Skip to main content

தபால் ஓட்டு செலுத்துவது எப்படி?

 🌻தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களே! அரசு ஊழியர்களே! தங்களது மக்களாட்சி உரிமையை நிலைநாட்டும் கடமையைச் செய்ய அஞ்சல் வாக்குச் சீட்டிற்கு விண்ணப்பித்திருப்பீர்கள்.

சட்டமன்றத் தொகுதி உள்ள மாவட்டத்தில் பணியாற்றுவோருக்கு 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பிலேயே அஞ்சல் வாக்குச் சீட்டு கிடைத்திருக்கும். கிடைக்கப் பெறாதவர்களுக்கும், வெளிமாவட்டத்தினருக்கும் வரும் வாரத்தில் அஞ்சல் வழியே வந்து சேர்ந்துவிடும்.       



🌻அஞ்சல் வாக்களிக்கத் தரப்படும் காக்கி உறையில் என்னென்ன இருக்கும்? எப்படி நிரப்புவது? எங்கே சமர்ப்பிப்பது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

நமக்கு வழங்கப்படும் காக்கி உறையின் உள்ளே,            


🌻1. உறுதிமொழிப்படிவம் (FORM 13A)

2. வாக்குச் சீட்டு

3. இரண்டு உறைகள் (A Cover & B Cover)

4. வாக்களிப்பதற்கான வழிமுறை (FORM 13D) உள்ளிட்டவை இருக்கும்.       



🌻வாக்களிப்பதற்கான வழிமுறை (FORM 13D) படிவத்தைத் தனியே எடுத்து உங்கள் வசமே வைத்துக் கொள்ளுங்கள். இதை உறையில் வைத்து அனுப்பத்தேவையில்லை.           



🌻உறுதிமொழிப்படிவம் (FORM 13A) :

வாக்காளராகிய நீங்கள் கொடுக்க வேண்டிய உறுதிமொழிப்படிவம் இரு பக்கங்களில் இருக்கும். இதில் முன்பக்கம் மட்டும் நிரப்பினால் போதும். கையொப்பமிடத் தெரியாத / இயலாதவர்களுக்குத் தான் பின் பக்கம்.     



🌻உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட வேண்டிய தொடர் எண் என்பது, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டின் வரிசை எண். இந்த எண் வாக்குச் சீட்டின் பின்புறம் / மேல் பகுதியில் அச்சிடப்பட்டிருக்கும்.                 



🌻        உறுதிமொழிப் படிவத்தின் மேல்பகுதியில் இடும் உங்களின் கையொப்பமும், வெளி உறையில் (B cover) இடும் கையொப்பமும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும்.        


🌻   உறுதிமொழிப் படிவத்தின் கீழ்ப் பகுதியில் A / B grade அலுவலர்களிடம் சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.    



🌻பெரும்பாலும் பயிற்சி மையத்திலேயே இதில் சான்றொப்பமிட வட்டாட்சியர்கள் தயார்நிலையில் இருப்பர். வெளியிடங்களில் பெற வேண்டுமெனில் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், அரசு மருத்துவர் உள்ளிட்டோரிடம் சான்றொப்பம் பெறுவது சிறந்தது.      



🌻சான்றோப்பத்துடன் சார்ந்த அலுவலரின் Seal-ஐயும் பெற மறவாதீர்.        



🌻வாக்குச் சீட்டு :



🌻தங்களது தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் அடங்கிய வாக்குச் சீட்டில் தங்களது வாக்கினை தாங்கள் தேர்வு செய்யக்கூடிய தமிழ்நாட்டின் நலன் பேணும், மக்களின் நலனிற்காகத் தொடர்ந்து இயங்கக்கூடிய கூட்டணியின் / கட்சியின் வேட்பாளரது சின்னத்தில் Ball Point பேனாவில் Tick அடித்து, முன்னர் மடிக்கப்பட்டபடியே மடிக்கவும்.      



🌻ஏதேனுமொரு சின்னத்தில் நீங்கள் அடிக்கும் டிக்கைத் தவிர்த்து வேறு எந்தவிதக் குறியீடோ கையொப்பமோ வாக்குச்சீட்டில் இடப்படக் கூடாது.        


🌻. உறை A :



🌻A உறையின்மேல் FORM 13B என்ற தலைப்பிட்டு சில விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.



🌻வாக்குச் சீட்டின் வரிசை எண்ணை A உறையின்மேல் உரிய இடத்தில் எழுதவும்.         



🌻அதன்பின், டிக் அடித்து மடித்து வைத்திருக்கும் வாக்குச் சீட்டினை A உறையினுள் வைத்து உறையை ஒட்டிவிடவும்.    



🌻உறை B :



🌻B உறையின்மேல் *FORM 13C* என்ற தலைப்பிட்டு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அலுலர் முகவரி உள்ளிட்ட  விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.         




🌻B உறையின்மேல் இடது புறத்தில் தங்களது கையொப்பத்தை இட வேண்டும். இக்கையொப்பம் முன்னர் உறுதிமொழிப் படிவத்தில் இடப்பட்ட தங்களது கையொப்பத்தை ஒத்திருப்பது அவசியம்.       



🌻இதன்பின் பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழிப் படிவம் மற்றும் வாக்குச் சீட்டு வைத்து ஒட்டப்பட்ட உறை A ஆகிய இரண்டையும் B உறையின் உள்ளே வைத்து உறையை ஒட்டிவிட வேண்டும்.     



🌻அவ்வளவு தான் தங்களது அஞ்சல் வாக்கு தயார்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

Followers