விடுகதைகள் மற்றும் விடைகள் - Tamil Vidukathaigal
1. கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். அது என்ன? விடை: மஞ்சல்செடி.
2. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ? விடை: அலாரம் 3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன? விடை: தராசு
4. பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்? விடை: தேன்
5. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன? விடை: சிலந்தி
. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன? விடை: தக்காளி
7. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன? விடை: தோடு
8. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்? விடை: நுங்கு
9. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன? விடை: தொலைபேசி
10. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்? விடை: சிலந்தி
Comments
Post a Comment