Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.04.2024

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.04.2024


 




திருக்குறள்:

"""பால்: பொருட்பால். இயல்: அரசியல்.
அதிகாரம்: கல்வி

குறள்:393

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

விளக்கம்:

கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

பழமொழி :
Stones are thrown only at fruit bearing trees

காய்த்த மரம் தான் கல்லடி படும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். செய்ய முடியாதவன் அடுத்தவர்களுக்கு போதிக்கிறான்.

பொது அறிவு :

1. சங்க காலம் எனப்படுவது?


விடை: கி.பி 300 முதல் கி.மு 300 வரை 

2. உலகின் மிகப்பெரிய பூங்கா எங்கு உள்ளது?


விடை: கனடாவில் உள்ள உட் பஃபெல்லோ நேஷனல் பார்க்

English words & meanings :

Concentration ஒருநிலைப்படுத்துதல்
Determine தீர்மானித்தல்/முடிவு
Deduct.  கழிவு, தள்ளுபடி
ஆரோக்ய வாழ்வு :

பொதுவாக தென்னிந்திய உணவுகளில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது. எல்லா உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் எண்ணெயிலும் சேர்த்து பயன்படுத்தலாம். இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்திலும் கறிவேப்பிலை அதிகமாக பயன்படுத்ததப்படுகிறது.

நீதிக்கதை

கோபத்தை மறந்த ராமு

குறள் :
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

விளக்கம் :
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

கதை :
ஒரு ஊரில் ராமு என்பவன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்.

ராமுவும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான். மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்திவிட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப் பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.

ராமுவும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான். நண்பனே நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன.

ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார். இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன.

அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்றான் ராமுவின் நண்பன்.

நீதி :
எக்காரணத்தினாலும் தீய சொற்களை பயன்படுத்தக் கூடாது.
இன்றைய செய்திகள்

10.04.2024

*ஏப்ரல் 11 அன்று ரம்ஜான் கொண்டாடப்படும்- தலைமை காஜி அறிவிப்பு.

*கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 19ஆம் தேதி விடுமுறை: பூ மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிப்பு.

*கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; திற்பரப்பு அருவியில் குளிக்க தடை.

*கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.

*சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காலின்ஸ்.

Today's Headlines

*Ramzan will be celebrated on April 11- Chief kaji announced.

*19th Holiday for Koyambedu Market: it is notified that Flower Market will function as usual.

*Flood in Gothai River;  bathing in Tirparapu Falls is prohibited.

*Weekly special trains will be operated between Chennai - Nellai during summer vacation.

*Charleston Open Tennis: Collins won the title.
Prepared by

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal Study TNTET 2026 - Tamil மாதிரித் தேர்வு 32

TNTET 2026 - Tamil Model Test 32 | Zeal Study TNTET 2026 - Tamil மாதிரித் தேர்வு 32 Zeal Study 1. கீழ்கண்டவர்களுள் சங்ககாலப் பெண்பாற் புலவர் A. வெண்ணிக்குயத்தியார் B. வெள்ளி வீதியார் C. ஒளவையார் D. அனைவரும் 2. பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்குப் பாமாலை சூட்டியவர் A. ஔவையார் B. பண்டித ராமாபாய் C. காரைக்கால் அம்மையார் D. எவருமில்லை 3. சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி A. பண்டித ராமாபாய் B. டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி C. மூவலூர் இராமாமிர்தம் D. அன்னிபெசன்ட் 4. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் ...

Zeal Study TNTET 2026 - உளவியல் மாதிரித் தேர்வு 32

TNTET 2026 Psychology Quiz - Zeal Study TNTET 2026 - உளவியல் மாதிரித் தேர்வு 32 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் | Zeal Study 1. நவோதயாப் பள்ளிகள் _________ ன் கீழ் வருகின்றன. A. சமுதாயப் பள்ளிகள் B. விரைவுபடுத்தும் பள்ளிகள் C. அண்மைப் பள்ளிகள் D. டூயியின் பரீட்சார்த்தப் பள்ளிகள் 2. மாணவன் ஒருவனுக்கு ஒரே நேரத்தில் மருத்துவக் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரியிலும் இடம் கிடைக்கும் போது _________ மனப்போராட்டம் உண்டாகிறது. A. விலகுதல் - விலகுதல் B. அணுகுதல் - அணுகுதல் C. அணுகுதல் - விலகுதல் D. மேற்கண்ட ஏதுமில்லை 3. நல்ல மனநலத்தின் வெளிப்படையான அறிகுறி: A. விரக்தி B. நல்ல உறக்கம் C. மனச்சோர்வு ...

Zeal Study TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 36

TNTET 2026 Tamil Quiz - Test 36 TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 36 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் தொடங்க

Zeal study TNTET 2026 Tamil - தமிழ் மாதிரித் தேர்வு 35 Quiz

Zeal study TNTET 2026 Tamil Quiz - Test 35 TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 35 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் முயற்சி செய்

Followers