Skip to main content

கால்நடை மருத்துவப் படிப்பு ஏன், எதற்கு, எப்படி?

 கால்நடை மருத்துவப் படிப்பு ஏன், எதற்கு, எப்படி?

மருத்துவத் துறையில் கால்நடை மருத்துவம் ஒரு தனிப் படிப்பு. பொதுவாகக் கிராமப்புறங்களில் கால்நடை மருத்துவத்தின் தேவை இன்றுவரை தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. காரணம் கிராமப்புறத்தில் வேளாண்மையை அடுத்து பால் உற்பத்தி, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்றவை முக்கியத் தொழில்களாக உள்ளன. அத்துடன் கால்நடைகளை நோய்த் தொற்று எளிதாகத் தாக்கும். அதேபோல் நகர்புறங்களில் நாய் வளர்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அயல்நாட்டு நாய் வகைகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.
அதனால் தொழிற்கல்வி படிக்க நினைக்கும் மாணவர்கள் பொது மருத்துவத்தில் காட்டும் ஈடுபாட்டை, கால்நடை மருத்துவத்திலும் காட்டலாம். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன் இந்த வேலை முடிந்துவிடுவதாக நினைக்க வேண்டாம். சிங்கம், புலி, சிறுத்தை, யானைக்குக்கூட சிகிச்சை அளிக்கும் அரிய வாய்ப்பு கிடைக்கும். அழிந்து வரும் காட்டுயிர்களைப் பேணுதல், அவற்றுக்கு ஏற்படும் புதிய நோய்களைக் கண்டறிவது என இந்தப் படிப்பின் வீச்சு பெரிது. மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களைப் பற்றியும் படிக்கும் வாய்ப்பு இதில் உண்டு. இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்கு சிறந்த வாய்ப்பு இந்தப் படிப்பு.
யாரெல்லாம் கால்நடை மருத்துவம் படிக்கலாம்?
# கால்நடைகள் மீதான பற்றும் சூழலியல் பாதுகாப்பின் மீது ஈடுபாடும் கொண்டவர்கள்
# வெயில், மழை பாராமல் உறைவிந்து குடுவையை மாட்டிக்கொண்டு கிராமம் கிராமமாக சுற்றிவரத் தயங்காதவர்கள்.
# கால்நடைகளையும் அவற்றை வளர்ப்பவர்களையும் நேசிப்பவர்கள்.
# கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைப்பவர்கள்.
# ‘மாட்டு டாக்டர்' எனும் கேலி பேச்சைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்.
கால்நடை மருத்துவம் படிப்பதில் உள்ள சாதகங்கள் என்ன?
நீட் (NEET) தேர்வு மதிப்பெண் தேவையில்லை. அரசு கல்லூரிகளில் மட்டுமே கால்நடை மருத்துவப் படிப்பு வழங்கப்படுவதால் கல்விக் கட்டணம் மிகக் குறைவு. மனித மருத்துவ பட்டப் படிப்புக்கு (MBBS) இணையாக ஐந்தரை ஆண்டுகளைக் கொண்டது. மனித மருத்துவத்தைப் போன்றே கால்நடை மருத்துவத்திலும் பல்வேறு துறைகள் உள்ளன.
தமிழகத்தில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு என நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளன.
இளநிலை பட்டப்படிப்பை முடித்ததும் முதுநிலை, முனைவர் பட்டம் போன்ற மேற்படிப்பு வாய்ப்புகள் இருக்கின்றன.
கால்நடை மருத்துவர் ஆவதால் கிடைக்கும் சாதகங்கள் என்னென்ன?
# அரசு வேலையில் சேரலாம்.
# பெருநகரத்தில் வசிப்பவர்கள் செல்லப்பிராணி மருத்துவமனையை அமைத்துக் கொள்ளலாம்.
# சிறுநகரங்களில் வசிப்பவர்கள் அருகிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று கால்நடை மருத்துவ சேவையை அளிக்கலாம்.
# அலுவலகச் சூழலில் பணிபுரிய விரும்புவர்கள் வங்கிகளிலும் காப்பீட்டு நிறுவனங்களிலும் வேலை பெற வாய்ப்பு உள்ளது.
# கால்நடைப் பண்ணை ஆலோசகராகச் செயல்பட்டு வருவாயைப் பெருக்கிக்கொள்ளலாம்.
# முதலீடு இட்டு கால்நடைப் பண்ணை வைத்து தொழில் முனைவோராகவும் உருவெடுக்கலாம். பல இளைஞர்களுக்கு வேலை வழங்கலாம்.
படிப்புகள்
கால்நடை மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புகளை “தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்" (Tamilnadu Veterinary and Animal Science University) நடத்துகிறது. இங்கு பலவிதமான பட்ட படிப்புகளும், பட்ட மேற்படிப்புகளும் நடத்தப்படுகிறது.
இங்கு நடத்தப்படும் முக்கியப் படிப்புகள்:
1. பி.வி.எஸ்சி., அன்ட் ஏஹெச் (B.V. Sc. and AH)
2. பி.எப்.எஸ்சி., (B.F. Sc.)
3. பி.டெக். எப்.பி.டி. (B.Tech. F.P.T)
4. பி.டெக். பி.பி.டி. (B.Tech. P.P.T.)
கல்வித்தகுதி
1. பி.வி.எஸ்சி., அன்ட் ஏஹெச் (B.V. Sc. and AH)
“பேச்சிலர் ஆஃப் வெட்னரி சயின்ஸ் அண்ட் அனிமல் ஹாஸ்பண்டரி” (Bachelor of Veterinary Science and Animal Husbandry) என்னும் இந்தப் படிப்பு 5 வருடப் படிப்பாகும். பிளஸ் 2 தேர்வில் உயிரியல் (Biology), இயற்பியல் மற்றும் வேதியியல் (PCB Group) பாடங்களைத் தேர்ந்தெடுத்து படித்தவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
2. பி.எப்.எஸ்சி., (B. F. Sc.)
“பேச்சிலர் ஆஃப் பிஷரிஸ் சயின்ஸ்” (Bachelor of Fisheries Science) என்னும் இந்தப் படிப்பு நான்கு வருடப் படிப்பாகும். மீன்வளக் கலை பற்றிய இந்தப் படிப்பில் பிளஸ் 2 தேர்வில் உயிரியல் (Biology), இயற்பியல் மற்றும் வேதியியல் (PCB Group) பாடங்களைத் தேர்ந்தெடுத்து படித்தவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
3. பி.டெக். எப்.பி.டி. (B.Tech. F.P.T)
“பி.டெக். புட் பிராசஸ் டெக்னாலஜி” (B.Tech. Food Process Technology) என்னும் படிப்பு நான்கு வருடப் படிப்பாகும். உணவைப் பதப்படுத்துதல் பற்றிய பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
4. பி.டெக். பி.பி.டி. (B.Tech. P.P.T.)
“பி.டெக். பவுல்ட்ரி புரொடக்ஷன் டெக்னாலஜி” (B.Tech. Poultry Production Technology) என்னும் படிப்பு நான்கு வருடப் படிப்பாகும். கோழி வளர்த்தல் பற்றிய இந்தப் படிப்பில் பிளஸ் 2 தேர்வில் கணிதம், உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியப் பாடங்களைப் படித்தவர்கள் சேர்ந்து படிக்கலாம்.
பட்ட மேற்படிப்புகள் (PG. Courses)
இளநிலைப் பட்டப் படிப்புகளைப் போலவே எம்.வி.எஸ்சி., எம்.எப்.எஸ்சி., போன்ற பட்ட மேற்படிப்புகளும் இந்தப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. இவை 2 ஆண்டு படிப்பாகும். மேலும், கால்நடை அறிவியல் மற்றும் மீன்வள அறிவியல் துறைகளில் பி.எச்டி என்னும் ஆராய்ச்சி படிப்புகளும் இங்கு நடத்தப்படுகிறது. பயோ டெக்னாலஜியில் எம்.டெக். படிப்பும் இந்தப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. பயோ இன்பர்மேட்டிக்ஸ் (Bio Informatics), வொய்ல்டு அனிமல் டிசிஸ் மேனேஜ்மெண்ட் (Wild Animal Disease Management), வெட்னரி லேபரெட்டரி டயாக்னாசிஸ் (Veterinary Laboratory Diagnosis), பிசினஸ் மேனேஜ்மெண்ட் (Business Management) ஆகிய பாடங்களிலும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளும் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து சில கல்வி நிறுவனங்களும் இப்படிப்புகளை நடத்துகின்றன.
கால்நடை மருத்துவப் படிப்புக்கு http://www.tanuvas.ac.in/ எனும் இணையதளத்தில் விண்ணக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
Tamilnadu Veterinary and Animal Science University,
Madhavaram Milk Colony,
Chennai - 600 051
இணையதள முகவரி : www.tanuvas.ac.in

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers