Zeal study official:
Thursday, February 9, 2023
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: அடக்கம் உடைமை
குறள் : 121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
பொருள்:
அடக்கம் ஒருவனுக்கு அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.
பழமொழி :
Doubt is the key of knowledge.
ஐயமே அறிவின் திறவுகோல்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன்.
2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்
பொன்மொழி :
அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அறிய மனமில்லாமை.
பொது அறிவு :
1. பாலைவனங்கள் இல்லாத கண்டம் எது?
ஐரோப்பா .
2.திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
ஜி .யு. போப்.

English words & meanings :
ant that is friendly and lovely - coolant
ஆரோக்ய வாழ்வு :
குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.
NMMS Q
வைரஸ் என்னும் சொல் எந்த மொழி சொல்?
விடை: இலத்தின்
நீதிக்கதை
தைரியம்
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தை திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர்.
திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது. வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது. பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரசசபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது.
ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே. அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக்காரனை விடுவித்தான். தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.
இன்றைய செய்திகள்
09.02.2023
* விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழைப் பாலம்: தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி.
* அறிவுரையை மீறி ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் மீது புகார் அளிக்க நடத்துநர்களுக்கு உத்தரவு.
* திருப்பரங்குன்றம் மலைக்குகையில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆர்வலர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
* கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிப்போர் ஆன்லைனில் பெறும் நில பதிவேடு நகலில் சான்றொப்பம் கேட்க கூடாது: நில அளவை ஆணையர் அறிவுறுத்தல்.
* உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த தமிழகத்தில் 10 உள்ளிட்ட 24 மாநிலங்களில் 111 நீர்வழிப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று ஜல்சக்தித் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
* புவி கண்காணிப்புக்கான ‘இஒஎஸ்-07' உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள், சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்படுகின்றன.
* உலகிலேயே முதல்முறையாக உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோப்பம் பிடிக்கும் அல்லது நுகரும் ரோபோக்களை இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
* டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
* தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ்: தொடக்க ஆட்டத்தில் தமிழக பெண்கள் அணி வெற்றி.
Today's Headlines
* Fiberglass Bridge between Vivekananda Rock - Tiruvalluvar Statue: Tamil Nadu Coastal Regulatory Zonal Authority approval.
* Conductors are instructed to file complaints against students who defy advice and travel dangerously.
* An ancient Tamil inscription dating back to around 2,200 years ago has been discovered in a cave in Tiruparangundram. It made surprised archeology enthusiasts.
* Applicants for building permission should not ask for attestation in a copy of the Land Registry received online: Commissioner of Land Survey Instructions.
* 111 waterways have been notified in 24 states including 10 in Tamil Nadu to improve domestic waterway transport, said the Minister of State for Water Resources.
* 3 satellites including 'EOS-07' for earth observation are being launched today by a small SSLV rocket.
* For the first time in the world, scientists from Israel have developed robots that can sniff or eat using Bio-technology.
* Ashwin is the third player to score 3000 runs and 450 wickets in Test cricket.
* National Junior Table Tennis: Tamil Nadu women's team won the opening match.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment