எதிர்கொள்ளும் தேர்வு. Exam tips,competitive exams, எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் பிரம்மாண்ட வெற்றி பெற என்ன தேவை??
எதிர்கொள்ளும் தேர்வு எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் பிரம்மாண்ட வெற்றி பெற என்ன தேவை??
🟥 “ஐயோ தேர்வா” என்ற மனநிலையிலிருந்து, “தேர்வா - ஒரு கை பார்த்துவிடலாமே” என்ற மனநிலை
🟥 தேர்வு நெருங்கும் போது பதறிப் படிக்காமல், தினந்தோறும் படிக்கும் பழக்கம்.
🟥 லட்சம் பேர் எழுதும் தேர்வில் நான் எப்படி தேர்வாக முடியும் என்று எண்ணாமல், நான் நிச்சயமாக தேர்வாவேன் என்ற மோட்டிவேஷன்.
🟥 படிக்கும் நேரத்தில் மொபைல் போன், கேம்ஸ், யூடுப் போன்ற டிஸ்டராக்ஷன்களை பார்த்துவிட்டு, படிப்பே கஷ்டம் என்று அதன்மேல் பழி போடுபவர் பலர். நாம் டிஸ்ட்ரக்ஷனுக்கு அடிமையாகாமல், அவற்றை தந்திரமாக எப்படி கையாளுவது என்ற புரிந்துணர்வு!
🟥 உடலில் உள்ள தசைகளுக்கு எப்படி பயிற்சியின் மூலம் சிறப்பாக செயல்பட வைக்க முடியுமோ, மூளையும் அப்படித்தான்! மூளையின் ஞாபகத்திறனை/கவனிக்கும் திறனை அதிகரிப்பத்தின் மூலம் உங்கள் மதிப்பெண்கள் எளிதாக 30% அதிகரிக்கலாமே!
🟥 எல்லோரும் “அந்த பரீட்சைக்கு” படிக்கிறார்கள், அதனால் நானும் படிக்கிறேன் என்று படிக்காமல், தன்னைப் பற்றிய புரிந்துணர்வுடன் படிக்கும் மனமுதிர்ச்சி.
🟥 இன்றைய தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்திருக்கும் போது பழங்கால படிக்கும் வழிகள் எதற்கு? தொழில்நுட்பத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் போது கிடைக்கும் பலமடங்கு பலனை சாதாரணமானவர்கள் இழக்கலாம். சூப்பராக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதனை எப்படியாவது அடையத்தானே பார்ப்பார்கள்.
போன வருடம் ஜூன் மாசம் இந்த பயிற்சியில் பங்கேற்ற அனிதாவால் கடைசி பரிட்சையில 100/100 மதிப்பெண்கள் பெற முடிந்ததது🏆. மதன் என்னும் மாணவரால் தனக்கு மிகவும் விருப்பமான விளையாட்டிற்கு நேரம் ஒதுக்கி படிப்பிலும் முன்னேற முடிந்தது!🏆
Comments
Post a Comment