அரசுப் பள்ளியில் படித்தால்.......
எட்டாம் வகுப்பு NMMS தேர்வில் வென்றால் 4 வருடம் மாதம் ரூ.1000
ஒன்பதாம் வகுப்பு ஊரகத் திறனறித் தேர்வில் (TRUST தேர்வில்) வென்றால் 4 வருடம் வருடம் ரூ.1000
பத்தாம் வகுப்பு NTS தேர்வில் வென்றால் PhD வரை படிக்க தேவையான உதவித் தொகை
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வில் வெற்றி பெறும் 1000 பேருக்கு கல்லூரி முடிக்கும் வரை ஆறு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000
11 ஆம் வகுப்பு தமிழ் திறனறி தேர்வில் வெற்றி பெறும் 1500 பேருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1500
6 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து கலந்தாய்வு மூலம் விரும்பும் கல்லூரியில் தொழில் கல்வியை அரசு செலவில் பயில 7.5 % ஒதுக்கீடு.
கூடுதலாக கல்லூரிக்கு செல்லும் 6-12 அரசுப் பள்ளி பெண் குழந்தைகளுக்கு மாதம் 1000 வழங்கும் "புதுமைப்பெண் திட்டம்".
ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் படித்தால் தமிழக அரசுப் பணியில் 20% முன்னுரிமை .
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உண்டு உறைவிட மாதிரிப் பள்ளி .
தமிழகத்தில் அறிவு சமூகத்தை வார்த்தெடுக்க தமிழக அரசின் திட்டங்கள்.
Comments
Post a Comment