Zeal study official:
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: இனியவை கூறல்
குறள் : 97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
பொருள்:
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கு இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.
பழமொழி :
Labour conquers everything.
உழைப்பு அனைத்தையும் வெல்லும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.
2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.
பொன்மொழி :
பிரார்த்தனை என்பது நீங்கள் கடவுளிடம் பேசுவது என்றால், உள்ளுணர்வு என்பது கடவுள் உங்களிடம் பேசுவது. --வெய்ன் டயர்
பொது அறிவு :
1. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு எது?
ஜெர்மனி .
2. மனோன்மணியம் நூலை எழுதியவர் யார்?
மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
English words & meanings :
flew - move through the air using wings: verb .பறந்தது. வினைச் சொல். flu - fever with cold. noun. சளிக் காய்ச்சல். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து 2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்கவும்.
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு 150மி லி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.
NMMS Q
தேசிய கீதத்தை பாடும், இசைக்கும் கால நேரம் ____வினாடிகள் ஆகும்.
விடை: 52
ஜனவரி 03
சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்தநாள்
சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.[1][2]
சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது
நீதிக்கதை
வாங்கினால்தானே அது என்னுடையது
ஒரு அலுவலகத்தில் பணியாற்றும் மேலதிகாரி, எப்போதும் சக ஊழியர்களைத் திட்டிக் கொண்டே இருப்பார். எப்பொழுதும் எரிந்து விழுந்து கொண்டும், வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டும் இருப்பார். இதனால் அவருடன் பணியாற்றும் ஊழியர்கள் எப்போதும் மன வறுத்தத்துடன் இருப்பார்கள்.
இதுபோன்ற சூழ்நிலையில், ஒருவர் புதிதாக பணிக்கு சேர்ந்தார். அவரையும் அந்த மேலதிகாரி திட்டித் தீர்த்தார். ஆனால், புதிய இளைஞனின் முகத்திலோ எந்த பதற்றமும் இல்லை, கவலையும் இல்லை. எப்போதும் போல தனது வேலையை அவரே செய்து வந்தார்.
இதனைக் கண்டதும் மற்ற ஊழியர்களுக்கு மிகவும் ஆச்சரியம். என்னப்பா அவர் உன்னை அப்படி திட்டுகிறார். ஆனால் அதை நீ கண்டுகொண்டதாகக் கூட தெரியவில்லையே. எப்போதும் முகத்தை சிரித்தபடியே வைத்துக் கொண்டு வேலை செய்ய உன்னால் மட்டும் எப்படி முடிகிறது என்று கேட்டார்கள்.
இதற்கு அந்த ஊழியர் அளித்த பதில், அந்தத் தெருவின் முனையில் இரு காதலர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தை சுட்டிக் காண்பித்து அங்கே பாருங்கள்! புரியும் என்றார்.
அங்கே பார்த்தும் புரியாத விழிகளோடு புரியவில்லையே! எனக் குழப்பமாகச் சொன்ன ஊழியர்களிடம் கேட்டார். அந்தக் காதலன் தன் காதலியிடம் ஏதோ ஒன்றைக் கொடுக்க முயற்சி செய்கின்றான், தெரிகின்றதா? ஏதோ பரிசுப் பொருள் போல் தெரிகிறது. ஏதோ கோபம் காரணமாக காதலன் எவ்வளவுதான் கொடுக்க முயற்சி செய்தாலும் காதலி அந்தப் பரிசுப்பொருளைப் பெற்றுக்கொள்ளவேயில்லை.
புதிய இளைஞன் கூறினான், அந்தப் பெண் அந்தப் பரிசை வாங்காதவரை அந்தப் பரிசுப்பொருள் யாருக்குச் சொந்தம்? நிச்சயம் அது அந்தக் காதலனுக்குத்தான் சொந்தம் என்று சொன்னார்கள் மற்றவர்கள். அப்போது... இந்தப் பதிலைக் கேட்டு சிரித்துக்கொண்டே சொன்னார்.
அதேதான் என் கதையிலும்... மேலதிகாரி தனது மூர்க்கத்தனத்தையும், கோபத்தையும் என்னிடம் தருவதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நான் அதை வாங்கிக் கொள்ளவேயில்லை. அதனால்தான் நான் அவர் என்னிடம் காட்டிய கோபத்தை நான் வாங்கிக்கொள்ளவில்லை என்றார். இதைக் கேட்ட மற்ற ஊழியர்கள் திகைத்து நின்றனர்.
இன்றைய செய்திகள்
03.01.2023
* தமிழகத்தில் இதுவரை பி.எப்-7 வகை கரோனா பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
* காலநிலை மாற்ற திட்டங்களுக்கு ரூ.1000 கோடி நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதியை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.
* சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 6.09 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் தொடங்கி கடந்த 7 ஆண்டுகளில் 2022-ம் ஆண்டில்தான் அதிக பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* தமிழக சுகாதாரத் துறையின் 'நலம் 365' யூடியூப் சேனல் தொடக்கம்: மாதம் ஒருமுறை மக்களுடன் கலந்துரையாடல் - அமைச்சர் தகவல்.
* அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 442 பேருந்துகள் விரைவில் கொள்முதல்: டெண்டருக்கு அவகாசம் நீட்டிப்பு.
* இந்தியாவில் வேலையின்மை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது என்று இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
* இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவு தலைவராக ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா பொறுப்பேற்பு.
* இந்தியாவுடனான உறவு மேம்பட சீனா விரும்புகிறது என அதன் புதிய வெளியுறவு அமைச்சர் கீன் கேங் தெரிவித்துள்ளார்.
* 2023 உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான காலம்: சர்வதேச நிதியம் கணிப்பு.
* கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயதான செஸ் வீரர் கோஸ்தாவ் சட்டர்ஜி இந்தியாவின் 78-வது கிராண்ட்மாஸ்டர் ஆகியிருக்கிறார்.
* பெண்கள் பல்கலைக்கழக கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். அணி 'சாம்பியன்'.
Today's Headlines
* Minister M. Subramanian has said that there is no PF-7 type of corona infection in Tamil Nadu so far.
* The Tamil Nadu Government has created the Tamil Nadu Climate Change Fund to raise funds of Rs.1000 crore for climate change projects.
* In the year 2022 alone, 6.09 crore trips have been made in the Chennai Metro train. In the last 7 years since the start of Chennai Metro Rail, the most trips have been made in 2022.
* Launch of Tamil Nadu Health Department's 'Nalam 365' YouTube Channel: Once a month discussion with people - Minister informs.
* Soon procurement of 442 buses for state transport corporations: extension of time for tender.
* Unemployment in India has reached a 16-month high, according to the India Economic Observatory.
* Air Marshal Pankaj Mohan Sinha takes charge as Chief of the Western Wing of the Indian Air Force.
* China wants to improve relations with India, its new foreign minister Qin Gang has said.
* 2023 is a tough time for the global economy: International Monetary Fund forecast.
* 19-year-old chess player Kostav Chatterjee from Kolkata has become India's 78th Grandmaster.
* Women's Varsity Volleyball Tournament: SRM Team 'Champion'.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment