Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2024

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2024



   




திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் :  நிலையாமை


குறள்:340


புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு.


விளக்கம்:


 உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.


பழமொழி :

Make hay while the sun shines


காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்



இரண்டொழுக்க பண்புகள் :1


1.முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.    


2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :


கவலைகளை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட...இலட்சியத்தை நினைத்து உதிரம் சிந்துவது மேலானது . பகத்சிங்.


பொது அறிவு :


1. தொட்டவுடன் இறக்கும் பறவை எது?



விடை: டைட்டோனி பறவை 

2.இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிலக்கரி அதிகமாக உற்பத்தி  செய்யப்படுகிறது?



விடை: ஜார்கண்ட் 

English words & meanings :


 Waltzing - to dance a waltz. சுழற்சி நடனமாடுகிற.


Weeded - to remove weeds, களை எடுக்கப் பட்ட.


ஆரோக்ய வாழ்வு : 


மணத்தக்காளி : மணத்தக்காளிக் கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளன.



ஜனவரி 23





நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897[4] – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)[1] இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.  இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.[46] அதன்படி இந்தியா


நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!  

நீதிக்கதை


 பகைவனுக்கு அருள்வாய்


ஒரு கழுகைப் பிடித்த ஒரு வேடன் அதன் இறகுகளை வெட்டி விட்டுக் கூண்டில் பிற பறவைகளுடன் அடைத்து வளர்த்து வந்தான். அதனால் அந்தக் கழுகு மிக வருந்திக் கொண்டிருந்தது.


அடுத்த வீட்டுக்காரன் அந்தக் கழுகை விலை கொடுத்து வாங்கினான். அவன் இறகுகளை வெட்டாமல் வளர விட்டான். அதனால் அது பறக்க முடிந்தது.


அப்படிப் பறந்து சென்ற அந்தக் கழுகு ஒரு முயலின் மீது பாய்ந்து அதைத் தன்னை வளர்ப்பவனிடம் தூக்கிக் கொண்டு வந்தது. அதைப் பார்த்து ஒரு நரி, "நீ அதை இந்த ஆளுக்குக் கொடுப்பதால் உனக்கு ஒரு புண்ணியமும் இல்லை. நீ இதை, முதலில் உன்னைப் பிடித்து இறகுகளை வெட்டினானே, அந்த ஆளுக்குக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவன் உன் மேல் கோபப்படாமல் இருப்பான். இல்லையென்றால் மீண்டும் அவன் உன்னைப் பிடித்து இரண்டாவது முறையாக உன்


இறகுகளை வெட்டி விடுவான்" என்றது.


நீதி : நமக்கு நல்லது செய்த நண்பர்களுக்குத் திரும்ப நல்லது செய்து நட்பை வளர்த்துக் கொள்வதைக் காட்டிலும் நமது பகைவர்களுக்கு நல்லது செய்து அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதில் கவனம் காட்ட வேண்டும்.


இன்றைய செய்திகள்


23.01.2024


*27 ஆயிரம் அரசு பள்ளிகளை நவீனமாக மாற்ற புதிய திட்டம். கற்பித்தல் தரத்தை உயர்த்த நடவடிக்கை.


*தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு.


*உத்திரபிரதேசம் பட்டாசு கடையில் தீ விபத்து; இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு.


*அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது இதில் கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகி ராஜ் வடிவமைத்த ராமர் சிலை தேர்ந்தெடுக்கப்பட்டது.


*இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகல்.


Today's Headlines


*New scheme to modernize 27 thousand government schools.  Government planned to take steps to improve the quality of teaching.


 *Tamil Nadu Assembly will meet next month likely to make new announcements in budget


 *Fire incident at firecracker shop in Uttar Pradesh;  Two boys  died


*Kumbabhishekam of Ram Temple in Ayodhya was celebrated yesterday with much fanfare, in which the Rama's statue designed by Arun Yogi Raj from Karnataka was selected.


 *Virat Kohli ruled out of two Test matches against England.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal Study TNTET 2026 Tamil Quiz - Test 38

TNTET 2026 Tamil Quiz - Test 38 | Zeal Study TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 38 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் தொடங்க

Zeal Study TNTET 2026 KALVI TV Psychology Quiz - Part 10 - கல்வி உளவியல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்

kALVI TV TNTET 2026 Psychology Quiz - Part 10 | Zeal Study TNTET 2026 - கல்வி உளவியல் (உயர்மட்ட வினாடி வினா) வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் | Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/30 RESTART / மீண்டும் தொடங்க

TNTET 2026: ZEAL STUDY மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (55 வினாக்கள்) PSYCHOLOGY

TNTET 2025 Psychology Quiz TNTET 2026: உளவியல் மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் [Excel Academy] விடைகளைச் சரிபார்க்கவும்

TNTET 2026: Educational Psychology / கல்வி உளவியல் வினாடி வினா

TNTET Psychology Quiz - 30 Questions TNTET 2026: Educational Psychology கல்வி உளவியல் வினாடி வினா Next Question / அடுத்த கேள்வி Test Completed! / தேர்வு முடிந்தது! Your Final Score / உங்கள் மொத்த மதிப்பெண்: Retake Test / மீண்டும் முயற்சி செய்

Followers