Zeal study official:
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: நடுவுநிலைமை
குறள் : 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
பொருள்:
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்
பழமொழி :
Failures are stepping stones to success.
தோல்வியே வெற்றிக்கு முதல் படி.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம்.
2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.
பொன்மொழி :
உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவு செய்கிறான். ஆனால், அறிவுள்ள மனிதனோ தன்னைத் திருத்திக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.
பொது அறிவு :
1. புனுகு என்னும் நறுமணம் எந்த விலங்கில் இருந்து எடுக்கப்படுகிறது ?
புனுகுப் பூனை.
2. சங்கின் இரண்டு வகை தெரியுமா?
வலம்புரி , இடம்புரி.
English words & meanings :
weather - climate. noun. வானிலை. பெயர்ச் சொல். whether - if. expressing a doubt . conjunction. இரண்டில் ஒன்று. இணைப்புச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
சின்ன வெங்காயத்தில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து நம் செல்களை பாதுகாக்கிறது. உடலில் ஏற்படும் அழற்சி க்கு எதிராக செயல்படுகிறது.
இதில் குவர்செடின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. இதனால் இதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது.
நீதிக்கதை
ஓநாயும் ஆடும்
ஒரு காட்டில் ஒரு ஓநாயும். ஒரு வெள்ளாடும் இருந்தது. கொழுத்த அந்த ஆட்டின் மீது ஓநாய்க்கு எப்போதும் ஒரு கண். அதை அடித்து சாப்பிடவேண்டும் என்று. அதற்காக பலமுறை ஓநாய் அந்த ஆட்டை சண்டைக்கு இழுத்தது. ஓநாயின் குணம் அறிந்த ஆடு ஓநாயிடம் இருந்து தன் புத்திசாலித்தனத்தால் தப்பிவந்தது.
ஒரு சமயம் ஒரு நதியின் நடுவில் குறுகலான ஒரு பாலத்தில் ஆடு சென்றது. அப்பாலம் ஒரு நபர் சென்றால் ஒருவர் எதிரே வர முடியாத அளவு குறுகலானது. பாலத்தில் ஆடு வருவதைக்கண்டு, பெரும்பகுதியை ஆடு கடந்ததும், ஓநாய் அந்த முனையிலிருந்து ஆட்டை நோக்கி வந்தது. இப்போது ஆடும், ஓநாயும் எதிரெதிரே வந்துவிட்டன.
ஆடு ஓநாயிடம் நான் கிட்டத்தட்ட பாலத்தைக் கடந்துவிட்டேன். சற்று நீங்கள் பின் சென்று எனக்கு இடம் கொடுத்தால் நான் சென்றுவிடுவேன் என்றது. இதுதான் சரியான தருணம் என எண்ணி ஓநாய் ஆட்டை வீண் சண்டைக்கு இழுத்தது. நான் முட்டாள்களுக்கு இடம் தர மாட்டேன். நீயே எனக்கு இடம் கொடுத்துப் பின்னால் போ என்றது.
ஓநாயின் நோக்கம் அறிந்த ஆடு, நான் முட்டாள்களுக்கு முதல் இடம் தருவேன் என தான் பின்னால் சென்று ஓநாய் பாலத்தை கடக்கச் செய்தது. ஓநாயும் தன் செயல் இம்முறையும் பலிக்கவில்லையே என சென்றுவிட்டது.
ஆடு தன் புத்திசாலித்தனத்தால் ஓநாயை முட்டாள் என மறைமுகமாக சொன்னதுடன், கெட்டவர்களுடன் வீண்வாதம் கூடாது என்று உணர்ந்ததால் உயிர் பிழைத்தது
இன்றைய செய்திகள்
31.01.2023
* ஜி20 கல்வி செயற்குழு மாநாடு: சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை.
* இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும்போது போலி ரசீது வழங்கப்படுவதைத் தடுக்கஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
* வானிலை முன்னறிவிப்பு: பிப்ரவரி 1-ல் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
* பனிப்பொழிவு காரணமாக சுவிட்சர்லாந்து போல் காட்சியளிக்கும் அருணாச்சலப் பிரதேசம்.
* சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையில் 135 கி.மீ.தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.
* ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
* உலக கோப்பை ஹாக்கி போட்டி: பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்றது.
Today's Headlines
* Due to G20 Executive committee Conference , Drones were banned for 3 days in Chennai
* The Electricity Board has introduced a uniform receipt system to prevent fake receipts from being issued while paying electricity bill online.
* Weather forecast: Heavy rain likely in 11 districts of Tamil Nadu on February 1.
* Arunachal Pradesh looks like Switzerland due to snowfall.
* To overcome the threat of China, construction of a New High Way of length 135 Km has been started in the Ladakh border
* A prize money of Rs 5 crore has been announced for the Indian women's team who won the title of champion in the Junior 20 Over Cricket World Cup.
* Hockey World Cup: Germany win the World Cup for the 3Rd time after defeating Belgium.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment