Skip to main content

Zeal study official: பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.02.2023

 Zeal study official:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.02.2023


  திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: அடக்கம் உடைமை


குறள் : 124


நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.


பொருள்:

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.


பழமொழி :

Many hands make light work. 

பல கரங்கள் பணியை இலகுவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.

 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது நடத்தையிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயர முடியும்.

பொது அறிவு :

1. யாருடைய பிறந்த தினம் வன்முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது ?

 ராஜீவ் காந்தியின் பிறந்த தினம் . 

 2. அகச் சிவப்புக் கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கும் படலம் எது? 

 ஓசோன் படலம்.

English words & meanings :

ant that lives in a flat - occup-ant, occupant

ஆரோக்ய வாழ்வு :

பாதவெடிப்பு அசௌகரியம் தருவதுடன், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. பாதவெடிப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. அவற்றை கீழ்வருமாறு காணலாம்:


ஈரப்பதம் குறைவு

வைட்டமின், மினரல் சத்துக்கள் குறைபாடு

நீண்ட நேரம் நிற்பது

வயது கூடுதல்

சொறிநோய், தைராய்டு, நீரிழிவு

சரியான காலணி அணியாதது

மரபியல்

உடற்பருமன்

NMMS Q

கனிகள் உருவாகாத தாவர வகை


விடை: ஜிம்னோஸ்பெர்ம்கள்


நீதிக்கதை


அற்புதமான சிற்பி


ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா? அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா? என்று கேட்டார். தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.


பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டானர். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.


அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு சிற்பி, வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார். ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது! என்றார். தேவையற்ற சிந்தனைகளை நீக்கினால், பிறர் போற்றும்படியான வாழ்வை பெற முடியும்.


இன்றைய செய்திகள்

14.02.2023


* நெசவாளர்களுக்கான முத்ரா கடன் திட்டம்: தேசிய அளவில் 6 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம்.


* பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு மாரத்தான்: ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


* சானமாவு பகுதியில் தனித்தனி குழுக்களாக சுற்றி வந்த 80 யானைகளில் 70 யானைகளை ஒருங்கிணைத்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வனத்துறையினர் இடம் பெயரச் செய்தனர். மேலும், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


* சிக்கிமில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.


* இந்திய நீதித் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி தெரிவித்துள்ளார்.


* துருக்கி - சிரிய பூகம்பத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கலாம் என அஞ்சப்படுவதாக ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


* அமெரிக்க வான்வெளியில் மீண்டும் ஒரு மர்மப் பொருள் அந்நாட்டு ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இது 4வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.


* பெண்கள் பிரீமியர் லீக் தொடருக்கான லோகோவை பிசிசிஐ வெளியிட்டது.


* கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு: வாள்வீச்சு போட்டியில் தமிழக அணிக்கு 4 பதக்கம்.


* பெண்கள் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.


Today's Headlines


* MUDRA Loan Scheme for Weavers: Tamil Nadu tops  nationally for 6 years.


* Awareness marathon across Tamil Nadu urging to strengthen public transport: Thousands of students participated.


 * Out of the 80 elephants that were roaming in separate groups in the Sanamavu area, the forest department united 70 elephants and moved them to the Dhenkanikottai forest area.  Also, they are engaged in continuous monitoring.


 * Earthquake in Sikkim - registered as 4.3 on the Richter scale.


* Supreme Court Justice Hima Kohli has said that the use of Artificial Intelligence (AI) technology in the Indian judiciary will be a turning point.


* The death toll from the Turkey-Syria earthquake is feared to be close to 50,000, said by the United Nations World Health Organization .


* Another mysterious object has been shot down by the US military.  It is noteworthy that this is the 4th incident in a week.


 * BCCI unveils logo for Women's Premier League


 * Kelo India Youth Games: Tamil Nadu team won 4 medals in fencing competition.


 * Women's T20 World Cup: India beat Pakistan and won the match

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

6th English - Trees LO Based Lesson Plan By Zeal Study

Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b) question bank collections .

7th English - The Wind On Haunted Hill LO Based Lesson Plan By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers