Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.09.2023
திருக்குறள் :
இயல்:துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்
குறள் :256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
விளக்கம்:
புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.
பழமொழி :
Cast no pearls before swine
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
ஒரு ஆசிரியருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அவரது மாணவர் பாராட்டப்படும்போது. – சார்லோட் ப்ரான்ட்
பொது அறிவு :
1. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
2. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
சோம்பு: தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
செப்டம்பர் 08
அனைத்துலக எழுத்தறிவு நாள்
அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும்[1] செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..
நீதிக்கதை
எண்ணப்படி தான் வாழ்வு |
ஓரூரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் நாள்தோறும் ஊர் எல்லையில் இருந்து காட்டுக்கு சென்று விறகுகளை வெட்டி அவற்றை ஊர் மக்களிடம் விற்று பிழப்பு நடத்தி வந்தான்.
ஒரு நாள் அவன் வழக்கமாக விறகு வெட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் படுத்தான். அந்த மரமானது நினைப்பதையெல்லாம் கொடுக்கும் மந்திர மரம் ஆகும்.இந்த விஷயம் அவனுக்கு தெரியாது, அப்பொழுது தென்றல் காற்று சில்லென்று வீசியது. அது அவனுக்கு சுகமாக இருந்தது. இம்மாதிரியான நேரத்தில் ஒரு பஞ்சுமெத்தை இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று அவன் மனதில் நினைத்தான்.
என்ன ஆச்சரியம்! அடுத்த கணம் அவன் அருகில் ஒரு கட்டிலும் அதில் பஞ்சு மெத்தையும் வந்து சேர்ந்தது. விறகு வெட்டிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உடனே அவன் அதில் ஏறிப் படுத்தான்.நினைப்பதெல்லாம் நடக்கின்றதே இவ்வளவு சுகங்கள் இருந்தும் வயிற்றுக்கு உணவில்லாமல் பட்டினியாக இருக்கிறோமே! இப்பொழுது அறுசுவை உணவு இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று எண்ணினான்.
மறுகணமே தங்கத்தட்டில் அறுசுவை உணவு வந்தது. பல வகை உணவுகள் வந்தன, விறகுவெட்டி அனைத்தையும் வயிறார உண்டான். “உண்ட மயக்கம் தொண்டனுக்கு உண்டு” என்ற பழமொழிக்கு ஏற்ப விறகு வெட்டிக்கு உறக்கம் வந்தது, படுத்தான். அவன் மனதில் திடீரென்று ஒரு பயம் தோன்றியது. “நாம் காட்டில் தனியாக அல்லவா இருக்கிறோம்?. இப்பொழுது ஒரு சிங்கம் ஒன்று நம் முன் வந்து நம்மை கொன்று விட்டால் என்னவாகும்?” என்று நினைத்தான்.
மறுகணம் அவன் முன்னால் ஒரு சிங்கம் தோன்றி அவனை கொன்று விட்டது.
நீதி : நம் எண்ணத்தின் படி தான் நம் வாழ்க்கை அமையும். நாம் உயர்ந்தவற்றை, நல்லதை எண்ணினால் நம் வாழ்க்கை நல்லதாகவே அமையும். தவறான எண்ணங்களை எண்ணினால் நம் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும். எனவே நாம் உயர்ந்தவற்றையே நினைக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்
Comments
Post a Comment