Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2023
திருக்குறள் :
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
விளக்கம் :
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
2. தினம் ஒரு பொன்மொழி வெற்றி பெற்ற மனிதராக முயற்சிப்பதை விட, மதிப்பு மிக்க மனிதராக முயற்சி செய்யுங்கள். - ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
3. தினம் ஒரு புதிய வார்த்தை Arrest - கைது செய் Ask - கேள்
4. வரலாற்றில் இன்று 1757 – முதலாவது ரூபாய் நாணயம் கல்கத்தாவில் வார்க்கப்பட்டது. 1789 – சனிக் கோளின் என்சலடசு என்ற புதிய சந்திரனை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார். 1845 – சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது. 1990 – குவைத்தைத் தனது புதிய மாகாணமாக ஈராக் அறிவித்தது.
English words and Meaning
Empower. அதிகாரம்,
ஆட்சி
Serious முக்கியமான, ஆபத்தான
Javelin. எறி ஈட்டி
Mile stone. மைல்கல்,
முக்கிய சம்பவம்
Formal. இயல்பான, முறையான
அறிவியல் விந்தைகள்
* சராசரியாக ஒரு மனிதனின் இரத்த நாளங்கள் நீளம் 60,000 மைல் ஆகும்.
*தேள் உணவின்றி ஒரு வருடம் வரை உயிரோடு இருக்கும்.
*ஆப்பிள் 25%காற்றால் ஆனது எனவே அவை நீரில் மிதக்கின்றன
* ஸ்ட்ராபெர்ரி பழத்தின் விதைகள் அவற்றின் தோலில் காணப்படும்.
*மனித உடலின் வலிமையான தசை நாக்கு.
Some important abbreviations for students
* MA - Master of Arts
* MBA - Master of Business Administration
நீதிக்கதை
நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. “என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!”
தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. “நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!”
கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். “ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்”
ஒரு ஜன்னல் கண்ணாடியில் ‘டண்’ என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது “போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!”
வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். “இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!” என்று நினைத்துக் கொண்டது.
ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.
அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் “சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்” என்றது.
சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!” என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.
இன்றைய செய்திகள்
28.08. 2023
*சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டப்பட்டது- இஸ்ரோ தலைவர் விளக்கம்.
*நிலவின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணிக்கும் விக்ரம் லேண்டர் - இஸ்ரோ தகவல்.
*தேசிய நல்லாசிரியர் விருது வென்ற தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து.
*13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.
*ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிப்பு.
*உலக பேட்மிண்டன் போட்டி : அரையிறுதியில் பிரனாய் தோல்வி- வெண்கல பதக்கம் வென்றார்.
Today's Headlines
* Chandrayaan-3 Landing Site Named Shivashakti - ISRO Chief Explains
* Vikram Lander to continuously monitor moon's temperature - ISRO info.
* Chief Minister M K Stalin congratulates the teachers of Tamil Nadu who won the National Good Teacher Award.
* Chance of heavy rain in 13 districts today - Information from Meteorological Department.
*Asian Games Indian Women's Football Team Announcement
*World Badminton Tournament: Pranai loses in semi-final - wins bronze medal.
Prepared by
Covai women ICT_போதிமரம்.
Comments
Post a Comment