Skip to main content

மன அழுத்ததங்களுக்கான காரணங்கள்*_

 _*மன அழுத்ததங்களுக்கான காரணங்கள்*_


_*1.அதிகப்படியான யோசனை.*_


_*எல்லாத்துக்கும் யோசனை. ஏன் ஏன் ஏன் என்ற கேள்வி.*_

_*ஒன்று நடந்தால் ஏன் இப்படி நடக்கவில்லை என்று கேள்வி.*_

_*அப்படி நடந்தால் ஏன் இது இப்படி நடக்கவில்லை என்று அதிருப்தி.*_ 


_*2. தாமதமான தூக்கம்.*_ 


_*எதையாவது வலுக்கட்டாயமாக இழுத்து வந்து*_ _*அதை கொன்று தன்னுடன்*_ _*வைத்துக்கொண்டு  தூக்கத்தை*_ _*தள்ளி வைப்பது.*_

*இல்லை, எனக்கு _*சீக்கிரம் தூக்கம்*_ _*வராது என்ற தனக்கு தானே கொள்கை.*_ _*வராது என்பதனை வர வை. அதானே உன் வேலை.*_ 


_*3.கடந்த காலத்தை பிடித்து வைத்திருத்தல்.*_ 


_*இறந்த காலம் இறந்துவிட்டது.*_ _*எதிர்காலம் பிறக்கவேயில்லை.*_

_*நிகழ்காலம் தான் உண்மை.*_ _*இப்போது இருப்பது தான் நிஜம்.*_

_*மற்றதெல்லாம் நிழல்.*_  _*உருண்டு பிரண்டாலும் கடந்த காலங்கள் உருப்பெற்று வராது.*_ _*அழிந்துவிட்டது.*_ 


_*4.விஷயங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வது.*_


_*அவர் எனக்காக தான் அதை சொன்னார்.*_

_*அவள் என்னைத்தான் பேசுகிறாள்.*_

_*இப்படி அத்தனையும் உங்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வது.*_

_*முதுகுக்கு பின் பேசுபவர்களால் உங்களை துன்புறுத்த முடியாது.*_

_*ஏனெனில் அவர்கள் அங்கு மட்டும்தான் பேசுவார்கள்.*_ 


_*5. எல்லா நேரத்திலும் புகார்.*_ 


_*அனைத்துக்கும் கோபம் கொள்வது.*_

_*சிறு ஏமாற்றத்தை கூட தாங்காமல் அவரால் அவளால் அவர்களால் தான் என்று குற்றம்*_ _*சொல்வது.*_

_*தன் மீதான பிழையை மறந்து அருகில் இருப்பவரிடம் பழியை சுமத்துவது.*_ 


_*6.அனைவரையும் மகிழ்விக்க முயற்சிக்கிறேன்.*_


_*கடவுளால் கூட அனைவரையும் மகிழ்விக்க முடியாது.*_

_*ஒருவராவது உங்களை எதிர்த்தால் தான் குறை கூறினால் தான் வளரமுடியும்.*_ _*எவரையும் உங்களால் திருப்தி படுத்த முடியவே முடியாது.*_ 


_*இந்த ஆறு‌காரணங்களால் தான் மன அழுத்தம் உண்டாகிறது.*_

_*இதனை தடுக்க _*வழிகள் _*இல்லவே _*இல்லையா?*_

_*இருக்கிறது.*_ 


_*வெளியிலிருந்து உங்களை யாராலும் அழுத்தத்தை தர முடியாது.*_

_*அப்படி தந்தால் அனுமதிக்காதீர்கள்.*_

_*உங்களை கேட்டு தான் எதுவும் உள் வரவேண்டும்.*_

_*வெளியில் செல்ல வேண்டும்.*_

_*நீங்கள் எஜமானர்களாக இருங்கள்.*_ 


_*மனங்களை ஆளுங்கள்.*_

_*மனிதர்களை அல்ல...*_

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers