Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - - 23.03.2023
Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - - 23.03.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: அழுக்காறாமை
குறள் எண் : 161
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு.
பொருள்:
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்
பழமொழி :
He that serves well need not ask for his wages
ஊக்கத்தோடு உழைத்தால் ஆக்கம் தேடிவரும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.
2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி :
வெற்றியின் உண்மையான ரகசியம் எடுத்த காரியத்தில் உறுதியாக நிற்பதே.
பொது அறிவு :
1. சிவப்பு வெள்ளை கலந்த நிறம் உடைய வியர்வையை வெளியிடும் விலங்கு எது?
காண்டாமிருகம் .
2.யானைக்கு நுகரும் நரம்புகள் எங்கு அமைந்துள்ளன?
வாய்.
English words & meanings :
jangle - to make noise like metal hitting metal. verb. The baby smiles if you jangle your keys.. கணகணவென்ற ஒலி எழுப்பு. வினைச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
பழங்களின் ராஜாவான மாம்பழம் ஒரு கோடைக்கால பழமாகும். இது சுவையான பழம் மட்டுமின்றி, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் சத்தான பழமும் கூட. இப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, கண்கள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையான சத்தாகும். மாம்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதோடு, பல நோய்களை எதிர்த்து பாதுகாப்பளிக்கின்றன.
கணினி யுகம்
F4
Display the address bar list in File Explorer.
F5
Refresh the active window.
மார்ச் 23
உலக வானிலை நாள் (World Meteorological Day);
உலக வானிலை நாள் (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.
பகத் சிங், சிவராம் ஹரி ராஜகுரு, சுக்தேவ் தபார்,
இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவின் சிலைகள்
பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907[1] – மார்ச் 23, 1931[2][3]) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு.[4].
இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.[5] பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.[6] பகத் சிங் தூக்கில் இடுவதுற்கு முன் தன் தந்தைக்கு நான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன் என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார். அது பின் நாளில் why am i atheist என்ற பெயரில் புத்தகம் ஆக வெளிவந்தது. தமிழில் அப்புத்தகம் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற பெயரில் ப. ஜீவானந்தம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.
நீதிக்கதை
கடவுளின் சிறப்பு
கதை :
ராகவன் ஒரு பட்டதாரி. பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற அறிவாளி. ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் செல்கையில், அவன் பயணம் செய்த பேருந்து பழுதாகி ஒரு கிராமத்துக்கு அருகே நின்று விட்டது. இரவு நேரமாகி விட்டதால் மாற்று பேருந்துகள் மறுநாள் காலையில் தான் வரும் என்றும், அதுவரை பேருந்திலேயே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறும் பயணிகளிடம் நடத்துனர் கூறினார்.
ராகவனுக்கு அதிகமாக பசியெடுத்ததால், உறக்கம் வரவில்லை. உணவு ஏதாவது கிடைக்குமா என அருகிலிருந்த கிராமத்தை நோக்கி நடந்த ராகவனை வழிமறித்த விவசாயி ஒருவர், விவரத்தைக் கேட்டறிந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவனுக்கு அன்புடன் உணவு படைத்த விவசாயி, சார், உணவருந்துவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்வது எங்கள் வழக்கம். நீங்களும் நன்றி கூறி விட்டு சாப்பிடத் தொடங்குங்கள் என்றார்.
ஆனால் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ராகவன், இறைவணக்கம் செய்ய மறுத்ததுடன் நிலத்தில் பாடுபட்டது நீ, நெல் விளைவித்தது நீ, என்னை உணவருந்த அழைத்தது நீ, அப்படியானால் நான் உனக்குத் தான் நன்றி கூற வேண்டும். இறைவனுக்கு நன்றி தேவையில்லை என்றான்.
விவசாயி வியப்புடன் ராகவனை பார்த்துக்கொண்டே, நெல் விளைந்த நிலம் இறைவன் படைத்தது. நெல் வளர மழை பெய்யச் செய்தது இறைவன் தான். மலர்ந்து, காய்த்து, கனிந்து, முற்றி தானியமானது அவன் செயலே. நான் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டுள்ளேன். நீங்கள் அருந்தும் குடிநீர் அவன் தந்தது. அத்தகைய இறைவனுக்கு நன்றி கூற மறுத்தால், உங்களுக்கு மனிதநேயமே இல்லை எனப் பொருள். இதை நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், படித்து என்ன பயன்? என்று கூறினார்.
இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த ராகவனின் கைகள் தாமாகவே குவிந்து, இறைவனுக்கு நன்றி கூறின.
நீதி :
அனைவரையும் மதித்து வாழ வேண்டும்.
இன்றைய செய்திகள்
23.03. 2023
* ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
* ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஏவப்படும் ஒன்வெப் நிறுவனத்தின் 36 இணைய சேவை செயற்கைக்கோள்கள் 26-ம் தேதி காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
* ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தமிழ், கிரந்தம், தெலுங்கு, தேவநாகரி மொழிகளில் எழுதப்பட்ட பழமையான 308 ஒலைச்சுவடிக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 25,543 ஏடுகள் உள்ளன.
* டெல்லி, உ.பி, பஞ்சாப், ஹரியானா மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் வடமாநிலங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
* காலநிலை மாற்றம் காரணமாகவும், அதிகரித்து வரும் நுகர்வு கலாச்சாரத்தினாலும் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் ஆபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
* இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது.
* சென்னையில் 25-ந் தேதி பெண்களுக்கான தடகள லீக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
* பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மனிஷா கால்இறுதிக்கு தகுதி.
Today's Headlines
* The Online Gambling Prohibition Bill is to be tabled again in the Assembly today.
* 36 internet service satellites of OneWeb will be launched by GSLV Mark-3 rocket on 26th at 9 am.
* In the Rameswaram Ramanatha Swamy temple, 308 ancient paim script written in Tamil, Granth, Telugu and Devanagari languages have been found. It has 25,543 scripts.
* It has been reported that the earthquake was felt in the northern states of India including Delhi, UP, Punjab, Haryana and Kashmir.
* The United Nations has warned that there is a risk of a global water crisis due to climate change and a growing culture of consumption.
* This year the ICC Cricket World Cup will be held in India.
* The Women's Athletics League Championship will be held in Chennai on 25th.
* India's Manisha Qualifies for Quarter Finals in Women's World Boxing Championship.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment