Zeal study official school morning prayer activities* *பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -* *05.08.2023*
*Zeal study official school morning prayer activities*
*பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -* *05.08.2023*
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
*இயல்:இல்லறவியல்*
*அதிகாரம்:* *இனியவை கூறல்*
*குறள் : 95*
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
*பொருள்* :
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
*பழமொழி* :
A true friend is the best possession
உண்மையான நண்பனே உன்னதச் சொத்து
*இரண்டொழுக்க பண்புகள் :*
1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.
2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "
*பொன்மொழி* :
ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதல் படி அது இருப்பதை அடையாளம் காணுவதாகும். --ஜிக் ஜிக்லர்.
*பொது அறிவு :*
1. மிகப்பெரிய நீர் பறவை எது ?
அன்னம்.
2. பின்னோக்கி பறக்கும் பறவை எது?
ஹம்மிங் பறவை.
English words & meanings :
flea - a biting insect. noun. உண்ணி பூச்சி. பெயர்ச் சொல். flee - run away, verb ஓடிப் போதல். வினைச் சொல்
*ஆரோக்ய வாழ்வு :*
கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவுவதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். இது இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தச் செய்யும்.
*NMMS Q*
0.5,. 0.55, 0.65, 0.80, _______.
a) 0.82 b) 0.9 c) 0.95 d) 1
விடை: 1
*நீதிக்கதை*
உருவத்தை பார்த்து பழகாதே
ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.
அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...
ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.
உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.
மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன.
*இன்றைய செய்திகள்*
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையின் தீவிரம் கடந்த, ஒரு வாரமாக குறைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக, மாநிலம் முழுதும் வெயில் அதிகரித்து, வறண்ட வானிலை நிலவுகிறது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி போட்டியை அட்டகாசமாக தொடங்கியுள்ளது.
*Today headlines*
A consultation will be held today under the leadership of First Minister M. K. Stalin regarding the Women's Entitlement Scheme. Intensity of South West Monsoon in Tamil Nadu has decreased for the last one week. For the past four days, the state has experienced hot and dry weather. In the Asian Champions Cup, the Indian team started the tournament with a bang by defeating China 7-2.
Comments
Post a Comment