Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.07.2024
இதன் PDF பெற
Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.07.2024
திருக்குறள்
பால் பொருட்பால்
அதிகாரம்:கேள்வி
குறள் எண்:415
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.
பொருள்: ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கல் உடைய சேற்றுநிலத்தில்
ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.
பழமொழி :
Penny-wise and pound-foolish.
கடுகு போன இடம் ஆராய்வார்; பூசனிக்காய் போன இடம் தெரியாது
இரண்டொழுக்க பண்புகள் :
*எல்லோரிடமும் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசுவேன்.
*யாரிடமும் கெட்ட வார்த்தைகளை பேச மாட்டேன்.
பொன்மொழி :
நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது ஆனால் நாளையை சிறப்பாக உருவாக்க முடியும்.
----- சாணாக்கியர்
பொது அறிவு :
1.திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?
விடை: காரி
2. நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருபவை
விடை: காரங்கள்
English words & meanings :
Attract- ஈர்ப்பு,
Grab-பிடுங்கு
வேளாண்மையும் வாழ்வும் :
இயற்கை வேளாண்மை சுற்றுப்புறத்திற்கு நன்மையையும், மனிதர்களுக்கு சத்துள்ள உணவுகளையும் கொடுக்கிறது. இயற்கை உரங்களை பயன்படுத்தி வேளாண்மையை பெருக்குவது மனிதர்களின் கடமையாகும். இதை குறித்து உங்கள் பெற்றோர், உற்றோர் மற்றும் உங்கள் ஊர் மக்கள் அனைவரிடமும் எடுத்துக் கூறி அவர்களை ஊக்குவிப்பது மாணவர்களாகிய உங்கள் கடமையாகும்
ஜூலை 11
உலக மக்கள் தொகை நாள்
உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.
நீதிக்கதை
தானம் சிறந்தது
மைசூரை ஒரு மன்னன் ஆண்டு வந்தார். அவர் நீதியும், நேர்மையும் கொண்டவர். அவர் ஒரு சமயம் காட்டுக்கு வேட்டையாட சென்றார்.
வழியில் வயதான விறகுவெட்டி ஒருவர் தலையில் விறகுகளை சுமந்தபடியே வந்தார். மன்னன் விறகுவெட்டியை பார்த்ததும் தள்ளாத வயதில் இவர் இப்படி கஷ்டப்படுகிறார் என்று வருந்தினார்.
பிறகு விறகு வெட்டியை பார்த்து, “ஐயா, உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா? இந்த வயதிலும் இப்படி பாடுபடுகிறீர்களே” என்று கேட்டார். அதற்கு விறகு வெட்டி அரசனை பார்த்து, “அரசே, எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இப்போது என்னுடன் இல்லை. இப்பொழுது வீட்டில் நானும் என் மனைவியும் மட்டும்தான் இருக்கிறோம். அதனால், இப்படி பாடுபடும்படி ஆகிவிட்டது” என்றார். இதை கேட்டதும் அரசன் அந்த விறகுவெட்டியின் துன்பத்தைப் போக்குவதற்கு தன் நாட்டில் உள்ள சந்தன காட்டின் ஒரு பகுதியை அவனுக்கு தானமாக வழங்கினார்.
இதனால் விறகு வெட்டி பெரும் மகிழ்ச்சி அடைந்தார். விறகு வெட்டிக்கு தன்னுடைய சந்தன காட்டை நன்கொடையாக தந்ததில் அரசனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில், கிழவனான அவர் சந்தன மரங்களை வெட்டி விற்பார். அதைக் கொண்டு வீடு, நிலம் என்று வசதி எல்லாம் பெற்று சுகமாக இருப்பார் என்று எண்ணினார். அரசன் நினைத்தபடியே விறகு வெட்டியும் நடந்து கொண்டார்.
ஆண்டுகள் பல கடந்தன. அரசர் வழக்கம்போல் வேட்டைக்கு செல்கையில் எதிரே பெரிய செல்வந்தர் ஒருவர் வருவதை கண்டார். மக்கள் அனைவரும் அவருக்கு மரியாதை அளித்தனர். அரசர் அந்தப் பெரியவரை தன் அரண்மனைக்கு அழைத்து வருமாறு காவலர்களை அனுப்பினார்.
அந்த பெரியவரும் அரசர் ஆணைக்கு கட்டுப்பட்டு பெரிதும் மகிழ்ந்து மன்னர் முன் வந்து நின்றார். அரசர் அந்த பெரியவரை பார்த்து, “ஐயா, பெரியவரே நீங்கள் யார்? உங்களுக்கு என் நாட்டு மக்கள் பெரிதும் மரியாதை கொடுக்கிறார்களே என்ன காரணம்?” என்று கேட்டார்.
உடனே அந்த பெரியவர் மன்னரை பார்த்து, “அரசே, என்னை தெரியவில்லையா? பல ஆண்டுகளுக்கு முன் உங்களிடம் அறிமுகமான விறகு வெட்டி நான். ஏழ்மையில் வாடுவதை கண்டு சந்தன காட்டை எனக்கு தானமாக வழங்கினீர்கள். நான் அந்த மரங்களை வெட்டி நல்ல விலைக்கு விற்று பெரும் பணக்காரன் ஆனேன்” என்றார்.
அரசருக்கு பெரும் மகிழ்ச்சி. பிறகு அவர் அந்த பெரியவரை பார்த்து, “மக்கள் உங்களை பெரிதும் மதிப்பதற்கு காரணம் என்ன?” என்று கேட்டார்.
“அரசே, எனக்கு கிடைத்த பெரும் பணத்தில் நான் பல ஏழை எளியவர்கள் பயன்பெற பள்ளிக்கூடம், மருத்துவமனை கட்டி உள்ளேன். சிலர் சொந்த தொழில் தொடங்க பணம் கொடுத்து உதவியுள்ளேன்.
அதனால் தான் மக்கள் என் மேல் பேரன்பு செலுத்துகிறார்கள்” என்றார்.
மன்னர் தான் செய்த தானம் எப்படி எல்லாம் நற்பயன்களை விளைவிக்கிறது என்று எண்ணி மனதிற்குள் மகிழ்ந்தார்..அந்த பெரியவரையும் பாராட்டினார்.
நீதி: தானம் செய்வது சிறந்தது. நாம் ஒருவர் ஒருவருக்கு தானம் அளிப்பதால் அதனால் பலரும் பயன்படுகிறார்கள். எனவே, அனைவரும் தானம் செய்யும் நற்பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்
11.07.2024
∆ நகராட்சி நிர்வாகத்துறை பணிகளால் நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
∆ கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 4,521 கன அடியாக அதிகரித்துள்ளது.
∆ 50 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க சென்னை ஐசிஎஃப்-க்கு பணி ஆணை.
∆ அசாம் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கில் சிக்கி காசிரங்கா பூங்காவைச் சேர்ந்த 6 காண்டாமிருகங்கள் உட்பட 137 வனவிலங்குகள் உயிரிழந்தன.
∆ ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு: இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து.
∆ பசியால் இறக்கும் காசாவின் குழந்தைகள்: பின்னணியில் இஸ்ரேல் என ஐ.நா வல்லுநர்கள் கருத்து.
∆ ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் பிரான்சை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
∆ விம்பிள்டன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்.
Today's Headlines
∆ The Government of Tamil Nadu has stated that Tamil Nadu is the leading state in India in terms of urbanization due to municipal administration works.
∆ Due to continuous rains in the Cauvery catchment areas in Karnataka, the flow of water to the Mettur dam has increased to 4,521 cubic feet per second.
∆ Work order to Chennai ICF to manufacture 50 Vande Bharat trains.
∆ 137 wild animals including 6 rhinos from Kaziranga Park were killed in the devastating floods in Assam.
∆ Modi Talks With Russian President Putin: Key Agreements Signed Between Both Countries
∆ Gaza's children starving: Israel in the background, UN experts say
∆ European Football Championship: Spain beat France in semi-final to reach final.
∆ Wimbledon Tennis: Carlos Algarz advances to semi-final
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment