Skip to main content

என்.எல்.சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: 216 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 என்.எல்.சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: 216 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்க கடைசிநாள்: 10.03.2023

தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 213 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், ஜூனியர் ஓவர்மேன், ஜூனியர் சர்வேயர், சிர்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஜூனியர் ஓவர்மேன் - Junior Overman (Trainee)

காலியிடங்களின் எண்ணிக்கை: 51

கல்வித் தகுதி: Diploma in Mining or Mining engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 31,000 – 1,00,000

ஜூனியர் சர்வேயர் - Junior Surveyor (Trainee)

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வித் தகுதி: Diploma in Mining (or) Diploma in Mining engineering (or) Diploma in Mine Surveying (or) Diploma or Degree in Civil Engineering (or) National Trade Certificate (NTC) in Surveying படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 31,000 – 1,00,000

சிர்தர் - Sirdar

காலியிடங்களின் எண்ணிக்கை: 147

கல்வித் தகுதி: Diploma in Mining or Mining engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 26,000 – 1,10,000

தேர்வு செய்யப்படும் முறை: 

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.03.2023. இந்தப் பணியிடங்களுக்கான கடைசி தேதி கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/advt/12-2022.pdfhttps://www.nlcindia.in/new_website/careers/advt/12-2022.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

Followers