Zeal study official:
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2023
திருக்குறள் :
குறள் எண் – 989
பால் – பொருட்பால்
இயல் – குடியியல்
அதிகாரம் – சான்றாண்மை
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
விளக்கம்:
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
பழமொழி :
He that blows in the dust falls on his own eyes
சேற்றிலே கல்லெறிந்தால் நம்மேல் தான் தெறிக்கும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய்
2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்
பொன்மொழி :
உன்னிடம் பணம் இருந்தால் நீ ஒரு நாயை வாங்கி விட முடியும் ஆனால் அதன் வாலை நீ அசைக்க வைக்க வேண்டுமென்றால் நீ அதனிடம் அன்பை செலுத்தினால்தான் முடியும்.....ரமண மகரிஷி
பொது அறிவு :
1.யானை தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்தும்?
200 லிட்டர் .
2.பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது?
தும்பி.
English words & meanings :
cal·cu·lus - a method of calculation. Noun. நுண் கணிதம். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சோயா துண்டுகள் நன்மை பயக்கும்.
சோயா துண்டுகளில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.
NMMS Q 30:
டாஸ்மேனியா ____ தீவு என்று அழைக்கப்படுகிறது?
விடை: ஆப்பிள்
ஜூலை 22
பை நாள்
பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன  என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக  ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926).
பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல் ( யின் பரவலாக அறிந்த அண்ணளவு ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது. அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.
 நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது[1]. லாறி ஷோ (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார்.[2]
பை நாள் கொண்டாடப்படும் நாட்கள்[தொகு]
பெப்ரவரி 27 - ஆண்டு தொடக்க நாளில் இருந்து பூமி தனது ஒழுக்கை 1 ரேடியன் அளவு சுற்றிவரும் நாள்.
மார்ச் 14 - 3.14
ஜூலை 22: 22/7
நவம்பர் 10: ஆண்டின் 314வது நாள் (நெட்டாண்டுகளில் நவம்பர் 9)
டிசம்பர் 21, பிப 1:13: ஆண்டின் 355வது நாள், 1:13 மணிக்கு (இது சீன அண்ணளவாகும் (355/113)
நீதிக்கதை
சிங்கமும் கழுதைப்புலியின் பங்கும்
அன்று ஒரு நாள் சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. அடுத்தநாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.
கழுதைப் புலியோ, நீ ஏன் குடலை மட்டும் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்கு கேட்கவில்லையா என்று கேட்டது. பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும் என்றது குட்டி கழுதைப்புலி.
அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு ஏன் இங்கே வந்தாய்? என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.
பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி பயந்து தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்.
குடலை சிங்கத்திடம் கொடுத்துவிட்டுதிரும்பிய கழுதைப்புலியிடம் பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்துவிட்டு வருகிறீர்களே? என்று கேட்டது குட்டி கழுதைப்புலி.
மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கிவிட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டிவிட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக என்றது தாய் கழுதைப்புலி.
நீதி :
நம்மைவிட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.
இன்றைய செய்திகள் தமிழகம் முழுதும் வாக்காளர் வரைவு பட்டியல் தயார் செய்வதற்காக, வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி நேற்று துவங்கியது; அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடக்கிறது. ஒடிசாவின் பாலாசோரில் நடந்த ரயில் விபத்துக்கு சிக்னல் அமைக்கப்பட்டதில் நேர்ந்த தவறே காரணம் என, ரயில்வே அமைச்சகம் முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. கொரியா ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம். In order to prepare the draft voter list across Tamil Nadu, the work of checking the voter list by going from house to house started yesterday; It is happening till 21st of next month. For the first time, the Ministry of Railways has admitted that the cause of the train accident in Odisha's Balasore was a fault in the installation of signals. Korea Open Badminton - India's Chadwick, Chirag advance to semi-finals.
Comments
Post a Comment