Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.09.2024
Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.09.2024
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம் : நட்பு
குறள் எண்:789
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்புன்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
பொருள் :நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
பழமொழி :
No rain, no grains
மாரியல்லாது காரியமில்லை
இரண்டொழுக்க பண்புகள் :
1. பொறுமை கடலை விடப் பெரியது. எனவே நான் எப்போதும் பொறுமையை கடைப்பிடிப்பேன்.
2. சண்டை போடுவதால் பிறர் மனம் புண்படும். ஆதலால் என்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சண்டை போட மாட்டேன்.
பொன்மொழி :
எதிர்காலத்தைப் பற்றி பயம் கொள்ள வேண்டாம். அதை உருவாக்கத்தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.-----பராக் ஓபாமா
பொது அறிவு :
1. பென்சில் தயாரிக்கப் பயன்படுவது
விடை : கிராபைட்
2. விவசாயத்திற்கு மிகவும் ஏற்றமண்
விடை : கரிசல் மண்
English words & meanings :
obtain-பெறுதல்,
acquire-பெறுதல்
வேளாண்மையும் வாழ்வும் :
இதனை உணர்ந்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்…
நீதிக்கதை
மகன் தந்தையிடம்,தனக்கு ஏதேனும் துன்பமோ, மனக்கவலையோ வரும்போது வந்து கலங்கி நிற்பான். அப்போது அவனது பிரச்சினையை கேட்டபின் தந்தை "இவ்வளவுதானா? உன் பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும் போ" என்பார்.
அவனுக்கும் சில நாட்களில் அந்தப் பிரச்சனையோ அந்த துன்பமோ காணாமல் போய்விடும். மகனும் வளர்ந்தான்.
தந்தைக்கும் வயதானது.
தற்போதும் மகன் தனது பிரச்சனையை அவனுடைய தந்தையிடம் சொல்லும் போதும் அவர் அதே பதிலைத்தான் திரும்ப கூறினார்
ஒரு நாள் மகன் தந்தையிடம் "ஏம்பா நான் எத்தனை பெரிய பிரச்சனை பற்றி தங்களிடம் கூறினாலும் இவ்வளவுதானா? என்று தாங்கள் கூற எனக்கும் பிரச்சனை சுலபமாக முடிந்து விடுகிறது எப்படி அப்பா?"என்று கேட்டான்.
தந்தை சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்."உன் சிறு வயதில் பிரச்சினையைக் கண்டு பயந்து என்னிடம் கூறுவாய். அப்போது அந்த பிரச்சனையை தீர்க்கக் கூடிய வழி உனக்கு தெரியாது. ஆனால் நான் இவ்வளவுதானா? என்று கேட்கும்போது, உன் மனம் இது ஒரு பிரச்சனையே அல்ல என்று முடிவுக்கு வந்துவிடும். பிரச்சனையும் முடிந்துவிடும்.
தற்போது நீ பெரியவனாக வளர்ந்த பின்பு ஒரு பிரச்சனைக்குரிய தீர்வை காணும் ஆற்றல் உனக்கு உண்டு. எனவே, நான் இவ்வளவுதானா? என்று கூறும்போது அந்தப் பிரச்சனையை உன் மனம் தீர்வை நோக்கி கொண்டு செல்கிறது.
பிரச்சனையும் தீர்ந்து விடுகிறது".
நீதி:
நாம் எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும்,
ஒரு நிமிடம் இவ்வளவா? என்று மனதில் நினைத்தால் நமது முன்னேற்றம் அங்கேயே நின்று விடும். ஆனால் இவ்வளவுதானா? என்று யோசித்தால் நாம் அதை தாண்டி, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று விடலாம்.
இன்றைய செய்திகள்
20.09.2024
* ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறும்: சென்னையில் 650 பேர் பங்கேற்பு.
* தமிழகத்தில் பிளே ஸ்கூல் விதிமுறைகளை செயல்படுத்த இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு.
* கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 175 பேருக்கு பாதிப்பு: நிபா வைரஸ் காய்ச்சல் பரவலால் பள்ளி, கல்லூரிகள் மூடல்.
* குழந்தைகளுக்கான ‘என்பிஎஸ் வாத்சல்யா’ ஓய்வூதிய திட்டம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
* புதிய எக்ஸ்இசி வகை கரோனா 27 நாடுகளில் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவும் இந்த கரோனா வகை, விரைவில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய கரோனா திரிபாக மாறலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
* செஸ் ஒலிம்பியாட்: 7-வது சுற்றில் இந்தியா வெற்றி.
* சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி : இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.
Today's Headlines
* Civil Services Mains Exam for IAS, IPS Posts to be held from today till 29th: 650 candidates will take the exam in Chennai.
* Interim stay on implementation of play school regulations in Tamil Nadu: High Court orders.
* 175 affected in Kerala's Malappuram district: Schools, colleges closed due to spread of Nipah virus fever.
* 'NBS Vatsalya' Pension Scheme for Children: Union Finance Minister Nirmala Sitharaman launched.
* The new XEC strain of Corona has spread to 27 countries. Scientists have warned that this type of corona, which is spreading rapidly in European countries, may soon become a dominant corona mutant.
* Chess Olympiad: India Won Round 7
* China Open Badminton Tournament: Malvika Bansod of India advances to the next round.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment