லாஜிஸ்டிக்ஸ் படிப்புகள்
லாஜிஸ்டிக்ஸ் (Logistics)என்றால் என்ன?
சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு சென்று சேர்ப்பது லாஜிஸ்டிக் என்று குறிப்பிடப்படுகிறது. தற்போதைய கால கட்டத்தில் இது மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.
ஏனெனில் சரக்குகள் தயாரிக்கப்படும் இடத்திலிருந்து அதை நுகரும் பகுதிக்கு எடுத்துச் செல்வது அவசியமானதாகும். இது தொழிற்சாலையிலிருந்து சந்தைக்கு வரும் சரக்காக இருக்கலாம். ஒரு தொழிற்சாலையிலிருந்து சரக்குகள் மற்றொரு தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்வதாக இருக்கலாம். தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதிக்காக விமான நிலையம், துறைமுகம் ஆகிய பகுதிகளுக்கு எடுத்துச் சென்று சேர்ப்பதும் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் பணியாகும். அதே போல இறக்குமதி செய்யப்படும் பொருட்களையும் விமான நிலையம் மற்றும் துறைமுகத்திலிருந்து எடுத்தும் வரும் பணியையும் லாஜிஸ்டிக் நிறுவனங்கள் செய்து வருகின்றன.
லாஜிஸ்டிக் என்பது இப்போது மிகவும் அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது. பொருட்கள் 24 மணிநேரத்துக்குள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் எந்த இடத்துக்கும் போய்ச்சேரும் அளவுக்கு இந்தத் துறை பிரபலமாகிவிட்டது. அதனால் லாஜிஸ்டிக் நிறுவனங்களில் பணிபுரிய அது சம்பந்தமான படிப்புகளைப் படித்தால் மிக எளிதாக வேலை செய்ய இயலும். லாஜிஸ்டிக் குறித்த படிப்பை படித்தால் நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
லாஜிஸ்டிக்ஸ் கல்வி நிறுவன படிப்புகள்
இதில் பட்டயம், பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டய படிப்புகள், பிபிஏ, எம்பிஏ, என இது சம்பந்தமான படிப்புகள் பல நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. அத்தகைய
படிப்புகளை நடத்தும் தமிழ்நாட்டில் உள்ள சில நிறுவனங்கள் :
இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் லாஜிஸ்டிக்ஸ், சென்னை
(Indian Institute of Logistics, Chennai & Kochi)
தி ஸ்கூல் ஆப் பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ் (The School of Business Logistics, Chennai)
http:www.tsbl.education
Academy of Maritime Education and Training - AMET, Chennai
VELS Institute of Science, Technology and Advanced Studies - VISTAS, Pallavaram
Chennai,
Karunya Institute of Technology and Science - KITS, Karunya Nagar
Coimbatore
Global School of Foreign Trade (GSFT), Madurai
இவை போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் உறுப்பு கல்லூரிகளிலும் இத்தகைய படிப்புகள் நடத்தப்படுகின்றன. லாஜிஸ்டிக் சம்பந்தமான படிப்புகளைப் படித்து அத்துறையில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பெறலாம். இல்லையெனில் லாஜிஸ்டிக் நிறுவனத்தை கூட தொடங்கி அத்தொழிலை நடத்தி வருவாய் ஈட்டலாம்.
IILS Chennai, நிறுவனத்தில், பி.பி.எம்., மற்றும் எம்.பி.ஏ., என்ற நிலைகளில், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
Logistics & Shipping என்ற பிரிவில் BBM படிப்பும், அதேப் பிரிவில் MBA படிப்பும் வழங்கப்படுகின்றன.
இளநிலைப் படிப்பில் சேர, பள்ளிப் படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் படிப்பில் சேர, இளநிலையில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதுதவிர, புரபஷனல் டிப்ளமோ, அட்வான்ஸ்டு டிப்ளமோ மற்றும் பி.ஜி. டிப்ளமோ என்ற பெயர்களில், மூன்று விதமான டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
விரிவான அனைத்து விபரங்களுக்கும் www.iilschennai.com.
லாஜிஸ்டிக்ஸ் படிப்புகளில் சில பொதுவான பிரிவுகள்:
Supply chain strategies/management
Global transportation management
Warehouse management
International logistics
Materials handling
பிரபலமான சில லாஜிஸ்டிக்ஸ் படிப்புகள்:
Integrated Program in Logistics Management
MBA in Logistics and Supply Chain Management
MBA in Logistics and Shipping
MBA in Shipping and Port Management
MBA in Export and Import management
Diploma/ Advanced Diploma in Logistics and Shipping
Certificate in Logistics for Young Women
Professional Certificate in Logistics Management
லாஜிஸ்டிக்ஸ் துறையில் என்ன திறன்கள் இருந்தால் இதில் சிறப்பாக செயல்பட முடியும்?
லாஜிஸ்டிக்ஸ் என்பது இன்று மிக வேகமாக வளரும் துறை என்பதை அறிவீர்கள். பன்னாட்டு எல்லை களைத் தாண்டி சிறப்பான பணி வாய்ப்புகளைத் தரும் இத்துறைக்குத் தேவைப்படும் திறன்கள் பகுத்தாராயும் திறன், தகவல் தொடர்புத்திறன், கம்ப்யூட்டர் திறன் மற்றும் எளிதாக யாருடனும் பழகும் திறன் ஆகியவை தான்.
உற்பத்தி நிறுவனங்கள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், போக்குவரத்துத் துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசுத் துறை நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் ஆகியவற்றில் லாஜிஸ்டிக்ஸ் பணியிடங்கள் காத்திருக்கின்றன. லாஜிஸ்டிக்ஸ் துறையிலும் விற்பனை, மார்க்கெட்டிங், வேர்ஹவுசிங், பிளானிங் என எத்தனையோ பிரிவுகளில் வேலைகள் இருக்கின்றன. உங்களது அடிப்படை குணம், திறன்கள், பலம் ஆகியவற்றை நன்றாக யோசித்து அலசி ஆய்வு செய்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் என்ன பிரிவுக்கு நீங்கள் பொருந்துவீர்கள் என முடிவு செய்து அதற்கேற்ப உங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளவும்.
லாஜிஸ்டிக்ஸ் துறையில் அதிகரிக்கும் பணி வாய்ப்புகள்
இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் 6 லட்சத்து கோடி ரூபாய் மதிப்புடைய வாணிபத்தை மேற்கொள்ளும் துறையாக லாஜிஸ்டிக்ஸ் துறை மாறவிருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன.
இத்துறையில் அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளுக்குள் 4 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாகவிருப்பதாக பன்னாட்டு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான டொமாட்ஸூவின் முதுநிலை மேலாளர் அதுல் குல்கர்னி தெரிவித்துள்ளார். இத்துறை சமீப காலமாக வெகுவேகமாக வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.
எனினும் இத்துறைக்குத் தேவைப்படும் திறனாளர்கள் கிடைப்பது கடுமையான சிரமமாக இருக்கிறது. சப்ளை செயின் மேனேஜ்மென்ட், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் போன்ற லாஜிஸ்டிக்ஸ் படிப்புகளைப் படிக்க மாணவர்களிடம் ஆர்வம் குறைவாகவே காணப்படுகிறது.
ஐ.டி. துறையுடன் ஒப்பிடுகையில் இத்துறையில் தரப்படும் ஊதியமும் குறைவாகவே இருக்கிறது. இதனால் திறன் பற்றாக்குறை உருவாகியிருக்கிறது. எனினும் இத்துறையில் தற்போது இடைநிலைப் பணிகளில் நிதி, மார்க்கெட்டிங் மற்றும் மனித வளத்துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இத்துறை பற்றிய தகவல்கள் இன்னமும் பரவலாக அறியப்படாததால் தேவைப்படும் திறமைசாலி ஊழியர்கள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது.
இத்துறை சமீப காலம் வரை, தனிநபர் அல்லது ஒரே குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் தொழிலாகவே இருந்து வந்துள்ளது. சமீபகாலமாக, பன்னாட்டு நிறுவனங்கள் இதில் நுழைந்து செயல்படத் துவங்கியபின் தான் இத்துறை ஓரளவு கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு:
Comments
Post a Comment