வளமான எதிர்காலம் தரும் உணவு, தோட்டக்கலை படிப்புகள்
வைரஸ், பூஞ்சை காளான், நுன் கிருமிகளாலேயே உணவு கெட்டுப் போகிறது. உணவு கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? உணவை எப்படி பதப்படுத்தலாம், உணவில் உள்ள எந்த சத்துக்களும் கெட்டுப்போகாமல் எவ்வாறு சேமித்து வைக்கலாம்; காலத்திற்குத் தகுந்தாற்போல் புதிய உணவுப் பொருள்களை கண்டுபிடித்தல் இப்படி பல விஷயங்களை கற்றுத் தருவதுதான் புட் டெக்னாலஜி என்று சொல்லப்படும் உணவு தொழில்நுட்பம்.
பி.டெக். ஃபுட் பிராசசிங் (B.Tech., Food processing) இன்ஜினியரிங் பட்டப்படிப்பு உணவு மேம்படுத்தல் சம்பந்தமான பாடப்பிரிவைக் கொண்டுள்ளது. உணவுப் பொருட்களான காய்கறி, பழ வகைகளை விளைவிக்கும் முறை, உணவுப் பொருட்கள் குறித்த சகலவிதமான பாடப்பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. இதற்கு 55 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பட்டப்படிப்பை முடித்தவர்கள் பால் பண்ணை, ரோலர் ஃபிளவர் மில் என உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்திலும் பணியாற்ற வாய்ப்பு உள்ளது. மேலும், சுயமாக தொழில் தொடங்கவும் முடியும் என்பதால், தாராளமாக பிடெக். ஃபுட் பிராசசிங் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை எடுத்துப் படிக்கலாம்.
உணவு பாதுகாப்பு மற்றும் பதப்படுத்தலோடு நின்றுவிடுவதில்லை உணவுத் தொழில்நுட்பம். நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைக்கும் தகுந்தமாதிரி புதுமாதிரியான உணவுப் பொருட்களை கண்டுபிடிப்பதிலும் புட் டெக்னாலஜியின் பங்கு மிக முக்கியமானது.
உணவு தயாரிப்பு நிறுவனம், உணவு ஆராய்ச்சிக் கழகம், ஓட்டல்கள், உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள், அரசு நிறுவனங்களில் செயல்படும் உணவு விடுதிகள், அரசுத் துறையில் உணவு ஆய்வாளர் பணி, ஹெல்த் இன்ஸ்பெக்டர் போன்ற பணிகளும், ப்ரீலான்ஸ் ஆலோசகராகவும் பணிபுரிந்து கைநிறைய சம்பளம் பெற புட் டெக்னாலஜி படிப்பு பெரிதும் கைக்கொடுக்கும்.
புட் டெக்னாலஜி படிப்பை சிறந்த முறையில், மைசூரில் இயங்கி வரும் மத்திய உணவு தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் படிக்கலாம்.
பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்கள் எடுத்து படித்திருந்தால் போதுமானது.
முதுநிலை பட்டப்படிப்பு படிக்க இயற்பியல், கணிதம், பயோ கெமிஸ்ட்ரி, ஹோம்சயின்ஸ், நியூட்ரிசன், ஹோட்டல் மேனேஜ்மென்டில் பட்டப்படிப்பும், பி.டெக்கில் புட் டெக்னாலஜி படித்திருந்தால் முதுநிலைப் படிப்பில் நேரடியாக சேரலாம்.
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிராப் பிராஸசிங் டெக்னாலஜி கல்வி நிலையத்தில் பி.டெக். (ஃபுட் பிராஸசிங் என்ஜினீயரிங்) படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கு மாணவர்கள் பிளஸ் டூவில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஃபுட் பிராஸசிங் என்ஜினீயரிங்கில் முதுநிலைப் பட்டப் படிப்பில் சேர மாணவர்கள் ஃபுட் பிராஸசிங் என்ஜினீயரிங், ஃபுட் டெக்னாலஜி, அக்ரிக்ல்ச்சுரல் என்ஜினீயரிங், அக்ரிக்ல்ச்சுரல் பிராஸஸ் என்ஜினீயரிங் படிப்பில் ஏதேனும் ஒன்றில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். மாணவர்கள் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பி.எச்டி படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவின்கீழ் இளநிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டத்தில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
ஆர்டிகல்ச்சர் (தோட்டக்கலை) Horticulture பட்டப்படிப்பு படிப்பவர்கள் சுயதொழில் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. காய்கறி, பழ வகைகள், பூக்கள் குறித்த பாடப்பிரிவுகள் இதில் உள்ளன. தோட்டம் அமைத்து, அதில் காய்கறி, பழம், பூக்களை எவ்வாறு உற்பத்தி செய்து, தொழில் தொடங்கி மேன்மை அடையலாம் என தெரிந்துகொள்ளக் கூடிய வகையில் இந்த பட்டப்படிப்பு அமைந்துள்ளது.
கோவை வேளாண்மை பல்கழைக்கழகத்தில் 30 இடங்கள் உள்ளன. இந்த பட்டப்படிப்பு படிப்பவர்களும் இரட்டை பட்டப்படிப்பு படிக்கலாம்.
பி.எஸ்சி., ஆர்ட்டிகல்ச்சர் (தோட்டக்கலை) பட்டப் படிப்பிற்கான, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பெரியகுளம் மற்றும் திருச்சியில் உள்ளது.
திருச்சியில் இருப்பது பெண்கள் கல்லூரி. காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் சில பணப் பயிர்கள் உற்பத்தி, மண் வளம், தொழில்நுட்பம், அவை தொடர்பான ஆராய்ச்சி போன்றவை இதில் கற்பிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பூக்கள் அதிகளவு ஏற்றுமதி ஆகின்றன. இப்போது எல்லா விழாக்களிலும் பொக்கே கொடுப்பது வழக்கமாகிவிட்டது. பூ அலங்காரத் தொழிலும் வளர்ந்துவருகிறது. தோட்டக்கலை படிப்பவர்கள் சொந்தமாக அலங்காரப் பூக்கள் மற்றும் காய்கறி உற்பத்தி செய்யலாம். நர்சரி கார்டன் வைக்கலாம். பொக்கே தொழிலும் செய்யலாம்.
இந்தப் படிப்பை முடிப்பவர்களுக்கு அரசு தோட்டக் கலைத்துறை, வேளாண்மைத் துறையிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம், கனடா நாட்டின் டல்ஹவுசி பல்கலைக்கழகத்துடன் செய்துள்ள கூட்டு ஒப்பந்தத்தின்படி, தோட்டக்கலை படிப்பவர்கள் இரட்டைப் பட்டப் படிப்பு படிக்க முடியும். தோட்டக்கலை படித்துக் கொண்டிருக்கும்போதே, பட்டமேற்படிப்பு படிக்க கல்லூரியே வசதி செய்து கொடுக்கிறது.
தோட்டக் கலைப் பட்டயப்படிப்பு
தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் சென்னை, மாதவரத்தில் தோட்டக்கலை மேலாண்மை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டாண்டு கால அளவிலான தோட்டக் கலைப் பட்டயப்படிப்பு (Diploma in Horticulture) வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி: +2 வகுப்பில் உயிரியல், தாவரவியல், விலங்கியல், வேளாண்மைக் கோட்பாடு மற்றும் செயல்முறை I மற்றும் செயல்முறை II பாடங்களில் ஒன்றை விருப்பப் பாடமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 25 வயதுக்கு மேற்படாமலும், மற்ற பிரிவினர் 22 வயதுக்கு மேற்படாமலும் இருக்கவேண்டும்.
மாணவர் சேர்க்கை: விண்ணப்பித்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும்.இந்தப் பட்டயப்படிப்புகள் குறித்த மேலும் பல தகவல்களை, மேற்காணும் சென்னை, மாதவரத்திலிருக்கும் கல்வி நிலையத்திற்கு நேரில் சென்று அறிந்துகொள்ளலாம் அல்லது 9487376934 எனும் அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பெறலாம்.
வேளாண் மற்றும் தோட்டக்கலை முதுநிலை பட்டயப்படிப்புகள்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கத்தின் வழியாக நடத்தப்படும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை முதுநிலைப் பட்டயப்படிப்புகளான மாணவர்சேர்க்கை இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.
தொலைதூரக்கல்வி பட்டயப்படிப்புகளில், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு, வேளாண்மைத் தொழில் நுட்பங்கள், தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், மூலிகை அறிவியியல், பண்ணைக்கருவிகள் இயந்திரங்கள் பராமரிப்பு போன்ற பட்டயப் படிப்புகளுக்கும், பட்டுப்புழு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மூலிகைப் பயிர்கள் சாகுபடி, அங்கக வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சான்றிதழ் பாடங்களுக்கான சோர்க்கை இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய பட்டயப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.tnau.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பக்கட்டணத்தையும் இணையதளம் மூலமாகவே செலுத்தலாம்.
மேலும் தகவல்களுக்கு,
இயக்குநர்
திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641003 என்ற முகவரியிலும்,
0422 6611229 , 9442111048 , 9489051046 என்ற கைபேசி எண்களிலும்
odl@tnau.ac.in என்ற மின்னஞ்சல் மூலமும், தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*******
The word horticulture is derived from two Latin words (hortus[garden]+cultura [culture]), and is defined as “the art and science of growing fruits, vegetables, herbs, nuts and ornamental plants (trees, shrubs, flowering plants and turf).”
Central Food Technological Research Institute,
CSRI, Ministry of Science & Technology,
Mysuru - 570 020, INDIA.
http://www.cftri.com
Tamil Nadu Agricultural University, Coimbatore +91 422 6611200
info@tnau.ac.in &
http://www.tnau.ac.in/
Indian Institute of Crop Processing Technology - http://www.iicpt.edu.in/ Phone:04362 228 155 Contact No. : 91 4362 228155 Mail Id : director@iicpt.edu.in
Comments
Post a Comment