Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.07.23

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.07.23




திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்


குறள் :206


தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்.


விளக்கம்:


துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.


பழமொழி :


A little pot is soon hot


சிறிய பானை சீக்கிரம் சூடாகும்



இரண்டொழுக்க பண்புகள் :


1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்


2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


“ஒரு நொடியையும் வீணாக்க வேண்டாம். உங்களால் முடிந்த அளவு வேகமாக முன்னேறிச் செல்லுங்கள்” – ரெபேகா வுட்ஸ்டாக


பொது அறிவு :


1. இந்திய தேச தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?



விடை: மகாத்மா காந்தி


2. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?



விடை: இந்திரா காந்தி.



English words & meanings :


 lawn - a grassy ground புல்வெளி; mahout - elephant driver யானைப்பாகன்

ஆரோக்ய வாழ்வு :


கருணைக்கிழங்கு : சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்துகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும்.


நீதிக்கதை


போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.


தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.


இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.



தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.


இன்றைய செய்திகள்


03.07. 2023


*மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்றார் அஜித் பவார். 


*போர் விமான என்ஜின் தயாரிப்பு- இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது பிரான்ஸ் நாடு.


*மொழி என்பது நம்மைப் பொறுத்தவரை ரத்தமாக உள்ளது- வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை மாநாட்டில் காணொளி மூலம் முதலமைச்சர் பேச்சு.


*சென்னையில் தக்காளியின் விலை ₹ 10 அதிகமாகி ஒரு கிலோ ₹130க்கு விற்பனை. தக்காளியின் விலை உயர்வு காரணமாக நியாய விலை கடையில் விற்க ஆலோசனை.


*யானைகள் நடமாட்டத்தால் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.


*தேசிய சாம்பியன்ஷிப் கோப்பையுடன் வந்த தமிழக பெண்கள் கால்பந்து அணிக்கு உற்சாக வரவேற்பு.


Today's Headlines


*Ajit Pawar took charge as Deputy Chief Minister of Maharashtra.


 * France has offered to help India in the production of fighter aircraft engines.


 *Language is blood for us- Chief Minister's video speech at North America Tamil Sangh Council conference.


 *In Chennai, tomato prices increased by ₹ 10 to ₹ 130 per kg.  Advice to sell at fair price shop due to rise in price of tomatoes.


 * Tourists are disappointed because of the ban on the Parijam lake in Kodaikanal due to the movement of elephants.


 *Enthusiastic welcome to the Tamil Nadu women's football team who came with the National Championship trophy.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு கணிதம் எண்கள் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு தமிழ் - வளர் தமிழ் கற்றல் விளைவு , மன வரைபடங்கள் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள அடிப்படையிலான பாடத்திட்டம்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பேரண்டம் மற்றும் சூரிய குடும்பம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு அறிவியல் தாவரங்கள் வாழும் உலகம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Followers