Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2203

Zeal study official school morning prayer activities 
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2203











அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்




திருக்குறள் :

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : வாய்மை

குறள் :296

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

விளக்கம்:

பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.


பழமொழி :

Fact is stronger than fiction.

கற்பனையை விட உண்மை விசித்திரமானது.


இரண்டொழுக்க பண்புகள் :
1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.

2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.

பொன்மொழி :

துணிந்து செயல்படுகிறவர்கள்தான் அடிக்கடி வெற்றியின் சிகரத்தை எட்டுகிறார்கள். ஜவஹர்லால் நேரு

பொது அறிவு :

1. காகித பணத்தை பயன்படுத்தும் மு,தல் நாடு எது?


விடை: சீனா
2. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?



விடை: ஞான பீட விருது










English words & meanings :
valor-great courage in the face of danger, especially in battle.வீரம். vagary-unexpected change in a situation or in someone's behaviour ;வகை.

ஆரோக்ய வாழ்வு :

தாமரைப் பூ :இருதயத்தை பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். இருதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க, தாமரை பூ கஷாயம் ஏற்றது. ...

நவம்பர் 14

ஜவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889மே 27, 1964), இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக "விதியுடன் ஒரு போராட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951 இல் வரைந்தார். இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார்.

நீதிக்கதை

மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின. அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் 'இவ்வளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடுக்கி விழுந்தால் அவ்வளவு தான்' என்றார். உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது. சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் ‘மேலே செல்லும் போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன ' என்றார். உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது. ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது. பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது' என்று கேட்டார். அதற்கு அந்தத் தவளை 'எனக்குக் காது கேட்காது " என்றது. நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.


இன்றைய செய்திகள்
14.11.2023



*வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணிக்கு ஆட்கள் தேவை.
பல்கலைக்கழகம் அறிவிப்பு.


*உடுமலை அமராவதி சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு.


*மாநில அளவிலான கலை திருவிழா: திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 436 பேர் தேர்வு.


*அவினாசி வட்டாரத்தில் தொடர் மழையால் நிரம்பி வழியும் குளம், குட்டைகள். வனப்பகுதி தடுப்பணைகளும் நிரம்பின.


*ஆஸ்திரேலியாவில் மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் நீல்வாக்னர், ஒரு ஓவரில் ஆறு பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.



Today's Headlines




* Manpower required for research work in Agricultural University. Announcement from the University.


*Admission Notification of Udumalai Amaravati Sainik School.


*State level Kalaithiruvila: 436 candidates selected from Tirupur district.


* Ponds and puddles overflowing due to continuous rains in Avinasi area. Forest barrages are also full.


*New Zealand cricketer Neil Wagner holds the record for taking six wickets in an over in a third division match in Australia.

Prepared by


Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal Study TNTET 2026 - Tamil மாதிரித் தேர்வு 32

TNTET 2026 - Tamil Model Test 32 | Zeal Study TNTET 2026 - Tamil மாதிரித் தேர்வு 32 Zeal Study 1. கீழ்கண்டவர்களுள் சங்ககாலப் பெண்பாற் புலவர் A. வெண்ணிக்குயத்தியார் B. வெள்ளி வீதியார் C. ஒளவையார் D. அனைவரும் 2. பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்குப் பாமாலை சூட்டியவர் A. ஔவையார் B. பண்டித ராமாபாய் C. காரைக்கால் அம்மையார் D. எவருமில்லை 3. சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி A. பண்டித ராமாபாய் B. டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி C. மூவலூர் இராமாமிர்தம் D. அன்னிபெசன்ட் 4. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் ...

Zeal Study TNTET 2026 - உளவியல் மாதிரித் தேர்வு 32

TNTET 2026 Psychology Quiz - Zeal Study TNTET 2026 - உளவியல் மாதிரித் தேர்வு 32 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் | Zeal Study 1. நவோதயாப் பள்ளிகள் _________ ன் கீழ் வருகின்றன. A. சமுதாயப் பள்ளிகள் B. விரைவுபடுத்தும் பள்ளிகள் C. அண்மைப் பள்ளிகள் D. டூயியின் பரீட்சார்த்தப் பள்ளிகள் 2. மாணவன் ஒருவனுக்கு ஒரே நேரத்தில் மருத்துவக் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரியிலும் இடம் கிடைக்கும் போது _________ மனப்போராட்டம் உண்டாகிறது. A. விலகுதல் - விலகுதல் B. அணுகுதல் - அணுகுதல் C. அணுகுதல் - விலகுதல் D. மேற்கண்ட ஏதுமில்லை 3. நல்ல மனநலத்தின் வெளிப்படையான அறிகுறி: A. விரக்தி B. நல்ல உறக்கம் C. மனச்சோர்வு ...

Zeal Study TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 36

TNTET 2026 Tamil Quiz - Test 36 TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 36 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் தொடங்க

Zeal study TNTET 2026 Tamil - தமிழ் மாதிரித் தேர்வு 35 Quiz

Zeal study TNTET 2026 Tamil Quiz - Test 35 TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 35 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் முயற்சி செய்

Followers