Zeal study official:
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: அடக்கம் உடைமை
குறள் எண் : 129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
பொருள்:
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது
பழமொழி :
A man is known by the company he keeps.
நண்பர்களை வைத்தே நம்மை எடை போடுவர்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பொய் உரக்க குரல் கொடுத்தாலும் உண்மை பேசுவேன்.
2. ஏனென்றால் உண்மை ஒரு போதும் உறங்காது ஊமையாகவும் இருக்காது
பொன்மொழி :
மனிதன் செல்வம் ஈட்டும் இயந்திரமாக அன்றி, சமுதாய முன்னேற்றத்தின் கருவியாகவும் இருக்க வேண்டும்.
பொது அறிவு :
1. நமது அரசு சின்னத்தில் உள்ள வாசகம் என்ன?
வாய்மையே வெல்லும்.
2. பிரமிடுகளின் பிறப்பிடம் எது?
எகிப்து.
English words & meanings :
fast ant - instant
ஆரோக்ய வாழ்வு :
பதப்படுத்தப்படாத உணவு
குளிர்பானம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரி அதிகமாக இருப்பதால் அவற்றை உண்பவர்களுக்கு உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பச்சை உணவுகள் பதப்படுத்தப்படாதவை என்பதால் அவற்றால் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.
NMMS Q
கரோலஸ் லின்னேயஸின் வகைப்பாட்டு முறை எவ்வாறு அறியப்படுகிறது.
விடை :செயற்கை வகைப்பாட்டு முறை
பிப்ரவரி 21
பன்னாட்டுத் தாய்மொழி நாள்

பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.[1]
வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 அன்று பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெசுக்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" (“Mother tongues and books - including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது
நீதிக்கதை
மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!
ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.
விரல்களால் மணல் இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்! என்று எழுதினான். மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.
நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன். உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான். அங்கு ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி, இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுத ஆரம்பித்தான்.
இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்... நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏன் இப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா? என்றான். அதற்கு நண்பன், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்! என்று பதில் கூறினார்
இன்றைய செய்திகள்
21.02.2023
* விற்பனை அதிகரிப்பால் தினமும் 60 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் வசதி: உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ஆவின் திட்டம்.
* சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகாலில் கழிவுநீரை விட்ட 1470 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
* சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்டவற்றால் சேதமடைந்த 1,860 கி.மீ. நீள சாலைகளை ரூ.1,171 கோடியில் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
* நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்.
* மீண்டும் பணிக்கு வருகிறது போர்க் கப்பல் விக்ரமாதித்யா.
* உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பைடன் திடீர் பயணம்: ரஷ்யாவுக்கு பகிரங்க மிரட்டல்.
* எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜப்பான் கடலில் வடகொரியா ஏவுகணை பரிசோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
* டிஎன்பிஎல் வீரர்களுக்கான ஏலம்: மகாபலிபுரத்தில் 2 நாட்கள் நடைபெறும்.
* ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிரா அணி 'சாம்பியன்'.
* உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் வருண் தோமர் வெண்கல பதக்கம் வென்று பெருமை சேர்த்து உள்ளார்.
Today's Headlines
* 60 lakh liter milk processing facility per day due to increase in sales: Aain plans to upgrade infrastructure.
* 1470 illegal sewerage connections that discharge sewage into rainwater drains in Chennai Municipal Corporation areas have been disconnected.
* 1,860 km damaged due to rainwater drainage project, underground sewerage project in Chennai city. The municipal administration is taking steps to repair long roads at a cost of Rs.1,171 crore.
* Tamil Nadu government filed a fresh petition in Supreme Court seeking exemption from NEET examination.
* Warship Vikramaditya returns to duty.
* US President Biden's surprise visit to Ukraine: a public threat to Russia.
* South Korea says North Korea has conducted a missile test in the Sea of Japan amid protests.
* TNPL Players Auction to be held for 2 days at Mahabalipuram.
* Ranji Cup Cricket: Saurashtra Team won the Championship.
* India's Varun Tomar has added pride by winning the bronze medal in the Shooting World Cup.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment