Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.09.2024

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.09.2024



இதன்  PDF பெற

Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.09.2024

சம இரவு நாள்



திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம் :நட்பு

குறள் எண்:790

இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்என்னும் நட்பு.

பொருள்: இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும்.

பழமொழி :
Blessed are the meek: for they shall inherit the earth.

பொறுத்தார் பூமி ஆள்வார்.

இரண்டொழுக்க பண்புகள் : 

1. பொறுமை கடலை விடப் பெரியது. எனவே நான் எப்போதும் பொறுமையை கடைப்பிடிப்பேன்.

  2. சண்டை போடுவதால் பிறர் மனம் புண்படும். ஆதலால் என்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சண்டை போட மாட்டேன்.

பொன்மொழி :

வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துபார் ,நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய். ------ஹிட்லர்

பொது அறிவு :

1. மூளைக் காய்ச்சல் நோயைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகிப்பவை -

விடை : பன்றி.

2. HIV வைரஸின் வடிவம் -

விடை : கோள வடிவம்

English words & meanings :

prevail-மேம்படு,

excist-உயிர் வாழ்
வேளாண்மையும் வாழ்வும் :

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

செப்டம்பர் 21

சம இரவு நாள்

சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ(equi) எனபது சமம் என்றும் நாக்சு(nox) என்பது இரவு என்றும் பொருள்படும். சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 21அன்றும் இவை நிகழும். இந்த வருடம் செப்டம்பர் 23 ஆம் தேதி சம இரவு நாள் ஆகும்.

உலக அமைதி நாள்

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் முன்னர் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.ஆனாலும் 2002-இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

நாணயம்

ஒரு நாள் கிராமத்தில் வசித்த ஏழை ஒருவர், தெருவில் நடந்து சென்ற பொழுது அவருக்கு மையத்தில் பெரிய துளையுடன் இருந்த பழங்கால நாணயம் ஒன்று கிடைத்தது.

அக்காலத்தில் துளையிட்ட காசு கிடைத்தால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. எனவே,அவரும்  "எனக்கு இனி அதிர்ஷ்டம் தேடி வரும் நானும் பணக்காரனாகி விடுவேன்" என்று நினைத்தார். அதை தனது சட்டை பையில் போட்டு பத்திரப்படுத்திக் கொண்டார்.

அன்று அவருக்கு மற்ற நாட்களை விட அதிகமான வருமானம் கிடைத்தது. எல்லாம் அந்த நாணயம் கிடைத்த நேரம் என்று நினைத்தார்.

அன்றிலிருந்து அவர் தினமும் தன்னுடைய நாணயத்தை அவ்வப்போது தொட்டுப் பார்த்துக் கொள்வார். வெளியில் எடுக்கவே மாட்டார். சில ஆண்டுகளில் அவருக்கு பதவியும் பணமும் அதிகமாகவே வந்து சேர்ந்தது.

அவர்  தனது மனைவியிடம் "அந்த நாணயத்தை கண்ணால் பார்க்க வேண்டும் போல் உள்ளது" என்று கூறியபடி தனது சட்டைப் பையில் பத்திரப்படுத்தி இருந்த நாணயத்தை எடுத்துப் பார்த்தார்.

அந்த நாணயத்தின் மையத்தில் துளையே இல்லை.   என்னவாயிற்று? என்று கேட்டார்.

அதற்கு அவரது மனைவி "சட்டை அழுக்காக இருந்ததால், அதை துவைக்க எண்ணி எடுத்து போது   நாணயம் தவறுதலாக தெருவில் விழுந்து விட்டது.எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனால் நான் தான் வேறொரு நாணயத்தை  சட்டை பைக்குக்குள் போட்டு வைத்தேன் என்றார்.

"இது எப்போது நடந்தது?" என்று அவர் கேட்டார். அதற்கு அவரது மனைவி தங்களுக்கு நாணயம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் நடந்தது என்றார்.

அதன் பின் அவர் யோசித்தார். அப்படியானால் நமக்கு அதிர்ஷ்டம் கொடுத்தது அந்த நாணயம் அல்ல. நமது நம்பிக்கையும், உழைப்பும் தான் என்று எண்ணி மகிழ்ந்தார்.

நீதி: நமது உழைப்பு, தன்னம்பிக்கை  மட்டுமே நமக்கு வெற்றியைத் தேடித் தரும்.

இன்றைய செய்திகள்

21.09.2024

* பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

* தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வழக்கத்துக்கு மாறாக வெயில் சுட்டெரித்து வருவதால், தினசரி மின் தேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை, நிபா வைரஸ் பாதிப்பில்லை: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்.

* பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுக்கு 4.20 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்.

* செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆண்கள் அணி 8-வது வெற்றி.

* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஐதராபாத்தை வீழ்த்திய பெங்களூரு எப்.சி. அணி.

Today's Headlines

* Chief Minister Stalin has issued an order doubling the amount of assistance given to differently-abled students studying in schools and colleges.

* The daily electricity demand has increased by 30 percent due to unusually hot weather in most places across Tamil Nadu.

* Tamil Nadu has no cases of monkeypox or Nipah virus so far: Director of Health informed.

* 4.20 lakh deaths per year due to unsafe food: World Health Organization shock data.

* Chess Olympiad: Indian Men's Team records its 8th victory.

* ISL  Football series: Bengaluru FC beat Hyderabad  Team.
Prepared by

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers