Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2024
திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு
குறள்:346
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
விளக்கம்:
யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.
பழமொழி :
Many strokes fell mighty oaks
சிறு உளி மலையைப் பிளக்கும்
இரண்டொழுக்க பண்புகள் :1
1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.
பொன்மொழி :
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
பொது அறிவு :
1. இந்தியாவின் தேசிய வாக்கியம் எது?
விடை: சத்யமேவ ஜெயதே
2. சார்மினார் இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
விடை: தெலுங்கானா
English words & meanings :
quagmire-a soft boggy area of land that gives way underfoot.புதைகுழி. qualm- an uneasy feeling of doubt, worry, or fear, பதற்றமடைகிறது.
ஆரோக்ய வாழ்வு :
அகத்தி கீரை: அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அலவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
நீதிக்கதை
வால் இல்லாத நரி
காட்டில் உணவு தேடிக் கொண்டிருந்தது நரி.
எங்கு தேடியும் நரிக்கு உணவு கிடைக்கவில்லை. பசியோ மிகவும் வாட்டியது.
இந்த வேளை உணவு கிடைக்கவில்லை என்றால் மயக்கம் வந்து விடும் போல் இருந்தது நரிக்கு. அலைந்து திரிந்து ஓரிடம் வந்து சேர்ந்தது.
வேடன் ஒருவன் காட்டு மிருகத்தைப் பிடிப்பதற்காக, பொறி வைத்து இருந்தான். பொறியில் இறைச்சியும் வைத்திருந்தான். பொறியில் இருந்த இறைச்சியை பார்த்ததும் நரி வாயில் நீர் ஊறியது.
எப்படியும் இறைச்சியை சாப்பிட்டாக வேண்டும் என்று முடிவு செய்தது. அதே சமயம் பொறியில் தானும் சிக்கிக் கொள்ளக் கூடாது எனவும் நினைத்தது.
மிகவும் கவனமுடன் இறைச்சியை எடுக்க முயற்சித்தது. இறைச்சியையும் எடுத்து விட்டது. பாவம் அதன் வால் மட்டும் பொறியில் மாட்டிக் கொண்டது.
பசி மயக்கம் தீர, முதலில் இறைச்சியைச் சாப்பிட்டது வாலைக் காப்பாற்ற பல வகையிலும் முயற்சி செய்தது அதனால் பலன் ஒன்றும் இல்லை. அதனால் வாலைக் கழட்ட முடியவில்லை, என்ன ஆனாலும் சரி, இப்படியே நின்று கொண்டு இருந்தால், வேடன் வந்து
நம்மைப் பிடித்துக் கொண்டு சென்று விடுவான், எப்படியும் நம் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்" என முடிவு செய்தது.
தன் பலம் கொண்ட மட்டும், பொறியில் இருந்து தன்னை விடுவிக்க முயற்சித்தது. முடிவில் வால் அறுந்து போனது. வால் மட்டும் பொறியில் சிக்கிக் கொண்டது. உயிர் பிழைத்தால் போதும் என நினைத்து, நரி காட்டுக்குள் ஓடியது.
அப்படி ஓடும் பொழுது, வலி தாங்க முடியாமல் ஊளையிட்டவாறே ஓடியது. அதன் சத்தத்தைக் கேட்டு மற்ற நரிகளும் கூடிவிட்டன.
வால் இல்லா நரியைப் பார்த்து மற்ற நரிகள் யாவும் கேலி செய்து சிரித்தன.
வால் இழந்த நரி அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்தது.
கூட்டத்தில் இருந்த பெரிய நரி கேட்டது, "இந்த நிலையிலுமா சிரிக்கிறாய், எப்படி உன்னால் சிரிக்க முடிகிறது?"
"நான் இப்பொழுது தான் அழகாக இருக்கிறேன்" என்றதும், மற்ற நரிகள் சிரித்தன.
"யார் அப்படி சொன்னது?" என்றது பெரிய நரி.
அதற்கு வாலை இழந்த நரி, "யாரும் கூற வேண்டாம். இந்த வால் இருக்கும் வரை என் அழகைக் கெடுத்து விட்டது. இப்பொழுது தான் என் அழகை நான் உணர்கிறேன்" என்றவாறு கூறியது.
பெரிய நரி,"முட்டாள் நரியே, எப்படியோ உன் வாலை இழந்து விட்டாய். அதனால் சமாளித்தபடியே இப்படிக் கூறுகிறாய். வால் இல்லா மொட்டை நரி எப்படி இருப்பாய் என்று எங்களுக்கு தானே தெரியும்" என்றதும் அனைத்தும் கேலியாகச் சிரித்தன.
இனியும் அங்கு நின்று அவமானப்பட விரும்பாமல் நரி காட்டினுள் ஓடி விட்டது.
நீதி : தனக்கு ஏற்பட்ட குறை பிறருக்கும் ஏற்பட வேண்டுமென நினைப்பவன் முட்டாள், பைத்தியக்காரன்.
இன்றைய செய்திகள்
31.01.2024
*நாளை முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை.
*'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் அமலுக்கு வருகிறது. கலெக்டர்கள் 24 மணி நேரம் பணியாற்ற வலியுறுத்தல்.
*ஸ்பெயின் நாடு சென்றுள்ள முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
*சென்னையில் 1ஆம் தேதி மாபெரும் மாணவர் பேரணி உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு.
*கேலோ இந்தியா போட்டி:
டென்னிஸ் ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டு வீரர்களான பிரணவ், மகாலிங்கம் - மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.
Today's Headlines
*Direct flight service from Chennai to Ayodhya from tomorrow.
* 'Ungalai thedi ungal Ooril" scheme is going to be commenced soon. Collectors are asked to work 24 hours.
*Chief Minister M. K. Stalin, who has visited Spain, has invited people to come and invest in Tamil Nadu.
*There will be a huge students rally on 1st at Chennai. Minister Udhayanidhi Stalin will participate in the rally.
*Khelo India Tournament:
Tamil Nadu players Pranav, Mahalingam won the gold medal by defeating the Maharashtra team in the tennis men's category.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment