Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.07.2024

Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.07.2024


இதன்  PDF பெற 

Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.07.2024

திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்:கேள்வி

குறள் எண்:420

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?
பொருள்: செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள்,
இறந்தாலும் என்ன? உயிரோடு வாழ்ந்தாலும் என்ன?

பழமொழி :
A tree is known by its fruit

நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.என்னை விட வயதில் மூத்தோரை மரியாதையுடன் நடத்துவேன். என்னால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்வேன்.

2.என்னை விட இளையோரிடம் அன்பாக நடந்து கொள்வேன்.
அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன்.
பொன்மொழி :

சில சமயம் வெற்றி பெறுவது கூட எளிதுதான். ஆனால் அதைத் தொடர்ந்து தக்க வைப்பதுதான் மிகக் கடினம்.

பொது அறிவு :

1. ஊறுகாய் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப் பயன்படுவது?


விடை: சோடியம் பென்சோயேட்

2. இந்தியா முதன் முதலில் அனுப்பிய ஆளில்லா செயற்கை கோள் எது?

விடை: சந்திராயன் -1

English words & meanings :

Establish-ஸ்தாபி,

  Initiate-ஆரம்பம்

வேளாண்மையும் வாழ்வும் :

‘ இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘ நம்மாழ்வார் கூறியபடி அந்தக் காலத்தில் 2000க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் நம்மிடம் இருந்து உள்ளது அதை நம் முன்னோர் பட்டை தீட்டாமல் அதாவது மில்லில் கொடுக்காமல் சாப்பிட்டு ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்துள்ளனர்

ஜூலை 16

தன்ராஜ் பிள்ளை அவர்களின் பிறந்தநாள்

நாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை (பிறப்பு - சூலை 16. 1968, புனே) இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்.
1998ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தன்ராஜ் பிள்ளை தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அந்த ஆசிய போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை தன்ராஜ் பிள்ளை பெற்றார். அத்துடன் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அதற்கு முன்பாக 1966ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்றது. இவை தவிர 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பட்டத்தையும் இவர் பெற்றார்.
நீதிக்கதை

புத்தியை தீட்டு

ஒரு காட்டிற்கு இரண்டு மரம் வெட்டிகள் சென்றார்கள். மாலை சந்தித்த பொழுது ஒருவரிடம் மட்டும் அதிக விறகும், மேலும் அவர் களைப்படையாமலும் இருந்தார்.

அவரைப் பார்த்த மற்றவருக்கோ மிகவும் ஆச்சரியம். நம்மை போல தானே இவரும், இவர் மட்டும் எப்படி களைப்படையாமல் இருக்கிறார் என்று யோசித்து  விட்டு அவரிடமே, "இவ்வளவு விறகுகள் வெட்ட வேண்டும் என்றால் சிறிது கூட ஓய்வெடுக்காமல் வெட்ட வேண்டுமே,அவ்வாறு  தான் ஓய்வெடுக்காமல் விறகுகளை வெட்டினாயா?" என்று கேட்டார்.

மேலும் அவரிடம்,"அப்படி ஓய்வெடுக்காமல் வெட்டியிருந்தால் மிகவும் களைப்படைந்து இருப்பீர்களே எப்படி களைப்பில்லாமல் இருக்கிறீர்கள்" என்றும் கேட்டார்.

அதற்கு மற்றொருவர்"அவ்வாறு இல்லை ஐயா,நான் சிறிது நேரம் ஓய்வு  எடுத்துக்கொண்டு பிறகு வேகமாக வேலைகளை செய்வேன்" என்றார்.

அடுத்த நாள் முதலாமவரும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, ஓய்வெடுத்துக் கொண்டு வேகமாக வேலைகளை செய்து பார்த்தார். ஆனாலும் அவரைப்போல அதிகமான விறகுகளை வெட்ட இயலவில்லை.அதற்கு மறுநாள் அவர் விறகு வெட்டுவதை ஒளிந்து இருந்து பார்த்தார்.

அப்படி அவர் ஒளிந்து பார்த்ததில் இரண்டாமவர் விறகு வெட்டிவிட்டு சற்று ஓய்வெடுக்கும் நேரத்தில் தனது கோடாரியை தீட்டிக் கொண்டிருந்தார். அதனாலேயே அவரால் அதிவேகமாக விறகுகளை  வெட்ட முடிந்தது.

அவர்  அதிக விறகுகளை வெட்டியும் எப்படி களைப்படையாமல் இருக்கிறார் என்ற ரகசியத்தை முதலாமவர் உணர்ந்தார்.

இன்றைய செய்திகள்

16.07.2024

# மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த 1.48 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,000 விடுவிப்பு.

# முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் புதிதாக 84 தனியார் மருத்துவமனைகள் இணைப்பு.

# கர்நாடகாவில் கனமழை: மேட்டூர் அணையின் நீர்மட்டம்  நேற்று 42.76 அடியாக உயர்வு.

# மகாராஷ்டிரா, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

# நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான  கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார்.

# கோபா அமெரிக்கா கால்பந்து: 16-வது முறையாக அர்ஜென்டினா சாம்பியன்.

# ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஸ்பெயின் அணி சாம்பியன்.

# பாரீஸ் ஒலிம்பிக்; வீரர்களை விட அதிக அளவு பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுடன் பயணிக்கும் இந்திய டேபிள் டென்னிஸ் அணி.

Today's Headlines

# 1,000 released  to 1.48 lakh beneficiaries who appealed for the women's entitlement amount.

# 84 new private hospitals across Tamil Nadu have been linked to the Chief Minister's Comprehensive Medical Insurance Scheme.

# Heavy rains in Karnataka: Mettur dam water level rose to 42.76 feet yesterday.

# The Indian Meteorological Department has issued a red alert for the states of Maharashtra, Goa and Kerala.

# For the fourth time as the Prime Minister of Nepal, the leader of the Communist Party, K.P.  Sharma Oli took office.

#  Copa America Football: Spain won,  # champions for the 16th time.

# European Football Championship: Spain team champion.

#  Paris Olympics;  The Indian table tennis team travels with a larger number of coaches and support staff than players.
Prepared by

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers