எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கவுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது: எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது.
அதன் பின்னர், எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்ததும், பிஎஸ்சி நர்சிங், பிபார்ம், பிபிடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
Comments
Post a Comment