சுற்றுலா துறையில் அபரிமித வேலை வாய்ப்புகள்
சுற்றுலா வருமானத்தை நம்பித்தான் பல நாடுகளின் பொருளாதாரமே உள்ளது. பல நாடுகள் சுற்றுலாவுக்கென்று தனி அமைச்சகங்களை வைத்துள்ளன. எனவே இந்த துறையில் இருக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகளுக்கு, அபரிமிதமான அளவில் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். சுற்றுலா துறைக்கென்று பலவிதமான படிப்புகள் நடத்தப்படுகின்றன.
சுற்றுலா பணிக்கான குணங்கள் மற்றும் தகுதிகள்:
* பயணம் செய்வதையும், புதிய இடங்களுக்கு செல்வதையும் விரும்புபவராக இருக்க வேண்டும்.
* நல்ல தோற்றம் கொண்டவராக இருக்க வேண்டும்.
* புதிய நபர்களுடன் பேசும் ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்.
* பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
* சுற்றுலா விவகாரங்களை திறம்பட கையாளும் திறமை இருக்க வேண்டும்.
* பயணம் மற்றும் சுற்றுலா துறைகளுடன் சம்பந்தப்பட்ட நபர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும் தன்மை வேண்டும்.
* சுற்றுலா பயணிகளை சந்தோஷப்படுத்தும் மனோநிலையும், ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும்.
சுற்றுலா துறையில் பணியாற்ற ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருப்பது மிகவும் முக்கியம் என்றாலும், ஒரு கூடுதலான வெளிநாட்டு மொழி தெரிந்திருப்பது இன்னும் சிறப்பு தகுதியாக கருதப்படும். மேலும் ஓரளவு கணினி அறிவும் உங்களுக்கு நன்மை பயக்கும். டிராவல் கம்பனியை சேர்ந்தவர், கார்கோ, டிக்கட் வழங்குதல் மற்றும் பாஸ்போர்ட்டுகள், விசாக்கள் ஆகிய நடைமுறைகளில் உள்ள தற்போதைய விதிமுறைகள், தேவைப்படும் ஆவணங்கள் பற்றி தெளிவான, இன்றைய நிலைக்கு பொருந்தும் அறிவைக் கொண்டிருக்க வேண்டும்.
இதன்மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவலை கொடுத்து, தேவைப்படும்போது பேப்பர் வொர்க் செய்ய முடியும். இவைத்தவிர, சுற்றுலா துறையில் உள்ள மார்கெடிங், கவுன்டர் சேல்ஸ், வழிகாட்டு சேவைகள் போன்றவற்றில் பணியாற்றும் நபர்கள், தங்களின் வாடிக்கையாளர்கள் செல்லக்கூடிய இடங்கள், அவற்றின் பொது பின்னணி, அந்த இடத்தை சாலை, ரயில் மற்றும் விமானம் மூலமாக அடையும் விதம் மற்றும் தன்மை போன்றவைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
சுற்றுலா படிப்புகள் மற்றும் பயிற்சிகள்:
ஒவ்வொரு வித்தியாசமான முக்கிய வேலைக்கும் தகுந்த கல்வியும், பயிற்சியும் தேவை. அந்த வகையில் இந்த சுற்றுலா துறைக்கும் பலவித படிப்புகள் இருக்கின்றன. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் போன்ற பலவித படிப்புகள் இத்துறையில் இருக்கின்றன. இத்துறையின் முதுநிலை படிப்பானது, மாஸ்டர் ஆப் டூரிசம் அட்மினிஸ்ட்ரேஷன்(எம்.டி.ஏ) என்ற பெயரில், 2 வருட முழுநேரப் படிப்பாகவும், இந்திய சுற்றுலா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பாகவும் உள்ளது.
இந்த முதுநிலை படிப்பானது, சுற்றுலா தொழில்துறையில் மேலாளர் உள்ளிட்ட பல நிர்வாகப் பொறுப்புகளை பெற உதவுகிறது. இன்டர்நேஷனல் ஏர் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன்(ஐ.ஏ.டி.ஏ) என்ற உலகளாவிய அமைப்பு, சுற்றுலா துறையில் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. மேலும் பல பெரிய டிராவல் ஏஜென்சிகள் இத்துறையில் குறுகியகால பயிற்சி படிப்புகளை வழங்குகின்றன.
தற்போது சுற்றுலா சம்பந்தமாக இந்தியாவில் இருக்கும் சில குறிப்பிட்ட படிப்புகளின் விவரங்களை காணலாம்.
அடிப்படை/சான்றிதழ் படிப்புகள்:
ஏர்லைன்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பு
ஏர் அன்ட் சீ கார்கோ அடிப்படை படிப்பு
ஏர்லைன் பயணம், கட்டணம் மற்றும் டிக்கட் வழங்குதல் மேலாண்மை ஆகியவற்றில் சேவை மேலாண்மை அடிப்படை படிப்பு
கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் அடிப்படை படிப்பு மற்றும் கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு சிஸ்டத்தில் மென்பொருள் படிப்புகள்
ஏர்லைன்ஸ் டிராவல் ஏஜென்சி மற்றும் டூர் ஆபரேஷன் மேலாண்மையில் அடிப்படை படிப்பு
ஏர்லைன்ஸ் டிக்கட் வழங்குதல் மற்றும் சுற்றுலா திட்டமிடுதலில் சான்றிதழ் படிப்பு
டொமஸ்டிக், இன்டர்நேஷனல் டிக்கட் வழங்குதல் மற்றும் கணினியுடனான ஏர்லைன்ஸ் படிப்பு
டூரிஸ்ட் கைடு துறையில் சான்றிதழ் படிப்பு
ஏர்லைன்ஸ், டூரிசம், சுற்றுலாக்கள் மற்றும் மார்கெடிங் & டிக்கட் வழங்குதல் பவுண்டேஷன் சம்பந்தமான டிராவல் மேலாண்மையில் உள்ள படிப்புகள் மற்றும் சர்வதேச டூரிசம் மொழி பயிற்சி படிப்பில் உள்ள கன்சல்டன்ட் படிப்பு.
டிப்ளமோ படிப்புகள்:
* மல்டிமோடல் டிரான்ஸ்போர்ட் & லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்
* ரயில் போக்குவரத்து & மேலாண்மை டிப்ளமோ
* டிரான்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் & மேலாண்மை
* ஹோட்டல் & டூரிசம் மேலாண்மை
* டூரிசம் & டெஸ்டினேஷன் மேலாண்மை
* டூரிசம் & டிராவல் மேலாண்மை
* டூரிசம் மேலாண்மை
* டிராவல் & டூரிசம் இன்டஸ்டிரி மேலாண்மை
இளநிலை பட்டப் படிப்புகள்:
டூரிசம் அட்மினிஸ்ட்ரேஷன்
ஹோட்டல் & டூரிசம் மேலாண்மை
டூரிசம் மற்றும் ஹாஸ்பிடாலிடி மேலாண்மை
டூரிசத்தில் இன்டக்ரேட்டட் படிப்பு
டூரிசம் & டிராவல் மேலாண்மையில் கோடைகால படிப்பு
முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
* ஏர்லைன்ஸ் படிப்பில் முதுநிலை டிப்ளமோ
* வணிக மேலாண்மை(டூரிசம்)
* கார்கோ ஆபரேஷன் & மேலாண்மை
* டெஸ்டினேஷன் மேலாண்மை
* வழிகாட்டுதல் & டெஸ்டினேஷன் மேலாண்மை
* டிராவல் & டூரிசம் மேலாண்மை மற்றும் டூரிசம் & ஹோட்டல் மேலாண்மை
* டூரிசம் & ஹோட்டல் மேலாண்மை
* டூரிசம் மேலாண்மை
* டிராவல் மேலாண்மை
முதுநிலை பட்ட படிப்புகள்:
* டூரிசம் நிர்வாகம
* டூரிசம் மேலாண்மை
* டிராவல் & டூரிசம் மேலாண்மை
படிப்பிற்கான தகுதிகள்:
டிராவல் மற்றும் டூரிசம் துறைகளில் இளநிலை படிப்புகளில் சேர, மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுநிலை படிப்புகளில் சேர, ஏதேனும் இளநிலை பட்டப் படிப்பை முடித்திருப்பதோடு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வு, குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத்தேர்வில் தேற வேண்டும். ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழியிலாவது புலமை இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும். பொதுமக்கள் தொடர்பு மற்றும் விளம்பர துறையில் டிப்ளமோ படித்திருந்தால் மேல்படிப்பிற்கு உதவியாக இருக்கும். இத்தகைய படிப்புகளை தொலைதூர கல்வி முறையிலும் படிக்கலாம். சான்றிதழ் படிப்புகளுக்கான தகுதி 10 மற்றும் 12 ம் வகுப்புகள்.
Comments
Post a Comment