Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.10.2023

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.10.2023


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : கூடா ஒழுக்கம்


குறள் :274


தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.


விளக்கம்:


தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.


பழமொழி :

Distance lends enchantment to the view


இக்கரைக்கு அக்கரை பச்சை



இரண்டொழுக்க பண்புகள் :



1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 


2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.


பொன்மொழி :


ஒவ்வொரு குழந்தையிலும் அற்புதங்களும் மகிமையும் இருக்கிறது. அவர்களின் மகிமையை மலரச் செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில்தான் நமது மகிமை அடங்கியிருக்கிறது. - அமித் ரே


பொது அறிவு :


1. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?



விடை: 1947


2. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?


விடை: லக்னோ

English words & meanings :


 acoustic - relating to sound or the sense of hearing. dogs have a much greater acoustic range than humans". Adjective. செவிப்புலன் சார்ந்த. பெயரளபடை 


ஆரோக்ய வாழ்வு : 


வாழைப்பூ: ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்புகளை சரிசெய்யும். மேலும் ரத்த ஓட்டம் சீராகும். 


அக்டோபர் 10


உலக மனநல நாள்


உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை


குறள் :


எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.


குறள் விளக்கம் :


வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.


குறளுக்கான கதை.  


அமுதன் அந்த கிராமத்தில் ஆசிரியர். அவர் சிறந்த அறிவு கொண்டிருந்ததோடு, அன்பும் அடக்கமும் மிகுந்தவராக விளங்கினார். ஏழைக் குழந்தைகளுக்காக இலவச பாடசாலை ஒன்றை அமைத்து கல்வி போதித்து வந்தார். மக்கள் ஆசிரியரின் மீது நல்ல மரியாதை வைத்திருந்தனர்.

ராமு என்ற செல்வந்தனும், அதே கிராமத்தில் வசித்து வந்தான். முரடனாகிய இவன் மீது கிராம மக்களுக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை. செல்வந்தனாக இருந்தும் தனக்கு கிடைக்காத மதிப்பும், மரியாதையும்

ஆசிரியர்க்கு கிடைக்கிறதே?என்று ராமு ஆசிரியரின் மீது பொறாமை கொண்டான். ஆசிரியரை எங்கு கண்டாலும், ராமு வம்புக்கு இழுப்பான். அவமானப்படுத்த நினைப்பான்.

ஒருநாள் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த பின் ஆசிரியர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது ராமு தன் தோட்டத்திலிருந்து பறித்த

புசணிக்காயோடு வந்து கொண்டிருந்தான். ராமு உடன் அவனது இரு தோழர்களும் வந்தனர்.ராமுவையும், அவனது தோழர்களையும் கண்ட ஆசிரியர் ஒதுங்கி நடந்தார்.

ஆனால் அவர்களோ, என்ன, அமுதன்

பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறீர்களா? என்று வழியை மறித்தபடி கேட்டு வம்பிழுத்தனர். ஆமாம் ராமு. நான் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் வழியை விடு என்றபடி

ஆசிரியர் விலகி நடக்கத் தொடங்கினார். நீங்கள் பெரிய அறிவாளி என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். அப்படியானால் நான் கேட்கும் கேள்விக்கு பதில்சொல்லுங்கள்

விட்டுவிடுகிறோம். இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டால் உங்கள் வழிக்கே நான் வரமாட்டேன் என்று வீம்பாகப் பேசினான்.

சரி, உன் கேள்வி என்னவென்று கேளு ராமு! எனக்கு நேரமாகிறது என்றார் ஆசிரியர். என் கையிலுள்ள இந்த பூசணிக்காயின் எடை எவ்வளவு? நீங்கள் சொல்லும் எடை சரியாக இருக்கிறதா? என்று நாங்கள் நிறுத்துப் பார்ப்போம். சரியாக சொல்லாவிட்டால் நீங்கள் முட்டாள் என்று ஒத்துக் கொள்ளவேண்டும் என்று திமிராகப் பேசினான் ராமு.

ஆசிரியர் ஒரு கணம் யோசித்தார். ராமு இந்த புசணிக்காய் உன் தலையின் எடைதான் இருக்கிறது. வேண்டுமானால் நிறுத்துப் பார்த்துக்கொள் என்று பதில் சொன்னார் ஆசிரியர்.

இதை கேட்ட ராமுவும், அவனது கூட்டாளிகளும் அதிர்ந்து

போனார்கள். அட ஆசிரியர் நம்மை மடக்கிவிட்டாரே?

பூசணிக்காயின் எடையை சரி பார்க்க நம் தலையை

கொய்தால் அல்லவா முடியும். தலையை கொய்ய முடியமா?பூசணியை எடைபோட முடியுமா? என்று திகைத்த ராமு, தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஓடியே போனான்.

அதன்பின் அவன் ஆசிரியரிடம் வம்பு செய்வதே இல்லை!

இன்றைய செய்திகள்


10.10.2023


*இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலி: காசா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது இஸ்ரேல் ராணுவம்.


* 2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


*சாதிக்க தடை இல்லை: உச்சநீதிமன்றத்தை அதிர வைத்த பெண் வழக்கறிஞர் சாரா சன்னி.


* ஆந்திராவில் தனியார் தங்க சுரங்கம் பயன்பாட்டுக்கு வருகிறது.


*5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு.


* சென்னை போட்டியில் அபாரம் தங்கப்பதக்கம் வென்ற விராத் கோலி.


*வில்யங், ரவீந்திரா, டாம் லாதம் அபாரம் -நெதர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து 322 ரன்கள் குவிப்பு.


Today's Headlines


*Israel-Hamas war echo: Israel army has brought the Gaza border under its control.


 * The 2023 Nobel Prize in Economics has been announced for Claudia Goldin.


 *No barrier to achievement: Sara Sunny, the woman lawyer who rocked the Supreme Court.


 * Private gold mining is coming into use in Andhra Pradesh.


 *5 State Assembly Election Dates declared.


 * Virat Kohli won the gold medal in the Chennai tournament.


 *William, Ravindra, Tom Latham AWESOME - New Zealand piled up 322 runs against the Netherlands.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers