Zeal study official: school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2023
Zeal study official: school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஈகை
குறள் :223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
விளக்கம்:
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.
பழமொழி :
All are not saints that go to church
சாம்பல் பூசியவரெல்லாம் சாமியார் அல்ல.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.
2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்
பொன்மொழி :
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவது இல்லை
டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம்
பொது அறிவு :
1. இந்திய தேசிய சின்னத்தின் பொன்மொழி என்ன?
விடை: சத்யமேவ ஜெயதே( வாய்மையே வெல்லும்)
2. இந்தியாவின் முதல் சட்டம் மற்றும் நிதி அமைச்சர் Anan?
விடை: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
English words & meanings :
shuttle-a form of transport that travels regularly between two places. NOUN. travel regularly between places. VERB. சிறிது தூரம் சென்று திரும்பும் ரயில் வண்டி. பெயர்ச் சொல். இரு இடங்களுக்கு இடையே ஒழுங்காக பிரயாணம் செய்வது. வினைச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
சீரகம் - இதை வாழைப் பழத்துடன் பிசைந்து சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும். சீரகத்தையும் உப்பையும் மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வயிற்று வலி சரியாகும்.
ஜூலை 25
ஜிம் கார்பெட்
புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர்.புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர். குறிப்பிட்ட விலங்கு அடிக்கடி மனிதர்களைக் கொன்று வருகிறது என்பது உறுதிப்பட்டாலொழிய அவ்விலங்கைக் கொல்ல மாட்டார். இந்தியாவின் முதல் தேசியப் பூங்காவான ஹெய்லி தேசியப் பூங்காவையும் ஏற்படுத்துவதில் கார்பெட் பங்காற்றினார். 1957ல் ஹெய்லி தேசியப் பூங்கா கார்பெட் தேசியப் பூங்கா என பெயர் மாற்றப்பெற்றது.
நீதிக்கதை
ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார்.
ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.
தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.
அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது.
நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
“நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.
“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங்.
அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.
“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.
“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.
“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம்.
என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன்.
அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார்.
இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.
*விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான்.
லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் புகழும் பெனிசிலின் கண்டுபிடித்த
*சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் ஆனார்.*
வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.
அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில்.
அவரது பிள்ளை?
*சர் வின்ஸ்டன் சர்ச்சில்!*
தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.
இன்றைய செய்திகள்
25.07. 2023
*ட்விட்டரின் புதிய லோகோ 'X' - எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
*சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை- மக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
*சென்னையில் ஜி-20 கூட்டம் தொடங்கியது பிரதமரின் முதன்மை செயலாளர் பங்கேற்பு.
*அடுத்த மாதம் சென்னை வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.
*அப்ரார் அகமது அசத்தல் பந்துவீச்சு - இலங்கை முதல் இன்னிங்சில் 166 ரன்னுக்கு சுருண்டது.
*அதிவேகமாக 100 ரன்: இந்திய அணி புதிய சாதனை. ரோகித் சர்மா 44 பந்தில் 57 ரன்கள் அடித்தார். இஷான் கிஷன் 34 பந்தில் 52 விளாசல்.
Today's Headlines
*Twitter's New Logo 'X' - Elon Musk Officially Announced
*Heavy rains in Chennai and surrounding areas - people happy. Chance of heavy rain in 5 districts of Tamil Nadu - Meteorological Center
* The G-20 meeting started in Chennai with the participation of the Prime Minister's Principal Secretary.
*President Draupadi Murmu is coming to Chennai next month.
*Fantastic bowling by Abrar Ahmed - Sri Lanka were bowled out for 166 in the first innings.
*Fastest 100 runs: New record for Indian team. Rohit Sharma scored 57 runs off 44 balls. Ishan Kishan scored 52 off 34 balls.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment