பா நீ மரத்தின் கிளையில் தானே இருக்கிறாய் அருகில் ஏதாவது நாய் தென்படுகிறதா?” என்று கேட்டது. சேவல் சுத்திமுத்தி பார்த்தது அங்கே எந்த நாயும் இல்லை. ஆனால் நரிக்கு ஒரு பயம் காட்ட வேண்டும் என்று எண்ணிய சேவல், “ஒரு கூட்டமாக நாய்கள் இங்கேதான் ஓடி வந்து கொண்டிருக்கின்றன” என்றது.
அதைக்கேட்ட நரியோ அப்படியா, “அப்போது நான் இங்கே இனிமேல் இருப்பது சரியில்லை” என்று பயத்தில் ஓட ஆரம்பித்துவிட்டது. நரி மிகவும் வேகமாக பயந்து ரொம்ப தூரம் ஓடி விட்டது. அப்போது சேவல் நரி ஓடுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தது.
நீதி : அடுத்தவருக்கு தீமை நினைத்தால் அது நமக்கே தீமையாக வந்து முடியும்.
இன்றைய செய்திகள்
07.10.2024
* தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதற்காக 4 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரித்துள்ளார்.
* விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
* பொக்ரானில் குறுகிய தூர வான் இலக்குகளை தாக்கும் 3 ஏவுகணைகள் சோதனை வெற்றி.
* ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவ்.
* ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர், மோகன் பகான் அணிகள் வெற்றி.
Today's Headlines
* Health Minister M. Subramanian has announced that 4 new programs have been launched to bring the maternal and child mortality to zero in Tamil Nadu.
* On the occasion of Air Force Day, the biggest air adventure event at Marina Beach in Chennai ended on a grand scale yesterday. This event is also included in the Limca Book of Records.
* 3 missiles hit short-range air targets successfully tested in Pokhran.
* Shanghai Masters Tennis Series: Russian Daniil Medvedev advances to 4th round.
* Jamshedpur and Mohan Baghan won today's ISL football match.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment