ஐஐடி வழிகாட்டி: பி.டெக்.கில் எந்தப் பிரிவை தேர்ந்தெடுக்கலாம்?
ப்ளஸ் 2 முடித்தவர்கள் ஐ.ஐ.டி.யில் சேர்வதற்கு வசதியாக அங்கு என்னென்ன கல்விப் பிரிவுகள் உள்ளன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.
ஐ.ஐ.டி.யின் மிகப் பரவலான பட்டப் படிப்பு பி.டெக். (B.Tech.). இதில், என்னென்ன பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் என்பதையும் பார்த்துவிடுவோம்.
1. விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering),
2. வேதியியல் பொறியியல் (Chemical Engineering),
3. சிவில்/கட்டுமான பொறியியல் (Civil Engineering),
4. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (Computer Science & Engineering),
5. மின்னணு பொறியியல் (Electronic Engineering),
6. பொறியியல் சார்ந்த இயற்பியல் (Engineering Physics),
7. இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering),
8. உலோகம் மற்றும் பொருள் பொறியியல் (Metallurgical & Material Engineering),
9. கப்பல் கட்டுமானம் மற்றும் கடல் சார்ந்த பொறியியல் (Naval Architecture & Ocean Engineering).
இவை பெரும்பாலான ஐ.ஐ.டி.க்களில் உள்ளன.
இவை தவிர வேறு சில பிரிவுகளும்கூட சில ஐ.ஐ.டி.க்களில் உண்டு.
பி.டெக்.கில் சேர நீங்கள் 3 கட்டங்களைக் கடக்க வேண்டும்:
முதல் கட்டம் உங்கள் ப்ளஸ் 2 மதிப்பெண்கள்.
இரண்டாவது JEE (Mains) தேர்வு. இவை இரண்டையும் வெற்றிகரமாக முடித்தால், JEE (Advanced) தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள்.
(இனி JEE (Mains) தேர்வை நாம் நுழைவுத் தேர்வு என்றும், JEE (Advanced) தேர்வை இறுதித் தேர்வு என்றும் குறிப்பிடலாம்).
பி.டெக்.கில் பல பிரிவுகள் உள்ளதை பார்த்தோம். இறுதித் தேர்வை வெற்றிகரமாக முடித்தவுடன் உங்கள் விருப்பத்துக்கேற்ப இந்தப் பிரிவுகளை நீங்கள் பட்டி யலிட வேண்டும். அதாவது உங்கள் முதல் சாய்ஸ் என்ன பிரிவு, இரண்டாவது எந்தப் பிரிவு என்பது போல.
இந்திய அளவில் (மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு) தரப்பட்டியல் (AIR) ஒன்றை வெளியிடுவார்கள்.
அதில் முன்னணியில் இருப்ப வர்களுக்கு அவர்களது முதல் விருப்பப்பிரிவே அளிக்கப்படும். கீழே செல்லச் செல்ல அடுத்தடுத்த சாய்ஸ்கள் கிடைக்கும்.
பி.டெக்.குக்கு பதிலாக ஐந்தாண்டு இரட்டைப் பட்டத்துக்கான கல்வியை நீங்கள் தேர்ந் தெடுக்கலாம். இதை Dual Degree என்பார்கள். இதற்கு அர்த்தம் நீங்கள் இரண்டு வெவ்வேறு கல்விப் பிரிவுகளை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதில்லை. ஒரே கல்விப் பிரிவில் நீங்கள் பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பு (B.Tech. & M.Tech.) ஆகிய இரண்டையும் இந்த ஐந்து வருடங்களில் படிக்கலாம் என்று அர்த்தம்.
B.S. மற்றும் M.S. (Bachelor of Science & Master of Science) ஆகிய இரண்டுக்கும் சேர்த்தும் Dual Degree வழங்கப்படுகிறது. இதற்கும் அதே நுழைவுத் தேர்வு. இதில் Science என்பதில் உள்ள பல்வேறு பிரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
இயற்பியல், கணிதம், அறிவியல்முறைக் கணக் கிடுதல் (scientific computing), பொறியியல் சார்ந்த இயற்பியல் போன்றவை சில.
இதுபோல இரட்டைப் பட்டங்கள் கொண்ட படிப்பில் ஒரு வசதி உண்டு. முதுகலைப் படிப்பை ஐ.ஐ.டி.யில் பின்னர் எழுத தனியாக ஒரு நுழைவுத் தேர்வை எழுத வேண்டாம். என்றாலும் பலரும் பி.டெக்.கிற்கே முன்னுரிமை தருகிறார்கள். முதுநிலைப்படிப்பை வெளிநாடுகளில் படிக்கலாமே என்ற எண்ணம் ஒரு காரணம். பி.டெக். முடித்தவுடன் வேலைக்குச் சேர்ந்துவிடலாமே என்பது மற்றொரு காரணம்.
உலகின் மிகக் கஷ்டமான பொறியியல் தேர்வுகளில் ஒன்று என்று கூறப்படுகிறது ஐ.ஐ.டி.நுழைவுத் தேர்வு.
“ஐயோ அப்படியா?’’ என்று பின்வாங்கத் தோன்றுகிறதா? நுழைவுத்தேர்வு எழுத யாராவது பயிற்சி கொடுப்பார்களா என்ற பரிதவிப்பு உண்டாகிறதா? மேற்படி கேள்விகளுக்கு நம்பிக்கை யையே பதிலாக தருகிறோம்.
நன்றி: நந்தன் நலகேனி, infosys, co-founder
Comments
Post a Comment