Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.08.2024
இதன் PDF பெற
Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.08.2024
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம்: காலம் அறிதல்
குகள் எண்:482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.
பொருள்: காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ,(நில்லாத இயல்புடைய) செல்வத்தை நீங்காமல் நீக்குமாறு கட்டும் கயிறாகும்.
பழமொழி :
அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறி
A friend in need is a friend indeed.
இரண்டொழுக்க பண்புகள் :
*இறைவனின் படைப்பில் அற்புதமானது மனித வாழ்க்கை .எனவே, என் உடலுக்கும், உயிருக்கும் தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருளையும் பயன்படுத்த மாட்டேன்.
*குழந்தைகளை வழிதவறச் செய்யும் பாக்கு, புகையிலை போன்றவற்றை பயன்படுத்த மாட்டேன்.
பொன்மொழி :
ஆசிரியர்கள் கதவைத் திறக்கிறார்கள், ஆனால் நீங்கள்தான் உள்ளே செல்ல வேண்டும். –சீன பழமொழி
பொது அறிவு :
1. ஜிங்க் சல்பேட் என்ற சேர்மத்தில் உள்ள கார தொகுதி எது?
விடை: ஜிங்க் அயனி
2. சுங்கம் தவிர்த்த சோழன் என பெயர் பெற்ற மன்னன்?
விடை: முதலாம் குலோத்துங்க சோழன்
English words & meanings :
rapid- விரைவான,
brisk-விறுவிறுப்பான
வேளாண்மையும் வாழ்வும் :
இப்படி மண் வளத்தைப் பாதுகாக்கும் சிறு பூச்சிகள் முதல் பயிர்களை காக்கும் சூரியன் வரை ஆற்றலாக செயல்படுவதால், இம்மாதம் விளைச்சலுக்கு ஏற்ற மாதமாக ஆயிற்று.
ஆகஸ்ட் 14
பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினம்
நீதிக்கதை
சிங்க அரசனுக்கு ஏற்பட்ட ஆபத்து
காட்டில் வயதான பலம் இழந்த ஒரு சிங்கம் இருந்தது. அதுதான் அக்காட்டுக்கு அரசன், அதற்கு பலம் இல்லாததால் எல்லா மிருகங்களையும் கூப்பிட்டு அவரவரிடம் பல பணிகளை செய்யுமாறு கட்டளையிடும்.
சிங்கத்தின் உடலை கவனிக்க வேண்டிய பொறுப்பு காக்கையிடமும்; சிங்கத்திற்கு தேவையான உணவை சுமந்து வரும் பணி கழுதையிடமும் கொடுக்கப்பட்டிருந்தது. கழுதைக்கு உணவை சுமப்பது மிக கடினமான வேலையாக இருந்தது. ‘ சுண்டெலி சிங்க ராஜாவின் அரசவை விகடகன். சிங்கத்தை மகிழ்ச்சியாக வைக்க வேண்டியது அதனுடைய பணியாகும்.
நரி சிங்கத்திற்கு ஆலோசகராக இருந்தது. காடு சம்பந்தமான எல்லா விஷயங்களிலும் நரிதான் சிங்கத்திற்கு வழிகாட்டியாக இருந்தது. நரி எப்போதும் சிங்கத்தைப் புகழ்ந்து பேசும். ஆனால் தனக்கு வேண்டியதை சிங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளும். ஆனால் மற்ற மிருகங்கள் சிங்கத்தின் கொடிய ஆட்சியின் கீழ் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தன.
ஒரு நாள் காட்டு மிருகங்கள் எல்லாம் ரகசியமாக சந்தித்தன. ஆனால், வஞ்சக புத்தியுள்ள நரி சிங்கத்திடம் சென்று அந்த மிருகங்கள் சந்தித்ததையும் அவர்கள் விவாதித்ததையும் கூறியது.
உடனே சிங்கம் எல்லாம் மிருகங்களையும் அழைத்தது, “என்னை அரியனையில் இருந்து நீக்குவதற்கு திட்டமிட நீங்கள் ரகசியமாக சந்தித்ததாக நான் கேள்விப்பட்டேனே. சதி செய்தவர்கள் யார்?” என்று கோபமாக கேட்டது.
எல்லா மிருகங்களும் பயந்து நடுங்கின. யாரோ ஒரு துரோகி தங்களை காட்டிக் கொடுத்ததை அவை உணர்ந்தன. பெரிய தண்டனையை எதிர்பார்த்து நடுங்கியவாறு அவை எழுந்து நின்றன. “எல்லா மிருகங்களையும் கொன்றுவிடுங்கள்,” என்று சிங்கம் கர்ஜித்தது. எல்லா மிருகங்களும் அமைதியாக இருந்தன.
திடீரென்று கிரீச்சென்று ஒரு குரல் கேட்டது. அது அந்த சுண்டெலியின் குரல். “இது நியாயம் அன்று” என்று கத்தியது.
“நீதியை நிலை நாட்டுங்கள்,” என்று கத்தியது தவளை.
“ஆம், அது தான் சரி,” என்று யானைகள் சத்தமாகப் பிளிறின. எல்லாம் மிருகங்களும் ஒன்றாக சேர்ந்து “சிங்கம் ஒழிக,” என்று கூச்சலிட்டன.
சிங்கம் மிகவும் வியப்படைந்தது. என்ன செய்வதென்று அதற்கு தெரியவில்லை. அவசர அவசரமாக நரியை கலந்தாலோசித்தது. நரியால் ஒரு தீர்வும் சொல்ல முடியவில்லை. நரியின் மீது சிங்கத்திற்கு கோபம் உண்டாயிற்று. தனக்கு ஆபத்து நேரிடும் என்பதை உணர்ந்து கொண்ட நரி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
இதற்கிடையில் எல்லா மிருகங்களும் சிங்கத்தை நோக்கி நகர்ந்து அதை சுற்றி வளைத்துக் கொண்டன. சிங்கத்திற்கு பயம் ஏற்பட்டது. வலிமை இல்லாததால் சிங்கத்தால் அந்த மிருகங்களை தாக்க முடியவில்லை.
எல்லாம் மிருகங்களுமாக ஒன்று சேர்ந்து சிங்கத்தை தாக்கின; கொடிய சிங்கத்தை அவை கொன்று போட்டன.
அன்றிலிருந்து அந்த மிருகங்கள் யாரைக் கண்டும் பயப்படுவதில்லை. அவை எல்லாம் ஒன்று கூடி அமைதியாக வாழ்ந்தன.
நீதி : கொடுமை சீரழிவைத் தரும்!
இன்றைய செய்திகள்
13.08.2024
* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக, வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
* தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 15 புதிய முதலீடுகள், பசுமை எரிசக்தி சார்ந்த 3 புதிய கொள்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
* என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் 6-வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்: சிறந்த மாநில பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு.
* மனை, கட்டிட மேம்பாட்டாளர்கள் திட்ட பதிவுக்கு இ-சேவை வசதி: ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகம்.
* ஆன்லைன் கிரியேட்டர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒளிபரப்பு சேவைகள் மசோதாவுக்கான சமீபத்திய வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
* வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் காரணமாக மூடப்பட்ட அனைத்து தொடக்கப்பள்ளிகளும் சுமார் ஒரு மாதத்துக்கப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளன.
* ஹாக்கி சர்வதேச தரவரிசை பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா.
* நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி; ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸி பாபிரின்னும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
Today's Headlines
* SK Prabhakar, an IAS officer who is the Commissioner of Revenue Administration, has been appointed as the Chairman of the Tamil Nadu Public Service Commission (TNPSC).
* 15 new investments and 3 new policies related to green energy were approved in the Tamil Nadu cabinet meeting.
* IIT Chennai tops in NIRF ranking list for 6th time: Anna University is selected as best state university
* E-service facility for land and building project registration: Regulatory Commission is introduced for this.
* The Central Government has withdrawn the latest draft of the Broadcasting Services Bill to regulate online creators.
* All primary schools in Bangladesh, which were closed due to student protests, will reopen today after about a month.
* India moved up to the 5th position in the hockey international rankings.
* National Bank Open Tennis Tournament; Australia's Alexei Babin in men's singles and women's singles USA's Jessica Pegula also won the champion title.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment