Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.01.2024
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: மக்கட்பேறு
குறள் : 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
பொருள்:
தம்முடைய பிள்ளைகளின் சிறு கைகளால் பிசையப்பெற்ற உணவு பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
பழமொழி :
Feed by measure and defy the physician.
அளவறிந்து உண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.
2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல
பொன்மொழி :
நேரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கும். --லியோனார்டோ டா வின்சி.
பொது அறிவு :
1. புனித நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
ஜெருசலேம் .
2. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது ?
அரேபியா.
English words & meanings :
be-ar - a large wild animal, கரடி, noun. be-ar- support, கஷ்டத்தை தாங்குதல், மனதைரியம் கூறுதல். verb. வினைச் சொல். both homonyms
ஆரோக்ய வாழ்வு :
அதிக தீவிரம், சோர்வு தரும் வேலை வாய்ப்புகள் உள்ள இளைஞர்கள், நாள் முழுவதும் சுமார் 20 பாதாம் பருப்புக chளை சாப்பிடுவது, வேகவைத்த உணவுகளான கிழங்குகள் அல்லது பிஸ்கட்களுக்கு பதிலாக, அதன் தாது உள்ளடக்கத்தின் உதவியுடன் தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்தை பெற முடியும். எலும்பு அடர்த்தி, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை மற்றும் தசை வலிமையை மேம்படுத்த தாதுக்கள் அவசியம் என்பதால் குழந்தைகளுக்கும் பாதாம் பெரிய நன்மை பயக்கும்
NMMS Q
மிகத் துல்லியத் தன்மை கொண்ட கடிகாரம் எது?
\\
விடை : அணுக்கடிகாரம்
நீதிக்கதை
உழைப்பின் பயன்
ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். விவசாயிக்கு வயது அதிகமானதால் இறந்து போகும் நிலையில் இருந்தபோது, தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளுக்கு தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக்கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களிலும் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.
பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் சொல்லிய புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை.
எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே! மூவரும் சேர்ந்து தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்து நீர் பாய்ச்சி உரம் போட்டார்கள். ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.
நீதி :
உழைப்பினால் வரும் பணம் அதிஷ்டம் தரும்.
இன்றைய செய்திகள்
தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 'ஆதித்யா-எல்1' விண்கலம் இன்று அதன் இறுதி இருப்பிட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.
*Today Headlines*
Thoothukudi District Collector has issued a warning to the people along the banks of the Tamiraparani River to be safe. The 'Aditya-L1' spacecraft is being placed into its final homing orbit today. India beat Australia in women's cricket match.
Comments
Post a Comment