Skip to main content

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.03.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.03.2023

  திருக்குறள் :




பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பொறை உடைமை

குறள் : 154

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை

போற்றி யொழுகப் படும்.

பொருள்:

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்

பழமொழி :

Fortune favors the brave

வீரனை அதிர்ஷ்டம் விரும்பிச் சேர்ந்திடும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம். 

2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்

பொன்மொழி :

எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்

பொது அறிவு :

1. காப்பியை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது? 

பிரேசில். 

2. வடகிழக்குப் பருவக்காற்று வீசும் மாதங்கள் எவை ? 

அக்டோபர் - டிசம்பர்.

English words & meanings :

glazing – glass work in the frames especially windows. noun and verb. All this old church windows are renovated with glzing. சட்டத்தில் கண்ணாடி பொருத்துதல். பெயர்ச் சொல், வினைச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

கொத்தமல்லி தண்ணீர் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளது. இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே இதனை உட்கொள்வது சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குகிறது. மேலும் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது.

மார்ச் 14

கார்ல் மார்க்சு அவர்களின் நினைவுநாள்

கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார்.

ஐரோம் சானு சர்மிளா அவர்களின் பிறந்தநாள

ஐரோம் சானு சர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர்[1]. மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார்[2]. இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்[3].

ஆகஸ்ட் 9, 2016 அன்று தனது 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார். 

நீதிக்கதை

தங்க மஞ்சள் குருவி!

விஜயநகர் விழா கோலம் பூண்டிருந்தது! அரச உற்சவம்! அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார். ஒருநாள் அரசர் அவரிடம், அரசே நான் கேள்விப்பட்டேனே...? தங்கள் அவைப் புலவர் தெனாலிராமன் மிகவும் சாதுரியசாலியாமே! அவரிடம் சொல்லி, எனக்குக் காலையில் தங்கமஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலுமாக உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரச் சொல்லுங்களேன்... என்றார்.

மேலும், அது சில சமயம் மூன்று காலாலும், சில சமயம் இரட்டைக் காலாலும், பிறகு ஏழு இறக்கை கொண்டு வானில் பறக்கவும் வேண்டும் என்றார். அரசர் உடனே தெனாலியை அழைத்து, விரைவில் அத்தகைய குருவியைக் கொண்டு வா... என்று உத்தரவிட்டார். அதைக் கேட்டுத் தெனாலிராமனுக்குத் தலை சுற்றியது. அத்தகைய பறவை பற்றி அவர் ஒரு போதும் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனால் சிரித்தவாறே, சரி.... அரசே! நாளைக்கு நான் அத்தகைய பறவையோடு வருகிறேன் என்றார்.

மறுநாள் தெனாலி, சபைக்குத் தாமதமாக வந்தார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்தது. கிழிந்த உடைகள். அதில் புற்களும், முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. கையில் குருவி எதுவும் இல்லாத ஒரு பறவைக் கூண்டு இருந்தது. அவர் அரசரிடம், என்ன சொல்வேன் அரசே! அதிசயமான கதை நடந்து விட்டது. அந்தக் குருவி கையில் கிடைத்து விட்டது. நானும் அதைக் கூண்டில் அடைத்து விட்டேன். அதை இங்கு எடுத்து வரும்போது, அது தனது மாயமான ஏழு இறக்கைகளை விரித்துப் பறந்து சென்று விட்டது. காட்டில் அதைத் துரத்திக் கொண்டு வெகுதூரம் சென்று விட்டேன். அது மீண்டும் என் கையில் சிக்கவில்லை என்றார்.

தொடர்ந்து, சற்று தூரத்தில் பறந்து சென்றவாறே அது என்னிடம் சொல்லிற்று, அரசரிடம் போய்ச் சொல்... காலையாகிற போதோ அல்லது இரவாகிறபோதோ அல்லது நடுப்பகல் ஆகிறபோதோ, வெளிச்சமோ இருட்டோ இல்லாத போது, நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து, திரும்ப வந்து விடுகிறேன்... என்றது என்றார். அதைக் கேட்டதும் அரசருக்கு மட்டுமல்ல, அண்டை நாட்டு மன்னர் விஜயவர்தனருக்கும் தலை சுற்றியது. அப்படிப்பட்ட சமயம் எங்கு உண்டாகும்? காலை ஆகாமல், நடுப்பகல் ஆகாமல், இரவு ஆகாமல் வெளிச்சம், இருட்டு ஆகும் சமயம் எது? என்று அனைவரும் வியப்படைந்தனர். அதைக் கேட்டு விஜயவர்தனர், அரசர் இருவரும் சிரித்து விட்டனர். விஜயவர்தனர் சொன்னார், தெனாலியின் சாதுர்யம் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டுள்ளேனே தவிர, இப்போது தான் நேரில் பார்த்தேன்... என்று புகழ்ந்தார்.

இன்றைய செய்திகள்

14.03. 2023

* தமிழகத்தில் இன்ஃப்ளூயன்சா தொற்று பரவலை தடுக்க தொடர்ந்து காயச்சல் முகாம் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

* புதுச்சேரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

* இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் வரை இன்ஃப்ளூயன்சா எச்1என்1 பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

* தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இந்த ஆவணப் படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

* நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு - இஸ்ரேலில் வரலாறு காணாத போராட்டம்.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

* புரோ ஆக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவை அடக்கி இந்திய அணி 'திரில்' வெற்றி.

Today's Headlines

* Medical Minister M. Subramanian has said that fever camps will be conducted continuously to prevent the spread of influenza infection in Tamil Nadu.

 * The Tamil Nadu government has issued an order banning Kuravan and Kurathi games during festivals.

 * Puducherry Chief Minister Rangaswamy has announced that the CBSE syllabus will be introduced from 6th to 12th standard in government schools to improve the educational quality of Puducherry students.

* Till last February, Tamil Nadu has been at the top of the states with the highest number of cases of H1N1 influenza in India.

 * According to the Met Office, there is a chance of rain at a couple of places in Tamil Nadu and Puducherry for 3 days from tomorrow.

*  India's documentary 'The Elephant Whisperers' has won an Oscar in the Best Documentary Short Film category at the 95th Academy Awards ceremony.  It is noteworthy that this documentary was shot in Tamil Nadu.

 * Protest against the decision to reduce the power of the judiciary - an unprecedented protest in Israel.

*  India has qualified for the final of the World Test Championship series.

 * The Indian team defeated Australia in the Pro Hockey League with a 'thrilling' win.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers