Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.10.2023

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.10.2023



திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : கள்ளாமை


குறள் :283


களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.


விளக்கம்:


திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.


பழமொழி :

Even homer nods


யானைக்கும் அடி சறுக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :



1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.



2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.


பொன்மொழி :


ஒத்த மனமுடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்ற வைக்கலாம்.- இந்தியா


பொது அறிவு :


1. சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர்-


 பகுகுனா.


2. ஐரோப்பாவின் விளையாட்டு  மைதானம் -

 சுவிட்சர்லாந்து.

English words & meanings :


jumble –an untidy collection or pile of things.தாறுமாறாகக் கலைந்து இருப்பது.

jockey –a person who rides horses professionally in races.

குதிரைப் பந்தயத்தில் குதிரை ஓட்டுபவர்

ஆரோக்ய வாழ்வு : 


சங்கு பூ கூந்தலுக்கு சிறந்தது, இதில் உள்ள அந்தோசயனின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.


நீதிக்கதை


 ஒரு கிராமத்தில் அனில், சுனில் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு அவர்கள் ரயில் வண்டி மூலம் பயணித்தனர். அவர்கள் இருவரும் தங்களுக்கு ஓர் கைக் கடிகாரத்தை வாங்க திட்டமிட்டனர்.


ஓர் இளைஞன் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த கடிகாரங்கள்       என்று காண்பித்து கடிகாரங்கள் தங்கத்தினால் ஆனது என்றும் கூறினார்.


அனிலுக்கு அந்தக் கடிகாரம் மிகவும் பிடித்து விட்டது, அதை உடனடியாக வாங்க ஒப்புக்கொண்டான். அந்த கடிகாரத்தை வாங்க வேண்டாம் என சுனில் அனிலிடம் பல தடவை கூறினார். சுனிலின் மறுப்புறைக்கு அனில் கவனம் செலுத்தாமல் அனில் அந்த கடிகாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கினான். சில நாட்களுக்குப் பின்னர் அந்த கடிகாரத்தின் முள் நின்று விட்டது, அனில் அந்த கடிகாரத்தை பழுது பார்ப்பவரிடம் எடுத்துச் சென்ற போது அந்த கடிகாரம் தங்கத்தினால் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் ஏமாற்றப்பட்டார் என்றும் பழுது பார்ப்பவர் அது தங்கமல்ல என கூறினார்.அவனுடைய முட்டாள்தனமான செயலால் அவசர முடிவை எடுத்ததை நினைத்து அவருடைய நண்பனின் பேச்சை கேட்காதது நினைத்தும் மிகவும் வெட்கப்பட்டார் அனில்.


நீதி:


மின்னுவதெல்லாம் பொன்னல்ல.


இன்றைய செய்திகள்


25.10.2023


*14 வயதான ஹேமந்த் என்ற அமெரிக்க மாணவன் புற்றுநோயை குணப்படுத்தும் 'சோப்' ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இளம் விஞ்ஞானி என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


*ஆம்னி பஸ்கள் அறிவித்து இருந்த வேலை நிறுத்தம்

வாபஸ்.


* 414 வது ஆண்டு தசரா விழா: சாமுண்டீஸ்வரி ஊர்வலத்தை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.


* புயல் அதிதீவிரமாக மாறியது. வங்கதேசத்தில் இன்று கரையை கடக்கும்.


*டி ஹாக் அதிரடி சதம்: 382 ரன்களை குவித்தது தென் ஆப்பிரிக்கா.


* முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பெடி மரணம்.


Today's Headlines


*A 14-year-old American student named Hemant has invented a 'soap' that cures cancer.  Everyone is praising him as a young scientist.


 * Omni Buses announced strike

 withdrawal


 * 414th Dussehra Festival: Lakhs flock to witness Chamundeshwari procession.


 * The storm became intense.  It will cross the shores today in Bangladesh.


 *De Hogg action century: South Africa scored 382 runs.


 * Former spinner Bishan Singh Bedi passes away.

 Prepared by


Covai women ICT_போதிமரம்



Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study lesson plan 10th Maths lesson plan Algebra EM Quadratic Graphs LO Based Lesson Plan With LO Number And Activities And Also

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal Study Lesson Plan Term 2 Class : 6 Subject : Maths Topic: எண்கள் LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal study morning prayer activities பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.10.2026, திங்கட்கிழமை

Zeal study morning prayer activities பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.10.2026,

Zeal Study Lesson Plan Term 2 Class : 6 Subject : Science Topic: வெப்பம் LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal study morning prayer activities பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.10.2026,

Zeal study official school morning prayer activities பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.10.2026,

Followers