NEET 2023 : இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்ப விரும்பும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின்(NTA) இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
NEET UG 2023 விண்ணப்ப பதிவு!
நேற்று முதல் துவங்கியுள்ள நீட் தேர்வுக்கான விண்ணப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி வரை திறந்திருக்கும். மாணவர்கள் இந்த தேதிக்குள் முழுமையாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்தியிருந்தால் மட்டுமே அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்ப கட்டணம்!
விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவு மாணவர்களுக்கு 1700 ரூபாய், ஓபிசி மற்றும் EWS பிரிவினை சேர்ந்தவர்கள் 1600ரூபாய் செலுத்த வேண்டும். அதே போல், SC/ ST/ PwD வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 1000 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் தேதி!
நீட் இளநிலை 07-05-2023 மதியம் 2மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறும் என அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
STEP 1 : நீட் தேர்வு இணையதளத்துக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்: https://neet.nta.nic.in
STEP 2 : முகப்பு பக்கத்தில்கீழே இருக்கும் Registration பகுதியில் கிளிக் செய்யவும்.
STEP 3 : முதல் முறை மாணவராக இருந்தால் முதலில் உங்கள் விவரங்களை பதிவு செய்து உங்களுக்கான பதிவு எண் மற்றும் பாஸ்வோர்டை உருவாக்கி கொள்ளவும்.
STEP 4 : பின் லாகின் பகுதியில் உங்கள் பதிவு எண் மற்றும் பாஸ்வோர்டை உள்ளிட்டு உள்ளே செல்லவும்.
STEP 5 : பின்னர் ஆன்லைன் விண்ணப்பத்தை கவனமாக பூர்த்தி செய்யவும். அதில் கேட்கப்பட்டிருக்கும் புகைப்படம், கைரேகை மற்றும் சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யவும்.
STEP 6 : விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விட்டு சப்மிட் செய்யவும். பின்னர் உங்கள் விண்ணப்பம் ஈமெயில் மூலமாக உறுதி செய்யப்படும்.
Comments
Post a Comment