விமானத்துறையில் +2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 'பலே' வாய்ப்புகள்!
இன்ஜினியரிங் படித்தால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.
விமானத் துறை என்றால் பைலட் டிரெயினிங் மற்றும் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சிகள் மட்டுமல்லாது, பைலட்டுடன் இணைந்து செயல்படும் ஃப்ளைட் டிஸ்பாட்சர், விமானத்திலிருந்து தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் ரேடியோ டெலிபோனி பயிற்சிகள், பயணம் மற்றும் சுற்றுலா பற்றிய படிப்புகள், விமானம் மற்றும் விமான நிலைய மேலாண்மை பற்றிய படிப்புகள் என எண்ணற்ற பிற தேர்வுகளையும் இந்தத்துறை வழங்குகிறது.
இந்த படிப்புகளில் சேர, உயர்நிலை வகுப்பில் அதிக மார்க் எடுக்கவேண்டிய அவசியமும் இல்லை. எம்பிஏ ஏவியேஷன், பிபிஏ ஏவியேஷன் மற்றும் பிஎஸ்சி ஏவியேஷன் போன்ற தொழில்முறை படிப்புகள் கற்பதால் விமான நிறுவனங்களில் மட்டுமல்லாது, 5-ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் கஸ்டமர் கேர் நிறுவனங்களிலும் பணிபுரியலாம்.
இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள விமான சேவை நிறுவனங்களிலும், அல்லைய்ட் மக்கள் சேவை மையங்களிலும் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கிறது. மேலும், மற்ற தொழில்முறை படிப்புகளுடன் ஒப்பிடுகையில் இதற்கு ஆகும் செலவும் குறைவே!
விமானத் துறை
Comments
Post a Comment