Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.03.2024
திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல் :ஊழியல்
அதிகாரம் :ஊழ்
குறள்:377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
விளக்கம்:
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
பழமொழி :
He who eats crumbs will live a hundred years.
நொறுங்கத் தின்பவன் நூறாண்டு வாழ்வான்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கல்வியும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.
2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி :
உனக்காகப் பொய் சொல்லுபவன் உனக்கு
எதிராகவும் சொல்வான்.
-இங்கர்சால்
பொது அறிவு :
1. உலகில் அதிக விலை கொண்ட விலங்கு எது?
விடை: பந்தய குதிரை
2. ஜப்பானின் தலைநகரம் எது?
விடை: டோக்கியோ
English words & meanings :
Spontaneous- automatic ;தன்னிச்சையான.
shrewd- clever ;புத்திசாலி.
ஆரோக்ய வாழ்வு :
குப்பை மேனி கீரை : சுவாச நோய்களுக்கு சுக்கு மிளகு திப்பிலி சித்தரத்தை ஓமவல்லி துளசி யுடன் குப்பைமேனி சேர்த்து கசாயம் வைத்து குடிக்கலாம்.
மார்ச் 15
ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் (National consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது.
நீதிக்கதை
மன்னனின் ஆணவம்
மகாராஷ்டிரத்தின் பெரு வீரராக விளங்கிய ஒரு மன்னன், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஈடுபடுத்தி ஒரு அழகான பெரிய கோட்டையைக் கட்டினார். இருந்தாலும் அவர் சிறிது கர்வம் மிகுந்தவர். அத்தனை தொழிலாளி களுக்கும் உணவு அளித்தார். அவர்கள் யாவருக்கும் தான் தான் இலவசமாக உணவு அளிப்பதாகக் கர்வம் கொண்டிருந்தார். மன்னனின் குருநாதர் இந்த கெட்ட எண்ணத்தைக் கவனித்து விட்டு, மன்னனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணினார்.
ஒரு நாள் குரு மன்னனின் அரண்மனைக்கு வந்தபொழுது, வழக்கம் போல் அவனை வானளாவப் புகழ்ந்தார்.
"மகராஜ்! எல்லாப் பணிகளும் தங்கள் கருணையால் தான் நடக்கிறது." என்று கூறினார். அதைக் கேட்டு மன்னனும் பெரு மகிழ்ச்சி அடைந்தார். பிறகு குருவானவர், மன்னனிடம் ஒரு கல்லைக் கொடுத்து அதை உடைக்கச் சொன்னார். எதற்காக குரு தன்னைக் கல்லை உடைக்கச்
சொல்கிறார் என்ற சந்தேகம் எழுந்தாலும், மன்னனும்
ஆர்வமாக அந்தக் கல்லை உடைத்தார். அட! என்ன
ஆச்சரியம் ! அதிலிருந்து ஒரு தேரை துள்ளிக் குதித்துத் தாவித் தாவிச் சென்றது. அந்தக் கல்லிலிருந்து நீரும் வடிந்தது. மன்னன் அதை விநோதமாகப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
"மன்னா! ஒன்று கேட்கிறேன்.சொல்ல முடியுமா?" என்று குரு கேட்டார்.
"சொல்லுங்கள் குருவே! காத்திருக்கிறேன்" என்றான் மன்னன்.
"மன்னா! இந்தக் கல்லுக்குள் இருந்த தேரைக்கு யார் உணவளித்தார்கள் என்று கூறமுடியுமா?" என்று கேட்டார் குரு .
குரு கேட்ட கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார். உடனே வெட்கித் தலை குனிந்தார் மன்னர்.
"குருவே! என்னை மன்னித்துவிடுங்கள். எல்லா வற்றிற்கும் மேலாக இறைவன் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதை நான் அறிவேன். அவன்தான் இப்படியாக செய்கிறார் என்பதும் உண்மை. அவன் தூண்டிவிட்டதினால்தான் நான் யாவருக்கும் உணவுஅளித்தேன். இறைவன் இல்லாது ஒரு செயலும் நிகழாது. என்னை மன்னித்து விடுங்கள். என் கர்வம் அகன்றது" என்று கூறி தான் எல்லாவற்றிற்கும் ஒரு கருவிதான் என்பதை உணர்ந்து கொண்டான்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவனால் செய்யப்படுகிறது. அதற்கு நம்மைக் கருவியாக அமைக்கிறான் இறைவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்
15.03.2024
*5 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார் பூடான் பிரதமர்.
*இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பம்; மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
*மத்திய அரசு மருந்து சந்தைப்படுத்துதல் நடைமுறைகளுக்கான புதிய நெறிமுறைகளில் டாக்டர்களுக்கு பரிசுகள் தரக்கூடாது; மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.
*டிக் டாக் செயலியை தடை செய்வதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.
*ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் இரண்டாவது சுற்றில்
பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி.
*இந்தியன் வெல்ஸ் ஓபன்: மெத்வதேவ், சின்னர் காலிறுதிக்கு முன்னேற்றம்.
Today's Headlines
* Bhutan Prime Minister arrived in India yesterday on a 5-day visit.
* Application for citizenship, for the children born in Sri Lankan Tamil refugee camps; High Court ordered the Central Govt.
*The Central government's new norms for drug marketing practices included that no gifts should be given to doctors; the Central government ordered pharmaceutical companies.
*Bill to ban TikTok app: passed in US Parliament.
*All England Badminton second round:
P.V. Sindhu is defeated
*Indian Wells Open: Medvedev, Sinner advanced to quarterfinals.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Aravind 12th
ReplyDelete