Skip to main content

𝕆𝔽𝔽𝕀ℂ𝕀𝔸𝕃 𝕌ℙ𝔻𝔸𝕋𝔼 𝕗𝕣𝕠𝕞 𝕋𝔼𝕋-𝕊𝕋𝔸𝕋𝔼 𝕋𝔼𝔸𝕄

  𝕆𝔽𝔽𝕀ℂ𝕀𝔸𝕃 𝕌ℙ𝔻𝔸𝕋𝔼 𝕗𝕣𝕠𝕞 𝕋𝔼𝕋-𝕊𝕋𝔸𝕋𝔼 𝕋𝔼𝔸𝕄

  


*நமது குழுவில் பயணிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பு கலந்த இனிய வணக்கம்* 🙏


🔬_இன்று  விசாரணைக்கு (FOR ADMISSIONS) எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளின் - தற்போதைய நிலை மற்றும் இன்றைய நீதிமன்ற நிகழ்வுகள்_ 


🔬உச்ச நீதிமன்றத்தின் COURT ROOM 8 இல் வழக்கு எண் 64 ஆக பட்டியலிடப்பட்ட *தமிழ் நாடு அரசு & திருமதி வனஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் Dr அபிஷேக் மனு சிங்வி , மேனாள் நீதியரசர் நாகமுத்து , திரு குமணன் , திரு M P பார்த்தீபன்* ஆகியோர் ஆஜராகினார்கள்.  இவர்களை *எதிர்த்து வாதாடிய ஒற்றை சிங்கம் நமது மதிப்பு மிகு வழக்கறிஞர் திருமதி கவிதா ராமேஷ்வர் அவர்கள்* தான். 


🎙️தமிழ் நாடு அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள் *_உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தடையும் இடைக்காலத் தீர்ப்பும்_* கோரினார்கள்.  அவர்கள் வாததத்திற்கு உரிய பதில் மற்றும் விளக்கங்களை ஆதாரப்பூர்வமாகவும் எதிர் தரப்பை வாயடைக்கும் விதமாக நமது தரப்பு வழக்கறிஞர் அவர்கள் வைத்தார்.  நீதிமன்றத்தில் நமது வழக்கு விவாதிக்கப்பட்ட நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை எதிர் தரப்பின் வழக்கறிஞர்கள் தான்  Occupy செய்தனர் , அது Star Senior Counsels & மேனாள் நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் கிடைக்கும் Undue-Advantage ஆகும். ஆன போதும் அவர்களுக்கு எவ்வித *தடையோ , இடைக்காலத் தீர்ப்போ நீதிமன்றம் அனுமதிக்கவில்லை*.  அதனால் *_உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு அமலில் இருப்பது உறுதியாகிறது_*.  மேலும் வழக்குகளை மேல் விசாரணைக்கு (Admitted) அனுமதித்து வழக்கினை ஒத்திவைத்துள்ளனர் மாண்பு மிகு நீதியரசர்கள். 


📋 *குறிப்பு* ::  பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு அவசியம் எனும் வழக்கு நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ் நாட்டில் இருந்து தான் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  இது போன்று மற்ற மாநிலங்களில் இருந்து வழக்குகள் வரலாம் என உச்ச நீதிமன்றம் கருதி இந்த SUBJECT MATTERS க்கு ஒரு விரிவான தீர்ப்பை (ONCE FOR ALL) எழுத நீதிபதிகள் விரும்பக் கூடும் எனவே, இந்த வழக்கை அனுமதித்து  உள்ளனர் மாண்புமிகு நீதியரசர்கள்.  இந்த சூழலை மிகச் சரியாகக் கையாள வேண்டியது நாம் அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும்.  மேலும் இன்று நடைபெற்ற விசாரணையில் அரசுத் தரப்பின் சார்பாக ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் Dr அபிஷேக் மனு சிங்வி அவர்கள் *அதிக அளவில் ஆசிரியர்கள் தங்கள் தரப்பில் பாதிக்கபடுவதாகவும் மேலும், 6000க்கும்  அதிகமான ஆசிரியர்கள் _தாங்கள் "பாதிக்கப்பட்டதாக_ வழக்கு தொடுக்க"*  ஆயத்தமாகி வருவதாகக் வாதாடினார். மேலும் அவர்,  நீதிமன்றத்தில் *_தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தாங்கள் "பாதிக்கப்பட்டதாக" ஒப்பீட்டளவில்-பெருமளவு வழக்கு தாக்கல் செய்யவில்லை_ என்று பதிவு செய்துள்ளார்*  எனவே,  தகுதித் தேர்வில்  தேர்ச்சி பெற்ற  ஆசிரியர்கள் வழக்கில் அதிக அளவில்  இணைய வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதை நீங்கள் நன்கு அறியவும் உணரவும் வேண்டும்.


📝 *மேலதிக தகவல்கள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகளை  விரைவில் பகிர்கிறோம்.*


*நன்றி* 🙏


*_இவண்_* 


⚔️ *தகுதித் தேர்வில் தேர்ச்சிப்  பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள்* - மாநிலக் குழு ⚔️



Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Followers