Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.08.2023

 *Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.08.2023


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம்:அருளுடைமை


குறள் :248


பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.


விளக்கம்:


பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.


பழமொழி :

Better later than never


காலம் தாழ்த்தினாலும் கருமத்தை முடிப்பது நல்லது



இரண்டொழுக்க பண்புகள் :


1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.


2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.


பொன்மொழி :


நான் மெதுவாக நடப்பவன் தான்


ஆனால் ஒருபோதும் நடப்பதை நிறுத்தப்போவது இல்லை


– ஆப்ரஹாம் லிங்கன்


பொது அறிவு :


1. தமிழ்நாட்டின் கதர் நகரம் என்று அழைக்கப்படுவது எது?



விடை: திருப்பூர்


2. தமிழ்நாட்டின் புனித பூமி என்று அழைக்கப்படுவது எது?


விடை: ராமநாதபுரம்

English words & meanings :


 an·ti·par·a·sit·ic - Destroying or inhibiting the growth and reproduction of parasites. Adjective. ஒட்டுண்ணியை அழிக்கும் எதிர்உயிரி. பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு : 


உளுத்தம் பருப்பு: கொழுப்பின் அளவைப் பராமரிப்பதன் மூலமும், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியைத் தடுப்பதன் மூலமும் நமது இதய அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது


ஆகஸ்ட்29


தியான் சந்த் அவர்களின் பிறந்தநாள்


தியான் சந்த் (Dhyan Chand, இந்தி: ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), என்பவர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் [1] 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் [2] 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் [3] தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். [4] 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.


நீதிக்கதை


கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.


இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார்.


கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான். இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான்.


ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது.


ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெரும்மையை உணர்த்தினார்.


நீதி:


கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம.


இன்றைய செய்திகள்


29.08. 2023


*இந்த மாதம் சந்திரன், அடுத்த மாதம் சூரியன் -அடுத்த அதிரடிக்கு தயாரான இஸ்ரோ!


*கனமழைக்கு வாய்ப்புள்ள ஐந்து மாவட்டங்களை எச்சரிக்கிறது வானிலை ஆய்வு மையம்.


*நான்கு மாநில அதிகாரிகள் இன்று ஆலோசனை. காவிரியில் தண்ணீர் திறக்க தமிழகம் மீண்டும் வலியுறுத்தல்.


*6 முதல் +2 வகுப்பு மாணவர்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டிலிருந்து பொது வினாத்தாள் முறை அமல்.


*நான்கு வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது டிராகன் விண்கலம் - நாசா தகவல்.


*19ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.


*மகளிர் ஸ்டீப்பிள் சேஸ் - தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை - பாரு சவுத்ரி.


Today's Headlines


* This month the moon, next month the sun - Isro ready for the next action!


 *Meteorological Center warns of heavy rains in five districts.


 *Four state officials consult today.  Tamil Nadu once again urged the release of  Cauvery water.


 *For the students of class 6 to +2, common question paper system will be implemented from the current academic year.


 *Dragon spacecraft reaches International Space Station with four astronauts - NASA .


 *In the 19th World Athletics Championships, India's Neeraj Chopra threw the javelin with a maximum distance of 88.17 meters and won the gold medal.


 *Women's Steeplechase - National record holder by Indian athlete - Baru Chaudhary.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers