Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.01.2024
திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை
குறள்:339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
விளக்கம்:
உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.
பழமொழி :
Love your neighbour as your self.
தன்னைப் போல் பிறரை நேசி
இரண்டொழுக்க பண்புகள் :1
1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.
2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்
பொன்மொழி :
அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும். அம்பேத்கர்
பொது அறிவு :
1. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்?
விடை: இந்தியா
2. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது?
விடை: வீனஸ் (வெள்ளி)
English words & meanings :
Vitrics – study of glassware and glassy materials.
Velvety - having a smooth and soft appearance and feel. மென்மையான, மெத்தென்ற
ஆரோக்ய வாழ்வு :
மணத்தக்காளி : இயற்கை நமக்கு அளித்த மருத்துவ மூலிகைகளில் ஒன்றான மணத்தக்காளி கீரை பல நோய்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் மணத்தக்காளி கீரையின் பழம், வேர் போன்றவை நமது உடல் நலப்பிரச்சனைகள் பலவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
நீதிக்கதை
யானைக்குட்டியும்நணபர்களும்.
குறும்புக்கார யானைகுட்டிக்கு தான் மற்றவர்களிலும் பார்க்க பெரியவன் என்ற கர்வம். எல்லோரையும் ஏளனமாகப் பார்க்கும். கர்வம் காரணமாக யானைக்குட்டி தனியாக அங்கும் இங்கும் சென்று வந்தது.
தாய் யானை தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என்று குட்டியானைக்கு சொல்லியது.
ஒருநாள் காகம் அடைவதற்காக மரக்கிளையில் கூடு ஒன்றை கட்டிக் கொண்டு இருந்தது. அவ்வழியாக தனியாக வந்த குறும்புக்கார யானைக்குட்டி அதைக் கண்டது. தனது தும்பிக்கையினால் மரக்கிளையினை முறித்தது. காகத்தின் கூடு கீழே விழுந்தது. காகம் கவலையுடன் பறந்து சென்றது.
யானைக் குட்டி கவலையுடன் சென்ற காகத்தைப் பார்த்து சந்தோஷம் கொண்டது. குரங்குக் குட்டியையும் விரட்டியது. குரங்கு மரத்திற்கு மரம் தாவித் தப்பியது. இப்படியாக பறவைகளையும், மிருகங்களையும் துன்புறுத்து அதில் மகிழ்ச்சி கண்டது யானைக் குட்டி.
மரத்தில் இருந்து பழங்களைச் சுவைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த அணிலை மரத்தினை ஆட்டிப் பயம் காட்டியது. அணில் பயத்தில் கீழே விழுந்து ஓடியது. யானைக்குட்டியின் இந்த செயல்கண்டு எல்லா மிருகங்களும் யானைக்குட்டியை விட்டு விலகிச் சென்றன.ஒருநாள் யானைக்குட்டி குளத்தில் இறங்கி நீராடியது. தண்ணீரில் துள்ளி குதித்து விளையாடியது. அப்பொழுது யானைக் குட்டியின் கால் சேற்றில் புதைய தொடங்கியது. யானைக் குட்டியால் காலை வெளியில் இழுக்க முடிய வில்லை. யானைக் குட்டி சத்தமாக பிளிறியது.
குச்சிகளைச் சேகரித்துக்கொண்டிருந்த காகத்திற்கு யானைக் குட்டி பிளிறுவது கேட்டது.
பிளிறும் யானை சத்தம் வந்த திசையை நோக்கி விரைவாகச் சென்றது.
யானைக்குட்டி சேற்றில் புதைத்திருப்பதை கண்ட காகம் குரங்கினது உதவியுடன் கயிறு கொண்டு யானையை இழுத்தது.இழுக்க முடியவில்லை. என்ன செய்வது என்று காகம் யோசித்தது.
மீண்டும் விரைவாகப் பறந்து சென்றது.யானைக்குட்டியின் அம்மாவை அழைத்து வந்தது. அம்மா யானை தும்பிக்கையால் குட்டியானையைத் தூக்கி வெளியில் எடுத்தது.
பயத்தினால் யானைக்குட்டி அம்மாவினை அணைத்துக்கொண்டது. அம்மா யானை எல்லோருடனும் நட்புடன் பழகவேண்டும்.
ஆபத்தில் உதவிய நண்பர்களை என்றும் மறக்கக்கூடாது என்று சொல்லியது.அதனை கேட்டு குறும்புக்கார யானைக்குட்டி தன்னுடைய முதுகில் தனது நணபர்களை ஏற்றிக்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றது.
இன்றைய செய்திகள்
22.01.2024
* இன்றுடன் நிறைவடைகிறது 47வது சென்னை புத்தகக் கண்காட்சி!
* விழாக்கோலத்தில் அயோத்தி.. இன்று ராமர் கோயில் திறப்பு விழா
* மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார்- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு.
* 16 வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சுவிட்சர்லாந்தும் இந்தியாவும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக சுவிஸ் பொருளாதார அமைச்சர் கை பார்மெலின் தெரிவித்தார்.
* பன்னர்கட்டா தேசிய பூங்கா பகுதியில் யானைகள் கூட்டம் சாலையை கடக்க முயன்றதால், பெங்களூரு நைஸ் சாலையில் சனிக்கிழமை அதிகாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
* ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 1ஆம் தேதி தொடங்கும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 29 நாள் மார்கியூ நிகழ்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
Today's Headlines
* The 47th Chennai Book Fair ends today!
Ayodhya in festival mood.. Ram temple opening ceremony tomorrow.
* Tamil Nadu Chief Electoral Officer Satya Pratha Chagu will release the final voter list tomorrow as the Lok Sabha elections are soon to be held.
* Switzerland and India have reached consensus on a free-trade agreement after 16 years of negotiations, Swiss Economy Minister Guy Parmelin said.
* Traffic congestion on Bengaluru's Nice Road was observed in the early hours of Saturday after a herd of elephants tried crossing the road around the Bannerghatta National Park area
* ICC T20 World Cup 2024: The highly-anticipated ICC Men's T20 World Cup 2024 will commence on June 1. International Cricket Council has released the schedule for the 29-day marquee event.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment