Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2024

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2024



இதன்  PDF  பெற

Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2024

திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:446

தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல்.

பொருள்: தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்கவல்ல ஒருவனுக்கு, அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.

பழமொழி :
அலைகடலுக்கு அணை போட முடியுமா?

Against God’s wrath no castle is proof

இரண்டொழுக்க பண்புகள் :

*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.

பொன்மொழி :

" யார் சொல்லியிருந்தாலும், எங்குப் படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே"-----தந்தை பெரியார்

பொது அறிவு :

1. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்  யார்?

டாக்டர் முத்துலட்சுமி

2.இந்தியாவின் முதல் சபாநாயகர் யார்?

ஜி.வி.மவ்லாங்கர்

English words & meanings :

greet-வாழ்த்து,

compliment-பாராட்டு
வேளாண்மையும் வாழ்வும் :

ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய்தால், தை மாதத்தில் அறுவடை செய்யலாம். பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளியும், பிராண வாயுவும், நல்ல மழையும் கிடைத்து, விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையைக் கொடுக்கும்.

ஆகஸ்ட் 07

இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் நினைவுநாள்


இரவீந்தரநாத் தாகூர்

இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார்.[1][2] 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். [3] இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவுநாள்

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.

இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.

நீதிக்கதை

நன்றியுணர்ச்சி

வேடன் ஒருவன் வேட்டையாட சென்றான். அவன் விரித்த  வலையில் வழி அறியாமல் வந்த கழுகு ஒன்று மாட்டிக்கொண்டது.

அவன் அந்த கழுகை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதனுடைய இறக்கைகளை வெட்டிவிட்டு சங்கிலியால் மரத்தில் கட்டி போட்டான்.

அந்த வழியாகச் சென்ற இரக்கம் உள்ள ஒருவர்,  வேடனிடம்  கழுகை காப்பாற்ற எண்ணி வேடனிடம் விலை கொடுத்து கழுகை  தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

புதிய இறக்கைகள் முளைக்கும் வரை பாதுகாப்போடு வளர்த்து வந்தார். புதிய இறக்கைகள் முளைத்த உடன் அதனை காட்டுக்குள் செல்ல அனுமதித்தார்

காட்டுக்குள் சென்ற கழுகு ஒரு முயலை பிடித்து வந்து தனது நன்றியுணர்ச்சியை காண்பிப்பதற்காக தன்னை காப்பாற்றியவருக்கு பரிசாக வழங்கியது.

அதனைப் பார்த்த நரி கழுகிடம் "முயலைப் பிடித்து சென்று வேடனிடம் கொடுத்திருந்தால் மற்றொரு முறை உன்னை  வேட்டையாட மாட்டார்" என்று கூறியது.

அதற்கு கழுகு "அவர் எத்தனை முறை வந்தாலும் என்னை வேட்டையாட வருவார். ஏனெனில்  வேட்டையாடுதல் அவருக்கு தொழில். நான் எனது நன்றியுணர்ச்சியை காண்பிப்பதற்காகவே என்னை காப்பாற்றியவருக்கு பரிசளித்தேன்" என்று கூறியது.

இன்றைய செய்திகள்

07.08.2024

☘️போலி மருத்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

☘️‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ விழிப்புணர்வு பிரச்சார திட்டம்: நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் அறிமுகம்.

☘️கோவையில் இந்தியா - ஜெர்மனி கூட்டுப் போர் பயிற்சி: இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகள் பங்கேற்பு.

☘️வங்கதேசத்தில் திடீர் ராணுவ ஆட்சி: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்.

☘️ஈரானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயார்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு.

☘️பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்; இந்தியாவின் வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

☘️பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

☘️வங்காளதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் டி20 உலக கோப்பை வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம் என்று  தகவல் வெளியாகி உள்ளது.

Today's Headlines

☘️Court orders Tamil Nadu government to crack down on fake doctors with an iron fist.

☘️'Zero Accident Day' Awareness Campaign: Launched in Chennai for the first time in the country.

☘️ India-Germany Joint War Exercise in Coimbatore: England, Spain, France countries also took part.

☘️ Sudden military rule in Bangladesh: Prime Minister Sheikh Hasina who resigned  took refuge in India.

☘️ Ready to face any attack by Iran: Israeli Prime Minister Netanyahu announced.

☘️Paris Olympic Wrestling;  India's Vinesh Bhoga advances to semi-finals.

☘️India's Neeraj Chopra qualified for the final round of javelin at the Paris Olympics.

☘️ It has been reported that the Women's T20 World Cup scheduled to be held in Bangladesh may be shifted to another country.
Prepared by

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers