Zeal study official school morning prayer activities* *பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.07.2023*
*Zeal study official school morning prayer activities*
*பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.07.2023*
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஒப்புரவறிதல்
குறள் :213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற
விளக்கம்:
தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.
பழமொழி :
A sound mind in a sound body
உடல் வலுவுற்றால், உள்ளம் வலுவுறும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல.
2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.
பொன்மொழி :
ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது குடும்பத்திற்கே கல்வி புகட்டுவதாகும்
காமராஜர்
பொது அறிவு :
1.உலகின் மிக உயரமான கட்டிடம் எது?
விடை: துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா
2. கணினியின் எந்த பகுதி மூளை என்று அழைக்கப்படுகிறது?
விடை: CPU
English words & meanings :
zeal - intense enthusiasm ஆர்வம்; abdomen - belly அடிவயிறு
ஆரோக்ய வாழ்வு :
சர்க்கரை வள்ளி கிழங்கு : நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது.
ஜூலை 12
மலாலா தினம்
மலாலா யோசப்சையி (மாற்று: மலாலா யூசுஃப்சாய், ஆங்கிலம்: Malala Yousafzai பாசுதூ: ملاله یوسفزۍ, பிறப்பு 1997) என்பவர் பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009ஆம் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது. மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார். 2013ஆம் ஆண்டு ஜூலை 12-ல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர்.
நீதிக்கதை
தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.
இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம்(கொழுக்கட்டை) கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.
மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.
பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.
இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு.மோதகதிற்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் அனித்தா எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.
எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறலாம்.
இன்றைய செய்திகள்
12.07. 2023
*தமிழ்நாடு முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை.
*இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவால் சண்டிகர்- மணாலி நெடுஞ்சாலை மூடல்.
*கனமழை கொட்டிய போதும் சிம்லாவில் குடிநீர் தட்டுப்பாடு மக்கள் அவதி.
*தீபாவளி பண்டிகையொட்டி ரயிலில் இன்று முதல் முன்பதிவு தொடக்கம்.
*மகளிர் கிரிக்கெட்: 8 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியது இந்தியா.
*உகாண்டா நாட்டில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டி: கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் சாதனை.
Today's Headlines
*Sales of tomatoes in 300 ration shops across Tamil Nadu.
* Chandigarh-Manali highway closed due to landslides in Himachal Pradesh.
*Despite heavy rains, people are suffering from shortage of drinking water in Shimla.
*On the occasion of Diwali festival, train booking starts from today.
*Women's Cricket: India beat Bangladesh by 8 runs.
*Badminton tournament held in Uganda: Kalpakkam nuclear power plant workers achieved
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment