Skip to main content

கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு; விண்வெளி தொடர்பாக பயிற்சி பெற இஸ்ரோ அழைப்பு!



கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு; விண்வெளி தொடர்பாக பயிற்சி பெற இஸ்ரோ அழைப்பு!




இஸ்ரோ ஸ்டார்ட் திட்டம் 2024; விண்வெளி பற்றி தெரிந்துக் கொள்ள விரும்பும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு




இயற்பியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை மற்றும் முதுகலை (UG/PG) படிப்புகளை வழங்கும் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பயிற்சி (START)-2024ஐ நடத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) திட்டமிட்டுள்ளது.




START-2024 திட்டம், ஏப்ரல்-மே, 2024 இல் நடத்தப்படும், இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு அறிமுக நிலை ஆன்லைன் பயிற்சியாகும்.




இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள்/ கல்வி நிறுவனங்களில் இயற்பியல் அறிவியல் (இயற்பியல் மற்றும் வேதியியல்) மற்றும் தொழில்நுட்பம் அதாவது மின்னணுவியல், கணினி அறிவியல், இயந்திரவியல், பயன்பாட்டு இயற்பியல், ரேடியோபிசிக்ஸ், ஒளியியல் மற்றும் ஆப்டோ-எலக்ட்ரானிக்ஸ், கருவியியல் மற்றும் பிற தொடர்புடைய பாடங்களைப் படிக்கும் முதுகலை மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.




நிறுவனங்களில் படிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களை, அவர்களின் திறன், தகுதி/கல்வி செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை ISRO/DoS க்கு ISRO பரிந்துரைத்தபடி ஒரு வடிவத்தில் அனுப்ப வேண்டும்.




இஸ்ரோ முன்முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க ஆர்வமுள்ள கல்வி நிறுவனங்கள், ஏப்ரல் 2, 2024க்குள் jigyasa.iirs.gov.in என்ற இணையதளப் பக்கம் மூலம் START-2024 பயிற்சியை நடத்த தங்கள் ஆர்வத்தை அனுப்ப வேண்டும்.




சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் முதுகலை மற்றும் இறுதி ஆண்டு இளங்கலை மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் ஜிக்யாசா போர்ட்டல் மூலம் ஏப்ரல் 8 மற்றும் 12, 2024க்குள் ஆன்லைனில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். START திட்டம் ISRO E-CLASS தளமான https://eclass.iirs.gov.in என்ற இணையப் பக்கம் மூலம் நடத்தப்படும்.




இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் ISRO START திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக ஒரு மூத்த ஆசிரியர்களை அடையாளம் காண, நிறுவனத்தின் தலைவரிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் (இணைப்பு-1) பொருத்தமான நியமனக் கடிதத்தின் இணைப்புடன் தங்கள் நிறுவனத்தை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இஸ்ரோ START-ஐ நடத்துவதற்கு நிறுவனத்தில் உள்ள வசதிகள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் வழங்க வேண்டும்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers