திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : இன்னாசெய்யாமை
குறள்:313
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
விளக்கம்:
பகைகொண்டு ஏதும் செய்யாதவர்களுக்கு துன்பம் செய்தால் பின்பு மீளமுடியாத தொல்லை ஏற்படும்.
பழமொழி :
He who hunts two hares loses both
பேராசை பேரு நட்டம்
இரண்டொழுக்க பண்புகள் :
1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்
2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.
பொன்மொழி :
சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார் – இத்தாலி
பொது அறிவு :
1. இருமுறை முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார்?
விடை: மேரி கியூரி
2. 20 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர் யார்?
விடை: 19-ம் லூயி
English words & meanings :
scent -odor, perfume.noun வாசனை. பெயர்ச் சொல். cent - Penny coin. least money value. noun. குறைந்த பணமதிப்பு. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
பாரிஜாத பூக்கள்: ஆன்டி-பாக்டீரியா, பாக்டீரியா நுண்கிருமியால் உண்டாகும் தொற்று பாதிப்பை நீக்கி உதவுகிறதுபாரிஜாத மர இலைகளை பறித்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சியாடிகா வலி குறையும்..
டிசம்பர் 05
கல்கி அவர்களின் நினைவுநாள்
கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவுநாள்
நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்
நீதிக்கதை
தெனாலிராமனும் கத்தரிக்காயும்
ஒரு முறை தெனாலிராமனுக்கு கத்தரிக்காய் சாப்பிட வேண்டும் என்று அதீத விருப்பம் ஏற்பட்டது. அரண்மனைத் தோட்டத்தில் பிஞ்சு கத்திரிக்காய் அதிகமாக விளைந்திருப்பதைக் கேள்விப்பட்டார்.
ஆனால் அது அரசாங்கத்திற்குச் சொந்தமானது. நாம் உபயோகிக்கக் கூடாது என்ன செய்வது. என்னவென்றாலும் இன்று கத்தரிக்காய் சாப்பிட்டே தீருவது என்று தீர்மானித்த தெனாலிராமன் ஒரு ஆலோசனை செய்தார். காவலாளிக்கு தெரியாமல் கத்தரிக்காய் அனைத்தையும் சத்தமில்லாமல் பறித்துக் கொண்டார்.
வீட்டுக்கு சென்று மனைவியிடம் "இன்றைக்கு விதவிதமாய் கத்தரிக்காய் பதார்த்தம் செய்" என்றார். தெனாலிராமன் கொண்டுவந்த கத்தரிக்காய் அரண்மனை தோட்டத்திலிருந்து பறித்து வந்தது என்று தெரிந்ததும் தெனாலிராமனது மனைவி மிகவும் கலக்கமடைந்தார்.
தெனாலிராமன் "நீ பயப்படாதே!
எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ சமைத்து வை"என்றார்.அவரது மனைவியும் மறுபேச்சு பேசாமல் கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு என்று வித விதமாக செய்து வைத்தார். இருவரும் சாப்பிடத்தயாரானார்கள்.தெனாலிராமன் தனது மகனை எங்கே என்று கேட்டார். அவன் வெளித்திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை மனைவி தெரிவித்தார். உடனே தெனாலிராமனுக்கு ஒரு யோசனை தோன்றியது.அவன் மேல் ஒரு குடம் தண்ணீர் ஊற்றினார். பதறியடித்து எழுந்த மகனைப் பார்த்து "வெளியே மழை பெய்கிறது, உள்ளே போய் படுத்துக் கொள்" என்று கூறினார்.
அரைத்தூக்கத்தில் இருந்த மகனும் அவர் சொன்னதைக் கேட்டவுடன் வேக வேகமாக வீட்டுக்குள் சென்றான். படுத்துறங்கப் போனவனை தெனாலிராமன் எழுப்பி "கத்தரிக்காய் சாப்பாடு ருசியாய் இருக்கிறது, சாப்பிட்டு விட்டு தூங்கு" என்று கூறினார்.
மறுநாள், தெனாலிராமன் அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் பறித்த விஷயம் எப்படியோ மன்னருக்குத் தெரிந்து போனது.
மன்னர் தெனாலிராமனை அழைத்து வரச் சொன்னார். நடக்கப் போவதை யூகித்துக் கொண்ட தெனாலிராமனும் மன்னர் முன் சென்று நின்றார்.
மன்னர் தெனாலியைப் பார்த்து கேட்டார் "தெனாலிராமா! அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் எல்லாம் காணாமல் போனது உனக்குத் தெரியுமா?" என்றார்.
தெனாலிராமனோ எதுவும் அறியாதது போல "என்ன? அரண்மனைத் தோட்டத்துக் கத்தரிக்காய் காணாமல் போனதா?" என்றார்.
மன்னரோ விடுவதாய் இல்லை. "ஒன்றும் அறியாதது போல் கேட்கிறாய் ராமா! நீ தான் கத்தரிக்காய் அனைத்தையும் பறித்ததாக நான் கேள்விப்பட்டேன். உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலி ராமனோ "இல்லவே இல்லை” என்று சாதித்தார்.
மன்னர் உடனே தெனாலிராமா "நீ உனது மகனை அழித்துவா. குழந்தைகள் பொய் சொல்லாது. நேற்று நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்பதை நான் உன் மகனை விசாரித்து தெரிந்து கொள்கிறேன்." என்றார்.
தெனாலிராமனது மகனை காவலாளிகள் அழைத்து வந்தார்கள். மன்னன் சிறுவனிடம் அன்பாக விசாரித்தார். "தம்பி நேற்று உஙகள் வீட்டில் என்ன சாப்பிட்டீர்கள்?" உடனே சிறுவன் சொன்னான் "கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு மற்றும் சாதம் எல்லாம் சாப்பிட்டோம். மிகவும் ருசியாக இருந்தது." என்று கூறினான்.
உடனே மன்னன் தெனாலிராமனைப் பார்த்தார், "இப்போது மாட்டிக்
கொண்டாயா தெனாலிராமா. இபோதாவது உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலிராமனோ விடாப்பிடியாக மறுத்தார். "மன்னா, இவன் இரவில் கனவு கண்டு அதை உளறுகிறான். நன்றாக விசாரியுங்கள். நீங்கள் நம்பும்படியாக அவன் கூறினால் நான் உண்மை என ஒத்துக் கொள்கிறேன்". என்றார்.
மன்னன் சிறுவனைப் பார்த்து மீண்டும் கேட்டார். "குழந்தாய் நேற்று உங்கள் வீட்டில் என்ன நடந்தது என்று விளக்கமாகச் சொல்" சிறுவனோ நேற்று இரவு ஜோ வென்று மழை பெய்ததா! அப்பா என்னை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனாரா...! அப்போ கத்தரிக்காய் வைத்து சாப்பிடச் சொன்னார்களா...! சாப்பிட்டுவிட்டு
பிறகு நான் உறங்கி விட்டேன்" என்றான்.
தெனாலிராமனோ நேற்று மழை பெய்ததா மன்னா! நீங்களே சொல்லுங்கள் என்று மன்னரை கேள்வி கேட்டார்.
மன்னர் குழம்பிப் போனார். அவையில் இருந்தவர்களை விசாரித்தார். நேற்று நகரத்தின் எந்தப்பகுதியிலும் மழை பெய்யவில்லை என்று எல்லோரும் சொன்னார்கள்.
மன்னரும் சரி தெனாலிராமன் சொன்னதைப்போல குழந்தை கனவில் கண்டதைத்தான் சொல்கிறான் என்று சொல்லி தெனாலிராமனையும் விடுவித்தார். மனதிற்குள் மகிழ்ந்து கொண்டே தெனாலிராமனும் இடத்தை காலிசெய்தார்.
பிறுதொருநாள் மன்னரிடம் தாம்தான் கத்தரிக்காயை திருடியதாக ஒத்துக் கொண்டுநடந்தவைகளை சொல்ல மன்னர் ஆச்சரியதுடன் சிரித்து மகிழ்ந்தார். பிறகு தெனாலிராமனின் சாதுர்யத்தை மெச்சி பல பரிசுகளை அளித்து மகிழ்ந்தார்.
இன்றைய செய்திகள்
05.12.2023
*கனமழை எதிரொலி: நான்கு மாவட்டங்களில் இன்றும் பொது விடுமுறை.
* விமான ஓடுபாதையில் இரண்டு அடிக்கு தண்ணீர்; சென்னையில் விமான சேவை நிறுத்தம்.
*மிச்சாங் புயல் எதிரொலி: சென்னையில் 14 சுரங்கப் பாதைகள் மூடல்; கோவை - சென்னை இடையே ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு.
* தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு பும்ரா நெருக்கடி கொடுப்பார்- டி வில்லியர்ஸ் எச்சரிக்கை.
* 2029 ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஸ் இந்தியாவில் நடத்த திட்டம்- அஞ்சு ஜார்ஜ் தகவல்.
Today's Headlines
*Due to Heavy rain there is a Public holiday in four districts today.
* Two feet of water on the runway– Flight service stopped in Chennai.
*Due to the Michang storm 14 tunnels are closed in Chennai; Trains canceled between Coimbatore and Chennai - Southern Railway Notification.
* Bumrah will put pressure on South African players- De Villiers warns.
* Plan to host 2029 World Athletics Champions in India - Anju George Info.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment